புதன், 3 பிப்ரவரி, 2021

 கௌசல்யா பணி இடைநீக்கம் செய்யப்பட்டது குறித்து பிபிசி தமிழிடம் கருத்துத் தெரிவித்த உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி சந்துரு,

"அரசாங்கப் பதவியில் உள்ளபோது அரசு விதிகளுக்கு உட்பட்டே செயல்பட வேண்டும். இந்தியாவின் ஒருமைப்பாட்டிற்கு எதிரான கருத்து தெரிவிக்க முடியாது. 1983ல் உச்ச நீதிமன்றம் ஒரு தீர்ப்பை அளித்தது. அதாவது, ஒருவர் அரசுப் பதவிக்கு வருவதற்கு முன்பாக எவ்விதக் கருத்தையும் கொண்டிருக்கலாம்.
ஆனால், அரசுப் பதவிக்கு வந்த பிறகு, அரசுக்கு எதிரான கருத்தைக் கொண்டிருக்க முடியாது. ஆனால், முன்பு கொண்டிருந்த கருத்திற்காக இப்போது பணி வழங்க மறுக்க முடியாது என்பதுதான் அந்தத் தீர்ப்பு. அரசு ஊழியர்களுக்கான நடத்தை விதிமுறைகளின் முதல் விதியே, A government servent will have obsulute integrety, devotion to duty, loyalty to service என்பதுதான்.
Loyalty to service என்பது தேசத்திற்கு விசுவாசம் என்பதாகத்தான் புரிந்துகொள்ளப்படும். தவிர, அரசு ஊழியர்களுக்கான முக்கியமான விதி, எந்த ஊடகத்திற்கும் பேட்டி அளிக்கக்கூடாது என்பது. அப்படியே பேட்டி அளிக்க வேண்டுமென்றால் முன் அனுமதி பெற வேண்டும். அதில் பணி தொடர்பாகவோ அரசுக்கு எதிராகவோ பேசக்கூடாது. கட்டுரை, புத்தகம் போன்றவற்றை முன் அனுமதி பெற்றே எழுத வேண்டும். இந்த விவகாரத்தில் இந்த விதி மீறப்பட்டிருக்கிறது,"
என்று கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக