புதன், 8 செப்டம்பர், 2021

காதலின் இயற்பியல்
----------------------------------
வீரை பி இளஞ்சேட்சென்னி
-------------------------------------------------
உன் இளமூங்கில் தோளில்
துப்பட்டா
தொங்கும் அழகில் லயித்து
கச்சிதமான பேரபோலா என்று
உறுத்து உறுத்துப் பார்த்தேன்
வசவு உமிழ்ந்து நீ நகர்ந்தாய்.
**
உன் தங்கையைக் கண்டதும்
உன் ஐசோடோப் உன்னினும் அழகு என்றேன்
கோபத்தில் நீ சிவந்தாய்.
**
மின்னி மறையும் உன் இடையில்  
உருவாகும் மின்சாரத்தின்  
வோல்டேஜ் அறிய 
மல்டிமீட்டரை உன் இடையில் பொருத்த முற்பட்டேன் 
கண்டிப்புடன் நீ தடுத்தாய்.
**
நம் காதல் அசிம்ப்டோட் ஆகவே நீள்கிறதே 
தொடுபுள்ளியில் சங்கமிப்பது எப்போது என்றேன்.
**
துருத்திக் கொண்டு என்னுடன் கூடவே வரும் 
இயற்பியலைக் கைவிட்டால் 
உன் கைத்தலம் பற்றலாம் என்றாய்.
**
கண்டு கேட்டு உண்டு உயிர்த்து 
அப்பாலுக் கப்பாலும் உச்சம் தரும் 
இயற்பியலைக் கைவிடுவது எங்ஙனம்?
**
நியூட்டனும் கலாமும் 
வெளிச்சம் பாய்ச்ச 
ஒரு நானோ நொடியில் 
நான் தெளிந்தேன்.
*********************************

உண்மையைத் தவிர வேறு எல்லாவற்றையும் 
எழுதியுள்ளார் பதிவாளர். ஜாதி இருப்பு என்பது 
மட்டுமே உண்மை.

பின்குறிப்பு:
தமிழ்த்தாய் வாழ்த்து போல இது அறிவியல் வாழ்த்து.
இது நியூட்டன் அறிவியல் மன்றத்தின் அறிவியல் கீதம்.


நியூட்டன் அறிவியல் மன்றத்தில் சேர எந்தக் கல்வித்
தகுதியும் தேவையில்லை. ஆனால் இந்தக் கவிதையின் 
பொருள் புரிய வேண்டும்.  


மறுத்துப் பார் என்று சவால் விடுகிறேன்.

முக்கிய அறிவிப்பு!
-----------------------------------
இந்தக் கவிதை குறித்த வாசகர்களின் கருத்துக்கள் 
வேறெதும் வரவேற்கப் படுகின்றன. கவிதையைப் 
புரிந்து கொள்ள வசதியாக படங்கள் இணைக்கப் 
பட்டுள்ளன. பேரபோலா. ஐசோடோப், டார்க் (torque),
மல்டி மீட்டர், அசிம்ப்ட்டோட், நானோ நொடி 
ஆகியவற்றின் விளக்கம் படங்களில் தரப்பட்டுள்ளது.
இனி கவிதையைப் புரிவதற்கு என்ன தடை?     

ஸ்மார்ட் போன் வழங்கப்படும்!
-------------------------------------------------------
இந்தக் கவிதையில் உள்ள அறிவியல் விஷயங்கள் 
ப்ளஸ் டூ வகுப்பின் சிலபசைத் தாண்டியவை என்று 
நிரூபிக்கும் எவர் ஒருவருக்கும் ஒரு ஸ்மார்ட் போன் 
வழங்கப்படும். 

காதலிக்கும் மாணவர்கள் இளைஞர்கள் கவனத்திற்கு!
------------------------------------------------------------------------------------------------
இந்தக் கவிதையை எழுதி நீங்கள் காதலிக்கும் 
பெண்ணிடம் கொடுத்தால் உங்கள் காதல் 
நிறைவேறும்!


மனிதகுல வரலாற்றில் எழுதப்பட்ட முதல் 
அறிவியல் கவிதை இதுவேயாகும் என்று உரிமை 
கோருகிறோம்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக