நேருவைக் கட்டி வைத்து அடித்த சீனாவின் மாவோ!
--------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
----------------------------------------------------------------
1962ல் பாரதிதாசன் ஒரு பாட்டு எழுதினார்.
பயந்து கொண்டே எழுதிய பாட்டு. அதிலிருந்து
ஒரு கண்ணி!
"போனால் கிடைக்கும் போரில்-அந்தச்
சீனாக்காரன் ஈரல்".
1962ல் இந்திய சீனப்போர் நடைபெற்றது.
அதையொட்டி பிரிவினைத் தடைச் சட்டத்தைக்
கொண்டு வந்தார் நேரு. உடனே திராவிட நாடு
கோரிக்கையைக் கைவிட்டார் அண்ணாத்துரை.
அண்ணாத்துரை தலைமையிலான திமுக
தலைவர்கள் காமராசரைச் சந்தித்து, தாங்கள்
திராவிட நாடு கோரிக்கையைக் குழிதோண்டிப்
புதைத்து விட்டதாகவும் எனவே தங்களைக்
கைது செய்ய வேண்டாம் என்றும் முறையிட்டனர்.
திமுகவினர் அனைவரும் நேரு அரசு தங்களைக் கைது
செய்து விடுமோ என அஞ்சி நடுங்கிக் கிடந்த காலம்
அது. ராஜனை மிஞ்சிய ராஜவிசுவாசி ஆகிய திமுகவினர்
சீனாவைக் கண்டனம் செய்து தெருக்களில் பேசினர்.
அப்போது பாரதிதாசன் எழுதிய பாட்டுத்தான் மேலே
குறிப்பிட்டது.
ஆனால் இந்திய சீனப்போரில் இந்தியா கேவலமாகத்
தோற்று விட்டது. நேருவின் தலை தொங்கிப் போய்
விட்டது..சரண் அடைந்த இந்திய ராணுவத் தளபதிகளை
கட்டி வைத்து அடித்தார் மாவோ எனப்படும் அன்றைய
சீன அதிபர் மாவோ ஜே டாங்.
இந்திய நாடாளுமன்றத்தில் அத்தனை பேரும்
நேருவைக் கேள்வி கேட்டனர். பனிமூடிய பல
ஆயிரம் சதுரமைல் பரப்புடைய நமது பூமியை
சீனா கைப்பற்றி உள்ளது. என்றாலும் அதனால்
நமக்கு நஷ்டமில்லை; காரணம் அங்கு புல் பூண்டுகூட
முளைக்காது என்றார் நேரு. இந்த பதிலால்
எரிச்சல் அடைந்த அன்றைய இந்தியாவின்
60 கோடி மக்களும் நேருவின் முகத்தில் காரித்
துப்பினர். .
நேருவின் பொறுப்பற்ற தன்மையினால், 1962ல் தொடங்கி
அண்மைக்காலம் வரை இந்தியாவை விட சீனாவே
தெற்காசியாவின் வலிமை மிக்க நாடாக மேலோங்கி
நின்றது. இந்தியா தாழ்ந்து சீனாவின் அடிபணிந்து
நின்றது.
நீண்ட காலமாக நீடித்து வந்த இந்த நிலைமை அண்மைக்
காலமாக மாறத் தொடங்கி உள்ளது. இந்த 60 ஆண்டுகளில்,
தற்போதுதான் முதன் முறையாக, சீனா இந்தியாவைக்
கண்டு அஞ்சத் தொடங்கி உள்ளது. இன்றைய இந்தியா
நேருவின் கோழை இந்தியா அல்ல என்ற உண்மை
சீனாவுக்கு உறைக்கத் தொடங்கி உள்ளது.
இதற்கெல்லாம் காரணமாக அக்னி V என்னும் இந்தியாவின்
நவீன ஏவுகணை (MISSILE) உள்ளது. இது ICBM எனப்படும்
கண்டம் விட்டுக் கண்டம் செல்லும் ஏவுகணை ஆகும்.
இது பலமுறை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டு
பரிசோதிக்கப் பட்டது. எதிர்வரும் செப்டம்பர் 23அன்று
அக்னி V ஏவுகணையானது USER TRIAL எனப்படும்
பயனாளர் சோதனைக்கு ஆட்பட உள்ளது.
USER TRIAL என்றால் என்ன? அதன் பொருள் என்ன?
இதுவரை மேற்கொண்ட சோதனைகள் தொழில்நுட்ப
ரீதியாக எல்லாம் சரியாக இருக்கின்றதா என்று அறிந்திட
ஏவுகணையின் தயாரிப்பாளர்களால் மேற்கொள்ளப்
பட்டவை. தற்போதைய USER TRIAL என்பது இறுதிக்
கட்டச் சோதனை ஆகும். இது ஏவுகணையைப்
பயன்படுத்துவோரின் கண்ணோட்டத்தில் இருந்து
மேற்கொள்ளப்படும் சோதனை ஆகும்.
அதவாது இந்தச் சோதனை வெற்றிகரமாக நடந்து
முடிந்து விட்டால், உடனடியாக இந்த ஏவுகணை
நாட்டின் ராணுவத்தில் சேர்க்கப் பட்டு விடும்.
ராணுவத்தினரால் பயன்படுத்தத் தக்க நிலையை
இந்தச் சோதனையின் வெற்றிக்குப் பிறகு இந்த
ஏவுகணை அடைந்து விடும். இது இந்தியாவின் சுதேசித்
தயாரிப்பு. DRDO நிறுவனம் இதைத் தயாரித்து உள்ளது.
ஒட்டுமொத்த சீனாவின் முழு நிலப்பரப்பும் இந்த
ஏவுகணையின் ரேஞ்சுக்குள் வந்து விடுகிறது. இதற்கு
முன்பான இந்தியாவின் அக்னி III ஏவுகணையில்
சீனாவின் சில பகுதிகள் உள்ளடங்கவில்லை. இந்த
ஏவுகணையானது அணுஆயுதங்களைச் சுமந்து கொண்டு
சென்று பல்வேறு இலக்குகளை (MULTIPLE TARGETS)
தாக்கும் வல்லமை பெற்றது. எனவே சீனா அஞ்சுகிறது;
நடுங்குகிறது. தனது அழிவு தொடங்கி விட்டது என்று
சீனாவுக்குப் புரிந்து விட்டது.
எல்லா விவரங்களையும் இக்கட்டுரையில் தமிழில்
எழுதி விட இயலாது. எனவே ஆங்கிலம் தெரிந்த
வாசகர்கள், ஆங்கில ஏடுகளில் வந்துள்ள அக்னி V
குறித்த செய்திகளை நன்கு படித்துப் புரிந்து கொள்ளவும்.
யானைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கும் ஒரு
காலம் வரும் என்ற பழமொழி போல, இன்றைக்கு
வந்துள்ள காலம் இந்தியாவுக்குக் கார்காலம்! 1962ல்
சீன அதிபர் மாவோ இந்திய பிரதமர் நேருவைக் கட்டி
வைத்து அடித்தார். இதற்கு இந்தியா பழிவாங்கும்
நேரம் நெருங்கி வருகிறது. இன்றைய சீன அதிபர்
ஜி ஜின்பிங்கை (Xi Jinping) இந்தியப் பிரதமர் மோடி
கட்டி வைத்து அடிப்பார் என்றே modern military strategyயில்
நல்ல பரிச்சயம் உள்ளவர்கள் கருதுகிறார்கள்.
-------------------------------------------------------------------------------
பின்குறிப்பு:
1) ICBM = Inter Continental Ballistic Missile என்பதில் உள்ள
Ballistic என்ற சொல்லுக்கு என்ன தமிழ்? சரியான
துல்லியமான தமிழ்ச்சொல் என்ன?
--------------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக