வெள்ளி, 5 பிப்ரவரி, 2021

 ஜெயபாண்டியன் ஐயா அவர்களுக்கு.

------------------------------------------------------- 

தமிழுக்குப் புத்திலக்கணம் தேவையில்லை 

என்ற கருத்தைக் கொண்டிருப்பதற்கு 

தங்களுக்கு முழுஉரிமை உண்டு.

ஆனால் அக்கருத்து அறிவியலுக்கு 

எதிரானது.


தொல்காப்பியமே போதும் என்று 

தாங்கள் சொல்வது எனக்கு 

வியப்பைத் தருகிறது. தொல்காப்பியமே 

போதும் என்றால் பவணந்தி முனிவர் 

ஏன் நன்னூலை இயற்றினார்?


பவணந்தி முனிவர் இயற்றினாலும் 

தமிழ் கூறும் நல்லுலகம் அதை ஏன் 

ஏற்றுக் கொண்டது? நான் படித்தபோதும்

சரி, இன்றும் சரி, நன்னூல் 

இலக்கணம்தானே பள்ளிகளில் 

கற்பிக்கப் படுகிறது?


எங்காவது பள்ளி மாணவர்களுக்கு 

(12 வகுப்பு வரை) தொல்காப்பியம் 

கூறுகிறபடியான இலக்கணம் 

கற்றுத் தரப் படுகிறதா? இல்லையே!


எனவே தமிழுக்குப் புத்திலக்கணம் தேவை.  

   


---------------------------------------------------------------------------
திரு ஜெயபாண்டியன் அவர்களின் 
கருத்தும் அதையொட்டி எழுந்த 
வேறு கருத்துக்களும் குறித்து....
------------------------------------------------ 
துளி கூட செயற்கைத் தன்மை இல்லாமல் 
முழுவதும் இயற்கையாக இயங்குகின்ற
மொழி தமிழ் ஆகும். இதன் பொருள் 
தமிழானது முற்றிலும் மக்கள் மொழி 
என்பதாகும்.

மக்கள் மொழி என்கிறபோது அது 
எங்கும் எப்போதும் உயிர்த்துடிப்புடன் 
இயங்க வல்லது, இயங்குவது என்று 
பொருள். இதன் மறுபக்கம் என்னவெனில்,
நூறு விழுக்காடும் மக்கள் மொழியாக 
இருக்கும் ஒரு மொழிக்கு முழுமையான 
இலக்கணம் வகுப்பது இயலாத ஒன்று 
என்பதே. 

அதாவது அகிலம் என்ற சொல்லை 
எப்படி ஒலிப்பது என்பதற்கு இலக்கணம் 
செய்ய இயலாது என்பதைக் கருத்தில் 
கொள்ள வேண்டும்.இங்கு இயலாது 
என்ற சொல்லில் உள்ள இயலாமை என்பது 
மொழியின் கையாலாகாத் தனத்தையோ 
அல்லது இலக்கண ஆசிரியனின் 
கையாலகாத் தனத்தையோ குறிப்பதாகாது.
மாறாக, தேவையற்றது என்பதன் பாற்பட்ட 
இயலாமை ஆகும்.

அகிலம் அகிலா என்ற சொற்களை 
நெல்லை மாவட்டம் வீரவநல்லூரில்
Ahilam, Ahila என்று (h) உச்சரிக்கின்றனர்.

அதே நேரத்தில் இச்சொற்களை 
காஞ்சிபுரத்தில் அல்லது செங்கல்பட்டில் 
Akilam, Akila என்று உச்சரிக்கின்றனர்.
சென்னையில் Agilam, Agila என்று 
உச்சரிக்கின்றனர்.   

வீரவநல்லூரில் உச்சரிப்பது மட்டுமே 
சரியானது என்பதால் மற்ற ஊர்களில் 
உள்ளவனின் நாக்கை அறுக்க முடியாது.

கவனம், கவனிப்பு ஆகிய சொற்களைப் 
பொறுத்தமட்டில், நெல்லை மாவட்டம் 
வீரவநல்லூரில் Kavanam, Kavanippu என்றே 
உச்சரிப்பார்கள். மறைந்த கலைஞர் 
கருணாநிதி அவர்கள் இதை Gavanam 
என்றே உச்சரிப்பார்.பலமுறை Gavanam 
என்ற உச்சரிப்பைக் கேட்டு எரிச்சல் 
அடைந்திருக்கிறேன்.  

தாவணி என்ற சொல்லை வீரவநல்லூரில் 
1970களில் Thaavani என்று (Tha) உச்சரித்தார்கள்.  
இன்று திருநெல்வேலியிலேயே Dhavani என்று 
(dha) உச்சரிக்கக் கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். 

இன்பம் துன்பம் என்ற சொற்களை 
திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூரில்
Inbam, Thunbam என்று (b) இன்று 
உச்சரிக்கிறார்கள். ஆனால் 
தொல்காப்பியர் காலத்திலும் அதற்கு 
முன்பும் இப்படி உச்சரித்தது இல்லை.
அக்காலத்தில் inpam, thunpam என்றே (p)
உச்சரித்தார்கள்.

தமிழில் தற்போதுள்ள இத்தகைய மூன்று 
விதமான  (மேலே கூறிய ka, ha, ga)
உச்சரிப்புகள் தொல்காப்பியர் காலத்திலும் 
அதற்கு முன்பும் இல்லை.


அக்கால மக்கள் தொகை என்பது சில 
ஆயிரங்களே; சில லட்சங்களே.அக்கால 
உற்பத்திமுறை, உற்பத்திக் கருவிகள்
ஆகியவற்றைநோக்க, அவை மிகவும் 
பின்தங்கிய நிலையில் இருந்தமை 
(ஒன்றையே நிலையுடன் ஒப்பிடுகையில்)
புலப்படும். எனவே சொற்களை 
உச்சரிப்பதில் மிகக் குறைவான 
permutationsதான் இருந்தன. இன்று 
தமிழை கோடிக்கணக்கான பேர் 
பேசுகிறார்கள். ஒரு சொல்லை 
கோடானுகோடிப்பேர் பேசும்போது 
உச்சரிப்பு வேறுபாடுகள் தோன்றுவது 
இயற்கையே.காரணம் ஏகப்பட்ட 
permutations. 

இத்தகைய வேறுபட்ட உச்சரிப்புகளுக்கு 
தொல்காப்பியத்தில் ஏன் இலக்கணம் 
இல்லை என்று கேட்பது முறையாகாது.
தொல்காப்பியர் காலத்தில் ஆகாய 
விமானம் ஏன் இல்லை என்று 
கேட்பதற்குச் சமம் அது.      

இறுதிக்குள் இறுதியான பரிசீலனையில் 
நான் வந்தடைந்த முடிவு இதுதான்.
தொல்காப்பியம் அன்றைய இலக்கணம்.
நன்னூல் பிந்திய இலக்கணம்.
இவை எதுவும் இன்றைய இலக்கணமாக 
இல்லை. எனவே தமிழுக்குப்புத்திலக்கணம் 
தேவை.           
===================================
தண்ணீர் மேட்டில் இருந்து 
பள்ளத்திற்குப் போவது போல,
மொழியானது கடுமையில் இருந்து
மென்மையை நோக்கி வருகிறது.

அகிலம் என்ற சொல் தொல்காப்பியர் 
காலத்தில் Akilam என்று (ka) உச்சரிக்கப் 
பட்டு இருந்தது. Agilam, Ahilam (ga,ha)
ஆகிய உச்சரிப்புகள் அன்று இல்லை.

Akilam என்ற உச்சரிப்பு கடுமையை
உணர்த்தும். தமிழ் உயிர்த்துடிப்பு 
நிறைந்த மொழி என்பதால், 
it is highly sensitive என்று கூறத்தக்க 
அளவில் இருந்தது. மொழியின் 
இயல்பானது கடுமையை இருந்து 
மேன்மையை நோக்கிச் செல்வதாகும்.
கடினத் தன்மையில் இருந்து எளிமையை 
நோக்கிச் செல்வதாகும்.

எனவே AKILAM என்ற (ka) கடினமான
உச்சரிப்பில் இருந்து மெல்ல மெல்ல மாறி 
AHILAM என்ற (ha) மென்மையான 
உச்சரிப்புக்கு வருகிறது.

தொல்காப்பியர் காலத்தில் அகிலம் (AKILAM)
என்ற ஒரே ஒரு உச்சரிப்புதான். காலமானது  
AHILAM என்ற மென்மையைப் படைக்கிறது.
                
 எனவே ka, ga, ha என்னும் மூன்று விதமான 
உச்சரிப்புகள் தொல்காப்பியர் காலத்தில் 
இல்லை. இன்பம் என்ற சொல் தொல்காப்பியர் 
காலத்தில் இன்று போல INBAM என்று (ba)
உச்சரிப்புடன் இல்லை. INPAM என்பதாகவே 
(pa) உச்சரிக்கப் பட்டு வந்தது.

மேலும் தொல்காப்பியர் காலத்தில் 
வேற்றுமை உருபுகளும் வேற்றுமையும் 
இன்றுபோல் இல்லை என்பதை முன்பே 
பலமுறை சுட்டிக் காட்டி இருக்கிறேன்.
புலிகொல்யானை என்று சொன்னால் 
என்ன பொருள் கொள்வது? 
புலி கொன்ற யானையா அல்லது 
புலியைக் கொன்ற யானையா?      
   

   மொழி வந்து சே 

ஜெயபாண்டியன் ஐயா அவர்களுக்கு.
------------------------------------------------------- 
தமிழுக்குப் புத்திலக்கணம் தேவையில்லை 
என்ற கருத்தைக் கொண்டிருப்பதற்கு 
தங்களுக்கு முழுஉரிமை உண்டு.
ஆனால் அக்கருத்து அறிவியலுக்கு 
எதிரானது.

தொல்காப்பியமே போதும் என்று 
தாங்கள் சொல்வது எனக்கு 
வியப்பைத் தருகிறது. தொல்காப்பியமே 
போதும் என்றால் பவணந்தி முனிவர் 
ஏன் நன்னூலை இயற்றினார்?

பவணந்தி முனிவர் இயற்றினாலும் 
தமிழ் கூறும் நல்லுலகம் அதை ஏன் 
ஏற்றுக் கொண்டது? நான் படித்தபோதும்
சரி, இன்றும் சரி, நன்னூல் 
இலக்கணம்தானே பள்ளிகளில் 
கற்பிக்கப் படுகிறது?

எங்காவது பள்ளி மாணவர்களுக்கு 
(12 வகுப்பு வரை) தொல்காப்பியம் 
கூறுகிறபடியான இலக்கணம் 
கற்றுத் தரப் படுகிறதா? இல்லையே!

எனவே தமிழுக்குப் புத்திலக்கணம் தேவை.  
   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக