பேக்கரியும் வெதுப்பகமும் சில லூசுப் பயல்களும்!
இன்றைய தேவை ஜாவாவைத் தமிழில் சொல்லுவதே!
தமிழ் தமிழ் என்று கூச்சல் போடும் வீணர்களால்
தமிழுக்கு நலம் பயக்க முடியுமா?
-------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
--------------------------------------------------------
1) விஷயம் என்பதை விடயம் என்று எழுதுவதால்
தமிழ் வாழ்ந்து விடாது.
2) பேக்கரி என்பதற்கு வெதுப்பகம் என்பது
உரிய தமிழ் அல்ல. மக்கள் அறிந்திராத,
வழக்கிலில்லாத ஏதாவது ஒன்றை உளறுவது
தமிழுக்குக் கேடு.
3) பெ மணியரசன் போன்றவர்களால் தமிழுக்கு
எவ்வித நன்மையும் கிடையாது. திரு மணியரசன்
கேவலம் ஒரு தமிழ்ப் பண்டிட்! அவ்வளவுதான்.
4) அவருக்கு கணிதமோ அறிவியலோ தெரியாது.
அவர் ஒரு கல்லாக் களிமகன்.
மணியரசன் போன்றவர்களைத் திட்டுவதற்காகவே
அக்காலத்தில் ஒளவாத்தியார் ஒரு வசை கவியை
இயற்றி உள்ளார்.
5) "ஒவ்வாக் கானத் துயர்மரம் பழுத்த
துவ்வாக் கனியெனத் தோன்றிய நீரே"
என்று மணியரசனைத் திட்டுவார்
ஒளவையார்.
6) உங்களுக்கு ஜாவா (Java) தெரியுமா?
தெரியாது. ஜாவாவின் புகழ்பெற்ற அந்த
இலச்சினை (logo) உங்களுக்கு நினைவு
வருகிறதா? வரவில்லை.
7) அப்படியானால் நீங்கள் ஒரு அடிமுட்டாள்
என்று பொருள். சமகால உற்பத்தி பற்றிய
எந்த அறிவும் இல்லாத ஒரு இழிந்த தற்குறி
என்று பொருள்.அவரவர்கள் அவரவரின்
மனச்சாட்சியைத் தொட்டுப் பதில் சொல்ல
வேண்டும்.
8) தமிழ்நாட்டில் ஒருவர் ஜாவாவை மிகவும்
எளிமையாகத் தமிழில் சொல்லிக் கொடுக்கிறார்.
அதுவும் முகநூலில் வீடியோ வெளியிட்டுச்
சொல்லித் தருகிறார்.
9) அவர் பெயர் வாசு ராமதுரை. தமிழில் ஜாவா
குறித்து விளக்கம் அளிக்கும் ஏழட்டு வீடியோக்களை
வெளியிட்டு உள்ளார்.
10) வாசு ராமதுரையின் தமிழ்ப்பணி
போற்றுதலுக்கு உரியது.இதுதான் தமிழுக்கு
இன்றைய தேவை. இவரைப் போன்றவர்கள்
தன்னலமின்றித் தமிழுக்குத்
தொண்டாற்றுவதால்தான் தமிழ் வாழ்ந்து
கொண்டு இருக்கிறது.
11) தொண்டு செய்வாய் தமிழுக்குத்
துறைதோறும் துறைதோறும் துடித்தெழுந்தே
என்கிறாரே பாவேந்தர். அதை நாங்கள்
செய்து வருகிறோம்.
12) அறிவியலைக் கற்காமல், அறிவியலைப்
பரப்பாமல், இயன்றவரை தமிழில்
அறிவியலைச் சொல்லாமல் வெறுமனே
ஜடமாக இருந்தால் என்ன ஆகும்?
தமிழ் செத்துப் போகும்.
13) இன்றைய தமிழுக்குத் தேவை
வாசு ராமதுரை போன்றவர்களின் அறிவியல்
சார்ந்த தமிழ்ப் பணியே தவிர மலப்புழுக்களின்
வெதுப்பக்கம் அல்ல. வாசு ராமதுரையின்
ஜாவா விளக்க வீடியோக்களை பார்த்து
விட்டு, பெ மணியரசன் போன்ற
மலப்புழுக்களை நினைத்தாலே குமட்டிக்
கொண்டு வருகிறது.
கனியிடை ஏறிய சுளையும் முற்றல்
கழையிடை ஏறிய சாறும்
பனிமலர் மேவிய தேனும் காய்ச்சுப்
பாக்கிடை அரிய சுவையும்
நனிபசு பொழியும் பாலும் தென்னை
நல்கிய குளிரிள நீரும்
இனியன என்பேன் எனினும் தமிழை
என்னுயிர் என்பேன் கண்டீர்!
---------------------------------------------------
பின்குறிப்பு:
பாவேந்தரின் ஒரு பாடலை கீழே
கொடுத்துள்ளேன். முழுவதும்
தரவில்லை. அதை நிரப்ப வேண்டும்.
அப்படி நிரப்புகிறவர்கள் மட்டுமே
இப்பதிவில் எதிர்மறையாக
கமென்ட் செய்ய முடியும்.
இதோ பாடல்!
பயிலுறும் அண்ணன் தம்பி அக்கம்
பக்கத்து உறவின் முறையார்
தயை மிக உடையாள் அன்னை என்னைச்
சந்ததம் மறவாத் தந்தை
.................................................................
.......................................................
அயலவர் ஆகும் வண்ணம் தமிழ் என்
அறிவினில் உறைதல் கண்டீர்!
************************************************
**************************************
திமுக அரசை மெலிதாகக் கண்டித்து
ஏதேனும் ஒரு கண்துடைப்புப்
போராட்டம் நடத்த நினைத்தால்
முதுகுத் தொலியை உரிக்கிறார் சபரீசன்.
சபரீசன் செய்வது சரி! அதை 100 சதம் வரவேற்கிறேன். லூசு மணியரசனும்!
வாசு ராமதுரையின் வீடியோக்களைப்
பாருங்கடா தமிழ்ப் பண்டிட் நாய்ங்களா!
அவர்ட்ட வாங்கிக் குடிங்கடா தமிழ்ப்
பண்டிட் நாய்ங்களா.
இங்கு தரகர்களின் படங்கள் மட்டுமே
கொடுக்கப் பட்டுள்ளன. கட்டுரை தரகர்களைப்
பற்றியது. கருணாநிதி தரகர் அல்லர்.
ராஜபக்சே, சோனியா, கருணாநிதி
ஆகியோர் தரகர்கள் அல்லர்.
கொரிய மொழி, ஜப்பானிய மொழி, சீன மொழி
ஆகியவை உற்பத்தி மொழிகள். அதாவது
கோரிய ஜப்பானிய சீன சமூகங்களின்
பொருள் உற்பத்தியில் செயல்படும் மொழிகள்.
அதாவது அறிவியல் மொழிகள்.
தமிழ் உற்பத்தி மொழி அல்ல. இந்தியச்
சமூகத்தின் பொருள் உற்பத்தி மொழி
ஆங்கிலமே தவிர தமிழ் அல்ல; இந்தியும்
அல்ல; சமஸ்கிருதமும் அல்ல.
எது உற்பத்தி மொழியோ அதைத்தான்
மக்கள் எல்லாவற்றுக்கும் பயன்படுத்துவார்கள்.
கொரிய மொழி உற்பத்தி மொழியாக,
அறிவியல் மொழியாக இருப்பதால் டிவி
ரிமோட்டில் கொரிய மொழி இருக்கிறது.
தமிழ் உற்பத்தி மொழியாக இல்லை. எனவே
அது குறைந்தபட்சப் பயன்பாட்டில் மட்டுமே
இருக்கும். இதில் ஆச்சரியம் என்ன இருக்கிறது?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக