குழந்தைகளுக்கு தமிழிலா அல்லது
சமஸ்கிருதத்திலா, எதில் பெயர் சூட்டுவது?
மானங்கெட்ட ஹெச் ராஜாவே திருந்து!
------------------------------------------------------------
அபராஜிதா!
அபராஜிதா எவ்வளவு அழகான பெயர்!
சமஸ்கிருதப் பெயர்! கேட்கக் கேட்க
காது குளிர்கிறதே! நம் குழந்தைகள்,
பேரக் குழந்தைகளுக்கு இந்தப் பெயரை
வைக்க வேண்டும்!
அடுத்து இன்னொரு பெயர்!
மயூரி!
மயூரி! எவ்வளவு அழகான சமஸ்கிருதப் பெயர்!
அபராஜிதா, மயூரி என்று பெயர் வைத்தால்
நமக்கு சமூக அந்தஸ்து கிடைக்கும்.
வெறுமனே தேன்மொழி, கயல்விழி
என்றெல்லாம் பெயர் வைத்தால்
சமூக அந்தஸ்து கிடைக்காது.
கம்யூனிஸ்ட் தலைவர் (CPI) டி ராஜாவை
நமக்கெல்லாம் தெரியும். அவர் தன்
மகளுக்கு சமஸ்கிருதத்தில் பெயர்
சூட்டி உள்ளார்.
அபராஜிதா என்ற அழகிய சமஸ்கிருதப்
பெயரை தன் மகளுக்குச் சூட்டி
மகளின் எதிர்காலத்துக்கு நல்லதொரு
வழி ஏற்படுத்தி உள்ளார் டி ராஜா.
மயூரி என்ற அழகான சமஸ்கிருதப்
பெயரைத் தன் மகளுக்குச் சூட்டி
உள்ளார் திமுக முன்னாள் அமைச்சர்
அண்ணன் ஆ ராஜா.
டி ராஜா, ஆ ராஜா இருவருமே தமிழால்
மயிருக்குக்குக்கூட பிரயோஜனம்
இல்லை என்று உணர்ந்து
சமஸ்கிருதத்துக்குத் தாவி விட்டார்கள்.
இருவருமே டெல்லியில் இருந்ததால்
அவர்களுக்கு இந்தியும் தெரியும்.
எச்ச ராஜா எச்ச ராஜா என்று நாம் ஏசும்
பாஜகவின் ஹெச் ராஜா வீட்டில்
பெண் குழந்தைகளுக்கு என்ன பெயர்
சூட்டி உள்ளார்கள் என்று பார்த்தேன்.
ஹெச் ராஜா மட்டுமல்ல, அவரின்
உறவினர் குடும்பங்களிலும் என்ன பெயர்
என்று அலசி ஆராய்ந்தேன். எரிச்சலே
மிஞ்சியது.
ஹெச் ராஜா வீட்டில் எல்லாம் தமிழ்ப்பெயர்!
கோதை
நப்பின்னை
ஆண்டாள்
சூடாமணி.
இது மாதிரி தமிழ்ப்பெயர்களை
குழந்தைகளுக்கு வைத்தால் உருப்பட
முடியுமா? ஹெச் ராஜா திருந்துவாரா?
மானங்கெட்ட ஹெச் ராஜாவே திருந்து!
டி ராஜாவைப் பார்!
ஆ ராஜாவைப் பார்!
இருவரையும் பார்த்த பிறகாவது திருந்து!
தமிழைக் கக்கூஸில் போடு!
********************************************
ithu LPG
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக