கூ என்றால் என்ன? 'கூ'வின் பயன் என்ன?
இது ஒரு எலக்ட்ரானிக் கட்டுரை!
-------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-----------------------------------------------------
முகநூல் என்றால் என்ன என்று வாசகர்கள் அறிவார்கள்.
டுவிட்டர் (twitter) என்றால் என்ன என்றும் ஒரு குறிப்பிட்ட
அளவு வாசகர்களுக்குத் தெரியும். தற்போது இந்த
வரிசையில் டுவிட்டர் போன்று கூ (Koo) என்னும் பெயரில்
இன்னொரு எலக்ட்ரானிக் உருப்படி வந்துள்ளது.
1) கூ என்பது இந்தியத் தயாரிப்பு. (டுவிட்டர் என்பது
யாருடைய தயாரிப்பு? அதாவது எந்த நாட்டைச் சேர்ந்தது?
அமெரிக்காவைச் சேர்ந்தது. இதன் CHQ சான்பிரான்சிஸ்கோ
நகரில் உள்ளது. (CHQ = Central Head Quarters).)
2) கூவின் வயது என்ன? வெறும் பத்து மாதம்தான் ஆகிறது.
கடந்த மார்ச் 2020ல் உருவாக்கப் பட்டது. (டுவிட்டர் 2006ல்
உருவாக்கப் பட்டது. அதன் வயது 14 ஆண்டுகள்).
3) கூவை உருவாக்கியவர்கள்: அ) ஆப்ரமேயா ராதாகிருஷ்ணா
ஆ) மாயங்க் பிடவட்கா ஆகிய இருவரும்.
4) டுவிட்டரின் பதிவு செய்யப்பட்ட பயனர்கள் (Registered users)
மார்ச் 2016ல் பயனர்கள் 31 கோடி.
5) இந்தியாவின் கூ எத்தனை பயனர்களைக் கொண்டுள்ளது
என்று சரியான தகவல்கள் இதுவரை எனக்குக்
கிட்டவில்லை.
6) இந்தியாவில் புத்தாக்கங்களுக்குக்கான போட்டி ஒன்றை
மத்திய அரசு கடந்த ஆண்டு ஆகஸ்டில் நடத்தியது. அதில்
பங்கேற்ற கூ The BEST INNOVATION AWARDஐ தட்டிச் சென்றது.
7) இதன் பிறகே கூ தனது ஏறுமுகத்தைக் கண்டது. தற்போது
மத்திய அரசின் பல்வேறு துறைகள் (departments) கூவில்
இணைந்துள்ளன.எனவே இதற்கு வளமான எதிர்காலம்
உண்டு. அமெரிக்காவின் டுவிட்டருக்கு இந்தியாவின் கூ
சரியான மாற்றாகத் திகழ இயலும்.
8) டுவிட்டரில் என்னவெல்லாம் செய்கிறோமோ அவற்றை
எல்லாம் கூவில் செய்யலாம். அதாவது குறுஞ்செய்தி
அனுப்பலாம். உங்களின் கருத்தை குறுகிய அளவில்
வெளியிடலாம். குறும்படங்கள் பகிர்ந்து கொள்ளலாம்.
அரட்டை (chat) அடிக்கலாம். வாக்கெடுப்புகள் (polls)
நடத்தலாம்.
9) கூட்டம் கூட்டமாக கூவில் சேரலாம். சேருங்கள்.
10) கூ என்பது ஒரு ஆப் (App) ஆகும். App என்றால்
உறுபேறு என்று ஏற்கனவே சொன்னேன். நினைவு
இருக்கிறதா? ஊடக நண்பர்கள் ஆப் (App) என்பதற்கு
"செயலி" என்று மொழிபெயர்க்கக் கூடாது. உறுபேறு
என்ற சொல்லையே பயன்படுத்த வேண்டும். ஏனெனில்
processor என்ற சொல் செயலி என்று வழங்கப் படுகிறது.
11) கூ என்னும் ஆப் (App) குறித்து, அதாவது கூ என்னும்
உறுபேறு குறித்து அடிப்படையான சில தகவல்களை
இங்கு கொடுத்துள்ளேன். உங்களின் முயற்சியில்
மேலும் தெரிந்து கொள்ள வேண்டும். எல்லோரும்
கூவில் சேரலாம்.
12) டுவிட்டர் பல்வேறு மொழிகளில் செயல்படுகிறது.
உதாரணமாக ஆங்கிலம், ஜப்பானியம், அரபி, மலாய்,
ஸ்பானியம், போர்த்துகீசியம், பிரெஞ்சு போன்றவை.
இது போலவே நமது 'கூ'வும் பல்வேறு மொழிகளில்
செயல்படுகிறது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம்,
மராத்தி, இந்தி, வங்கம், ஒரியா, குஜராத்தி, பஞ்சாபி,
அசாமியம், ஆங்கிலம் ஆகிய 12 மொழிகளில்
செயல்படுகிறது. சமஸ்கிருதத்தில் கூ செயல்படவில்லை
என்பது முக்கியமானது. சமஸ்கிருதத் திணிப்பு என்று
கூச்சலிட வாய்ப்பு இல்லாமல் போயிற்றே என்று
அங்கலாய்க்கிறார் ஒரு Dravidian scum.
**********************
டௌன்லோட் செய்வது எப்படி?
-----------------------------------------------
நீங்கள் கூவில் சேர வேண்டுமானால் என்ன செய்ய
வேண்டும்? உங்கள் மொபைலில் Koo Appஐ
(கூ உறுபேற்றை) பதிவிறக்கம் செய்து கொள்ள
வேண்டும்.
பதிவிறக்கம் செய்வது எப்படி?
1) கூகுள் பிளே ஸ்டோருக்குப் போய் அங்கிருந்து
பதிவிறக்கம் செய்யலாம். அல்லது
2) Apple app storeக்குப் போய் அங்கிருந்து
பதிவிறக்கம் செய்யலாம்.
3) உங்களின் போன் ஆப்பிள் ஐ போனாகவோ
அல்லது ஆண்டிராய்ட் போனாகவோ இருக்க வேண்டும்.
---------------------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக