செவ்வாய், 2 பிப்ரவரி, 2021

 சுதந்திரத்துக்குப் பின் வந்த நிதி அமைச்சர்களில் 

தலைசிறந்தவர் ப சிதம்பரமே! மீதி அனைவரும் 

அவரை விட மாற்றுக் குறைந்தவர்களே!

-----------------------------------------------------------------------

நியூட்டன் அறிவியல் மன்றம் 

---------------------------------------------------------------------

இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னர், இந்தியாவின் முதல் 

நிதியமைச்சராக இருந்தவர் ஆர் கே சண்முகம் செட்டியார்.

பச்சைத் தமிழர். கோயம்புத்தூரில் நிறைய ஆலைகளுக்குச் 

சொந்தக்காரர். 1947-49ல் நிதியமைச்சராக இருந்தார். 


அப்போது நேருவின் பொருளாதாரம் (Nehruvian economy) 

இந்தியாவில் செயல்பட்டது. காந்தியப் பொருளாதாரத்தை 

நேரு முற்றிலுமாக நிராகரித்து இருந்தார்..


நேருவின் பொருளாதாரம் கலப்புப் பொருளாதாரம் 

என்று சொல்லப் பட்டது. இது ஒருபோதும் சோஷலிசப் 

பொருளாதாரம் அல்ல. இது முதலாளித்துவப் 

பொருளாதாரமே. நேருவின் பொருளாதாரத்தை சோஷலிசப் 

பொருளாதாரமாகக் கருதுவது கழுதையைக் குதிரை 

என்று கருதுவதாகும்.


சுதந்திர இந்தியாவின் முதல் நிதியமைச்சர் சண்முகம் 

செட்டியார் என்பது போல, சமகால இந்தியாவின் 

(contemporary India) முதல் நிதியமைச்சர் டாக்டர் மன்மோகன்சிங் 

ஆவார்.


இந்தியாவின் பூர்ஷ்வா பொருளாதாரம் 1.0 = சண்முகம் செட்டியார் 

இந்தியாவின் பூர்ஷ்வா பொருளாதாரம் 2.0 = மன்மோகன்சிங்.     


சரி, இப்போது ஒரு கேள்வி! இந்தியாவின் நிதியமைச்சர்களில் 

நம்பர் ஒன் யார்? இந்தியப் பொருளாதாரம் என்பது

பூர்ஷ்வா பொருளாதாரம் ஆகும். எனவே பூர்ஷ்வாக்களின் 

பார்வையில் இருந்து இக்கேள்விக்கு விடையளிக்க 

வேண்டும். 

 

டாக்டர் மன்மோகன்சிங் கேம்பிரிட்ஜில் படித்தவர். 

பொருளாதாரத்தில் பெரும் நிபுணர். நவீன இந்தியாவின் 

பூர்ஷ்வா பொருளாதாரத்தைச் செதுக்கிய சிற்பி.  

பூர்ஷ்வா உரைகல்லில் தேய்த்துப் பார்க்கும்போது,

அடிக்கடி மன்மோகன்சிங்கின் மனித முகம் 

வெளிப்படுவதாக பூர்ஷ்வாக்கள் கருத்துக் கூறினர்.


அடுத்து ப சிதம்பரத்தை பூர்ஷ்வா உரைகல்லில் 

தேய்த்துப் பார்த்தனர். மனிதமுகம் தென்படுகிறதா என்று 

கண்ணில் விளக்கெண்ணெயை விட்டுக் கொண்டு

பார்த்தனர். ஆனால் மனிதமுகம் ஒரு சிறிதேனும் 

தென்படவில்லை. 


எனவே இந்தியாவின் தலைசிறந்த நிதியமைச்சராக 

பூர்ஷ்வாக்களால் ப சிதம்பரம் ஏகமானதாகத் தேர்வு 

செய்யப் பட்டார்.


பாஜக கத்துக்குட்டிகள் கேலரியில் இருந்து கொண்டு 

அருண் ஜேட்லி, அருண் ஜேட்லி என்று கத்திக் கொண்டு

இருந்தனர். அருண் ஜேட்லியை ஒருபோதும் பொருட்படுத்தத் 

தக்க நிதியமைச்சராக பூர்ஷ்வாக்கள் கருத மாட்டார்கள்.

அப்படியானால் அவர் ஏழை எளிய மக்களின் நிதியமைச்சரா,

இல்லை; அப்படி இல்லை. அவருக்கு மனிதமுகம் அதிகமாக 

இருந்தது. ரூ ஐந்து லட்சம் வரை வருமானவரி கிடையாது 

என்று அறிவித்த அருண் ஜேட்லியை பூர்ஷ்வாக்கள் 

ஒருபோதும் ஏற்க மாட்டார்கள். 


ஒவ்வொரு முறையும் வருமானவரி வரம்பை 

சிதம்பரம் உயர்த்துவார் என்று எதிர்பார்த்த 

நடுத்தர வர்க்கத்துக்கு என்ன கிடைத்தது?

பெரிய ஏமாற்றம்! எனவேதான் சிதம்பரம் திஹார் 

சிறைக்குச் சென்றபோது, இந்த நாட்டின் மாதச் 

சம்பளதாரர்கள் (salaried class) ஆனந்தக் கூத்தாடினார்கள்.        


சார், இப்போதைய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனைப்

பற்றிச் சொல்லுங்கள் சார் என்கிறார்கள் வாசகர்கள். 

எல்லோருமே IQ கூடிய வாசகர்கள். எனவே பதில் 

சொல்லியாக வேண்டும். நிர்மலா சீதாராமனை 

ப சிதம்பரத்தோடு ஒப்பிட்டால், ப சிதம்பரம் ஒரு 

பொருளாதார ரோபோ(ட்); நிர்மலா அம்மையாரின் 

மனித முகம் அடிக்கடி தெரியும். அது ஒரு பெண் முகமாக 

தாயின் முகமாக இருந்து தொலைக்கிறது.இது 

பூர்ஷ்வாக்களுக்கு ஏற்புடையதாக இல்லை. எனவேதான் 

புழுத்த வக்கிர சு சுவாமி நிர்மலாவுக்கு பொருளாதாரம் 

தெரியாது என்கிறார் 


ப சிதம்பரம் ஒரு பொருளாதார ரோபோ. அவர் மனிதனே அல்ல.

எனவேதான் இந்திய பூர்ஷ்வா வர்க்கம் அவரை இந்தியாவின் 

தலைசிறந்த நிதியமைச்சராகத் தேர்வு செய்கிறது.


மக்களைப் பொறுத்தமட்டில், இந்தியாவின் 

நிதியமைச்சர்களில் ப சிதம்பரம் ஒரு நிபுணராக 

இருந்தாலும், படு மோசமான மக்கள் விரோத 

நிதியமைச்சர். அவரை விட மோசமான ஒரு 

மக்கள் விரோதியை ஈரேழு பதினாலு லோகத்திலும் 

காண முடியாது. இதுதான் மக்களின் பார்வை.

இதை ஏற்றுக் கொள்ளாத போலி இடதுசாரி எவனும் 

உயிர்வாழத் தகுதியற்ற கயவனே!

***************************************************

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக