செவ்வாய், 2 பிப்ரவரி, 2021

 படுதோல்வி அடைந்த பாஜக!

பட்ஜெட் 2021 பகுப்பாய்வு!

---------------------------------------------

நியூட்டன் அறிவியல் மன்றம் 

---------------------------------------------

அரசாங்கம் என்பது மிகப்பெரிய ஒரு நிறுவனம். இது 

மேற்கொள்ளும் நடவடிக்கைகள் எப்போதுமே எல்லா 

இடங்களிலும் அரசாங்கத்தின் இருப்பை உணர்த்துவதாக 

அமையும்.


பல்வேறு சந்தர்ப்பங்களில் அரசாங்கத்திற்கு நிதி நெருக்கடி 

ஏற்படுவது இயற்கையே. அப்போதெல்லாம் பல நிறுவனங்களில் 

தான் போட்ட முதலை, அதாவது மூலதனத்தை (capital)

அரசாங்கம் திருப்பி எடுத்துக் கொள்ளும். உதாரணமாக 

ஒரு நிறுவனத்தில் அரசாங்கத்தின் பங்குகள் 30 % இருக்கின்றன 

என்றால், அதில் இருந்து 5 சதமோ அல்லது 10 சதமோ 

அரசாங்கம் திரும்ப எடுத்துக் கொள்ளும். இதற்குப் பெயர் 

Disinvestment. தமிழில் முதலீடு நீக்கம் என்று சொல்லலாம்.


Disinvestment என்ற சொல் நரசிம்மராவ் அரசு புதிய 

பொருளாதாரக் கொள்கைகளை செயல்படுத்தியதில் 

இருந்து மிகவும் பாப்புலர் ஆனது. எந்த அளவுக்கு 

பாப்புலர் ஆனது என்றால், கட்டணக் கழிப்பிடத்தில் 

மலம் கழிப்பவன் முதல் டாஸ்மாக்கில் சரக்கு வாங்கி விட்டு

பக்கத்துக் கடையில் சைடு டிஷ்ஷுக்கு காக்கா fry

வாங்குகிறவன் வரை எல்லாப் பயலும் டிஸ்இன்வெஸ்ட்மென்ட் 

என்று உளறிக் கொண்டிருந்தான்.    


அந்தக் காலக் கட்டத்தில் (1995-2000) உள்ளூர் இடதுசாரிகளின் 

பொருளாதார வகுப்புகள் வெகு பிரசித்தம். Disinvestment 

பற்றி, பட்ஜெட் பற்றி எல்லாம் வகுப்பு எடுப்பார்கள். கணிசமான 

பேரை வகுப்புக்கு ஆர்கனைஸ் பண்ணுவார்கள். Disinvestment 

வகுப்புகளை பெரும்பாலும் நாட்பட்ட மலச்சிக்கல் 

உள்ளவர்களே எடுப்பார்கள். 


கேரள  சமாஜத்தில் வகுப்பு, காம்ரேடு  சிவப்பு முத்தன் 

வகுப்பு எடுக்கிறார் என்றால் கேரள சமாஜமே நிரம்பி 

வழியும். கூட்டம் முடிந்ததும் ஒரு பயலுக்கும் ஒரு இழவும் 

புரிந்திராது. மன்மோகன்சிங், சிதம்பரம், பிரணாப் முகர்ஜி 

ஆகிய பெயர்கள் மட்டும் மனப்பாடம் ஆகியிருக்கும்.


முதல் போடுவது, முதல் எடுப்பது இரண்டும் பொருளாதார 

ரீதியாக இயல்பான நடவடிக்கைகளே. Nothing abnormal in it!

முதல் போடுவது என்றால் INVESTMENT 

போட்ட முதலை எடுப்பது என்றால் DISINVESTMENT.

இரண்டும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்களைப் 

போன்றது. Wherever there is investment there will be 

disinvestment and this is quite natural.     


இதெல்லாம் நமது நாட்பட்ட மலச்சிக்கல் உள்ள இடதுசாரிப் 

போலிகளுக்குத் தெரியாது. DISINVESTMENT என்றால் 

பஞ்சமாபாதகம் என்று மட்டுமே சொல்லத் தெரியும் 

அந்த மூடர்களுக்கு.


DISINVESTMENTல் KING யார் என்றால் அது டாக்டர் மன்மோகன்

சிங்தான். அதில் அவரை மிஞ்ச இந்த அவனியில் ஆள் 

கிடையாது. அவனி என்றால் என்ன அர்த்தம் என்று நமது 

நாட்பட்ட இடதுசாரிகளுக்குத் தெரியாது. தெரிந்தவர்கள் 

அர்த்தம்  சொல்லுங்கள். 


காங்கிரஸ், பாஜக என்னும் இரண்டு கட்சிகளில் disinvestmentல் 

சாதனை புரிந்தது காங்கிரஸ்தான். இந்த விஷயத்தில் 

பாஜகவெல்லாம் காங்கிரசுக்கு உறை போடக் காணாது. 

யாருக்காவது தைரியம் இருந்தால் இதை மறுக்கலாம்.

மறுத்துப்பார் என்று சவால் விடுகிறேன்.


BHEL என்று ஒரு நிறுவனம். எல்லோருக்கும் தெரிந்த 

நிறுவனம்தான். பெல் என்றவுடனே மகஇக என்னும் 

நக்சல்பாரி அமைப்பின் தலைவர்கள் மருதையனும் 

தங்கராசுவும்  புரிந்த ரியல் எஸ்டேட் ஊழல்தான் 

ஞாபகத்துக்கு வரும். ஊழல் புரிந்தும் இவர்கள்மீது 

மத்திய பாஜக அரசோ மாநில அதிமுக அரசோ எந்த 

நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஊழல் பேர்வழிகள் 

மருதையன் மீதோ தங்கராசு மீதோ ஒரு FIR கூடப் 

போடவில்லை. 


பார்ப்பன மருதையனின் மயிரைக்கூட பாசிச மோடி 

அரசால் பிடுங்க முடியாது. இதுதான் யதார்த்தம். 

எனவே மிகுந்த திமிரோடு அலைகிறான் ஊழல் பேர்வழி 

மருதையன். ஒரு சவுண்டிப் பயலைக் கூட பாசிச மோடி 

அரசால் கைது செய்ய முடியவில்லை என்றால்.... கைது 

செய்ய வேண்டாம் ஐயா, ஒரு FIR கூடப் போட முடியவில்லையே!

அப்படியானால் இது பாசிச அரசா அல்லது பாயாச அரசா?

சொல்லுங்கள்!    


BHEL ஒரு மகாரத்னா அந்தஸ்து பெற்ற நிறுவனம். நவரத்னா,

மகாரத்னா  அந்தஸ்து பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்.

நிறைய லாபம் கொட்டினால் அது நவரத்னா நிறுவனம்.

லாபம் கொட்டோ கொட்டு என்று கொட்டினால் அது 

மகாரத்னா நிறுவனம். BHEL ஒரு மகாரத்னா நிறுவனம்.

இதில் DISINVESTMENT செய்ய வேண்டும் என்று வெறி 

பிடித்து அலைந்தார் மன்மோகன்சிங். ஒரு மகாரத்னா 

 நிறுவனந்தை ஏன் DISINVESTMENT செய்ய வேண்டும்?


நலிவுற்ற நிறுவனத்தை, நஷ்டத்தில் இயங்கும் நிறுவனத்தை 

 அதில் உள்ள அரசின் பங்குகளைப் பாதுகாக்கும் 

பொருட்டு டிஸ்இன்வெஸ்ட்மென்ட் செய்வார்கள். இதில் 

ஒரு தர்க்கம் உள்ளது. ஆனால் கோடி கோடியாக லாபம் 

கொட்டுகிற BHEL நிறுவனத்தை ஏன் டிஸ்இன்வெஸ்ட்மென்ட்

செய்ய வேண்டும்? இதில் என்ன தர்க்கம் உள்ளது? ஒரு 

இழவும் இல்லையே! இருந்தும் டாக்டர் மன்மோகன்சிங் 

BHEL நிறுவனத்தை டிஸ்இன்வெஸ்ட்மென்ட் செய்ய வேண்டும் 

என்று ஒத்தக்காலில் நின்றார். இன்று ஐயோ என்று கூச்சலிடும் 

எந்த நாயும் அன்று குரைக்கவில்லையே, ஏன்?   

 

 BHEL உடன் மன்மோகன்சிங் நின்றுவிடவில்லை. இன்னொரு 

மகாரத்னா அந்தஸ்து பெற்ற நிறுவனத்தைக் குறி 

வைத்தார். அது எந்த நிறுவனம் தெரியுமா? CIL எனப்படும் 

கோல் இந்தியா லிமிடெட் நிறுவனம். கூரையைப் பிய்த்துக் 

கொண்டு லாபம் கோடி கொடியாகக் கொட்டுகிற நிறுவனம் 

இது. இதையும்  டிஸ்இன்வெஸ்ட்மென்ட் செய்வேன் என்று 

ஒத்தக்காலில் நின்றார் மன்மோகன் சிங். அவர் பேச்சுக்கு 

மறுபேச்சு பேசுவது கஷ்டம். ஏனெனில் அவர் ஒரு பொருளாதார 

நிபுணர்.  மாற்றுக் கருத்துக் கூறுபவர்கள் நிபுணர்கள் அல்ல.


மன்மோகன்சிங் கேம்பிரிட்ஜில் படித்தவர். இடதுசாரி 

முகாமில் கேம்பிரிட்ஜுக்கு எங்கே போவது? இங்கே எட்டாங் 

கிளாஸ் பெயிலாப்போன பொருளாதார நிபுணர்கள்தானே 

இருக்கிறார்கள்! ஆனால் இன்று குரைக்கிற எந்த 

ஒரு சொறிநாயும் அன்று மன்மோகனை எதிர்த்துக் 

குரைக்கவில்லையே, ஏன்?


மகாரத்னா அந்தஸ்து பெற்ற, லாபம் கொட்டோ கொட்டு என்று 

கொட்டுகிற BHEL நிறுவனத்தையும் கோல் இந்தியா

நிறுவனத்தையும் மன்மோகன்சிங் டிசம்பர் 2013ல்

DISINVESTMENT செய்ய முயன்றார். இது பற்றிய செய்திகள் 

அன்று எல்லாப்பத்திரிகைகளிலும் வந்தன. இங்கு  தமிழ் இந்து 

செய்தியும் ஆங்கில இந்து செய்தியும் கொடுக்கப் 

பட்டுள்ளது.


ஒரு முதலாளியப் பொருளாதாரத்தில் முதலீடு செய்வது,

முதலீட்டை நீக்குவது (investment and disinvestment) என்னும் இரண்டு 

செயல்களும் இயல்பானவை. பொருளாதார அறிவே 

இல்லாத ஜடங்கள், கல்வி அறிவற்ற புழுத்த தற்குறிகள் 

ஆகியோரால் நிரம்பிய போலி இடதுசாரி முகாமில் உள்ள 

மூடர்கள் disinvestment என்றவுடனே பெருங்கூச்சல் 

போடுவார்கள். அவர்கள் முட்டாள்கள்.    


 பொருளாதார ரீதியாக அறிவுபூர்வமாக கருத்துச் 

சொல்ல வேண்டுமென்றால், தினமும் எக்கனாமிக் 

டைம்ஸ் படிக்கிற பழக்கம் இருக்க வேண்டும். நம்மூர் 

போலி இடதுசாரி நாய் எக்கனாமிக் டைம்ஸுக்கு 

எங்கே போவான்? அதற்கெல்லாம் இங்கிலீஷ் தெரிய 

வேண்டும் அல்லவா? இவன் பாவம் இங்கிலீஷுக்கு 

எங்கு போவான்? 


சிதம்பரத்தின் பட்ஜெட் ஆனாலும், அல்லது நிர்மலா 

சீதாராமனின் பட்ஜெட் ஆனாலும், பட்ஜெட்டை 

எதிர்த்து போலி இடதுசாரி முகாமின் தற்குறிகள்

எழுப்பும் கூச்சலில் பொருள் இல்லை. அதை பொருட்படுத்த 

வேண்டிய தேவை இல்லை.


இந்தியாவின் பட்ஜெட் 1995ல் தீர்மானிக்கப் பட்டுவிட்ட 

ஒன்று. அப்போதைய கொள்கைகளின் அடியொற்றித்தான் 

இன்று பட்ஜெட் போட  இயலும். இன்று யார் பட்ஜெட் 

போட்டாலும், சீதாராம் யெச்சூரி பட்டாலும் அல்லது 

சீதாராமன் நிர்மலா போட்டாலும் எல்லாம் 

ஒன்றுபோலத்தான் இருக்கும். ஏனெனில் இதெல்லாம் 

முதலாளிய பட்ஜெட், முதலாளியப்  பொருளாதாரம்.

இதன் மூலவேர் LPG கொள்கைகளில் உள்ளது.

 

இதற்கு மாற்றுக் கொள்கைகளோ அல்லது மாற்றுத் 

திட்டமோ போலி கம்யூனிஸ்டுகள் மற்றும் போலி 

நக்சல்பாரிகளிடம் இல்லை. UPA-1 ஆட்சிக் காலத்தில் 

மேற்கொள்ளப்பட்ட அனைத்து டிஸ்இன்வெஸ்ட்மென்ட் 

திட்டங்களையும் மௌனமாக இருந்து ஆதரித்தவர்கள்தானே 

போலி கம்யூனிஸ்ட்கள்! மாற்றுத் திட்டம் எதுவும் இல்லாமல் 

பட்ஜெட்டை எதிர்த்துக் கூச்சல் போடுவது அடிமுட்டாள்தனம் 

ஆகும்.

***************************************************            

 


    

       

 

   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக