செவ்வாய், 9 பிப்ரவரி, 2021

 மாவோயிஸ்டுகள் என்ற பெயரில் 

தமிழ்நாட்டில் 3 பேர் UAPA சட்டத்தில் கைது!

இதன் பின்னணியில் பினராயி விஜயனின்

கேரள போலீசின் கைங்கரியம்!

-------------------------------------------------------------

  நியூட்டன் அறிவியல் மன்றம் 

-----------------------------------------------------------

சில நாட்களுக்கு முன்பு மாவோயிஸ்டுகள் என்ற 

பெயரில் மூன்று தோழர்கள் UAPA  சட்டத்தின்கீழ் 

கைது செய்யப்பட்டு சேலம் ஆத்தூர் சிறையில் 

அடைக்கப் பட்டுள்ளனர்.


தமிழ்த்தேச மக்கள் முன்னணியைச் சேர்ந்த 

தோழர் பாலன், தோழர் கோ சீனிவாசன் 

ஆகிய இருவருடன் இவ்வமைப்பைச் சேராத 

தோழர் அனுப்பூர் செல்வராஜ் என்பவரும் 

ஆக மொத்தம் மூன்று பேர் சிறையில் 

அடைக்கப் பட்டுள்ளனர்.


சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு 

தோழர் மணிவாசகம் என்னும் மாவோயிஸ்ட் 

தோழரை பின்ராயி விஜயனின் போலீஸ் 

போலிமோதல் எனப்படும் fake என்கவுன்டரில்

சுட்டுக் கொன்றது. தோழர் மணிவாசம்

தமிழர் ஆவார். இவரின் இறுதி நிகழ்வுகளில் 

மேற்கூறிய மூன்று பேரும் பங்கேற்று 

இரங்கல் உரை நிகழ்த்தி உள்ளனர். இது 

நடந்து ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாகிறது.


இரங்கலுரை ஆற்றியபோது பழிவாங்குவோம் 

என்றும் ரத்தக் கடன் தீர்ப்போம் என்றும் 

இம்மூவரும் கோஷம் இட்டதாகவும்,போலீசின் 

பிடியில் சிக்காமல் தலைமறைவாக இருந்ததாகவும் 

இப்போதுதான் பிடிபட்டதாகவும் போலிஸ் 

கூறுகிறது. போலீஸ் கூறுவது நூறு சதவீதம் 

பொய் ஆகும்.

 

மக்கள் அதிகாரம் என்னும் குட்டி முதலாளித்துவ 

அமைப்பு, இரண்டு தோழர்கள் மட்டுமே 

கைதானதாகவும் அந்தக் கைதைக் 

கண்டிப்பதாகவும் சுவரொட்டி ஒட்டி உள்ளது.          

தோழர் அனுப்பூர் செல்வராஜ்  கைதானதை 

மேற்கூறிய குட்டி முதலாளித்துவ அமைப்பு 

வேண்டுமென்றே மறைக்கிறது. இதன் மூலம் 

கியூ பிராஞ்சு போலீசுக்கு உதவி செய்கிறது.


கைது நிகழ்வுகளைக் கண்டிக்கும் அனைவரும் 

வேண்டுமென்றே திட்டமிட்டே கேரள போலி

மார்க்சிஸ்டு பினராயி விஜயனின் போலீசே 

இக்கைதுகளுக்குக் காரணம் என்பதை 

மூடி மறைக்கின்றனர். 


இந்த மூவர் கைது நிகழ்ந்த அதே நாட்களில் 

கோவையில் மாவோயிஸ்டுகள் என்று கூறி

சில தோழர்கள் கேரள போலிசால் கைது 

செய்யப்பட்டனர். எல்லா ஊடகங்களிலும் 

இச்ச்யதி வெளிவந்தது.   



  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக