திங்கள், 13 செப்டம்பர், 2021

 நீட் தேர்வும், தமிழக பிண அரசியல்வாதிகளும், தற்குறி மோடி போபியா போராளிகளும்...

2012 க்கு முன் நாடு முழுவதும் மருத்துவப் படிப்பில் சேர மத்திய அரசு நடத்தும் AlPMT நுழைவுத் தேர்வு, அந்தந்த மாநிலங்கள் தனியாக நடத்தும் நுழைவுத் தேர்வு, AIIMS, JIPMER போன்ற கல்லூரிகள் தனியாக நடத்தும் நுழைவுத் தேர்வு, சிஎம்சி வேலூர் போல பிற தனியார் மருத்துவ கல்லூரிகள் நடத்தும் நுழைத்தேர்வு என மாணவர்கள் தனித்தனியே பல நுழைவுத் தேர்வுகள் எழுத வேண்டிய நிலை இருந்தது...
எனவே மாணவர்களின் நலன் கருதி, நாடு முழுவதும் ஒரே நுழைவுத் தேர்வு நடத்த MCI அறிவுறுத்தியதின் அடிப்படையில் ...
மருத்துவ படிப்பில் சேர நீட் தேர்வு கட்டாயம் என முதன் முதலில் 2012 ல் மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் - திமுக கூட்டணி தான் நாடு முழுவதும் ஒரே நுழைவுத் தேர்வு என நீட் தேர்வை அறிமுகப்படுத்தியது, அப்போ மத்திய சுகாதார துறை இணை அமைச்சரா இருந்தது நம்ம திமுக வின் காந்தி செல்வன் தான்...
2012, 13 லே MCI சார்பாக சிபிஎஸ்இ முதல் நீட் தேர்வை நடத்த, அதை பாடத்திட்டத்தை காரணம் காட்டி சில மாநிலங்கள் எதிர்த்தது, தனியார் மருத்துவ கல்லூரியான வேலூர் சிஎம்சி உட்பட 115 வெவ்வேறு மனுதாரர்கள் உச்ச நீதிமன்றத்தில் நீட்டுக்கு எதிராக வழக்கு பதிவு செய்தனர், 3 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் 2 : 1 என்ற விகிதத்தில் நீட் தேர்வை நடத்த MCl க்கு அதிகாரம் இல்லை என்று கூறி நீட்டை ரத்து செய்து தீர்ப்பளித்தது...
இந்த நீட் ரத்து தீர்ப்பை எதிர்த்து 2013 லே உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் மேல் முறையீடு செய்தது, இதே காங்கிரஸ் - திமுக கூட்டணி மத்திய அரசு தான், அந்த மேல் முறையீட்டு வழக்கில் நீட்டிற்கு எதிராக 2013 ல் அளித்த தீர்ப்பை திரும்ப பெற்று, நீட் இனி கட்டாயம் என 09.05.16 ல் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது...
இந்த வழக்கில் நீட்டிற்கு ஆதரவாக வாதாடியது நம் திமுக கூட்டணி காங்கிரசின் முக்கிய புள்ளி ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம் தான், ஆனா 2016 ல் பாடத்திட்டத்தை மாற்ற ஒரு வருடம் தமிழகத்திற்கு விலக்கு அளித்தது மத்திய பாஜக அரசு தான்...
உச்ச நீதிமன்ற தீர்ப்பின் படி 2016 ல் மோடி அரசு நீட் உட்பட மருத்துவ படிப்பு தொடர்பா சமாஜ்வாதி கட்சியின் ராம் கோபால் யாதவ், தற்போதைய விழுப்புரம் திமுக எம்.எல்.ஏ ஆர்.லெட்சுமணன், காங்கிரசின் ஜெய்ராம் ரமேஷ் உட்பட பல்வேறு அரசியல் கட்சியின் உறுப்பினர்களை கொண்ட ஒரு பாராளுமன்ற நிலைக்குழுவை அமைத்து அதன் பரிந்துரைகளின் அடிப்படையில் தேசிய மருத்துவ ஆணைய பில் 2017 ஐ உருவாக்கி 2019 ல் அதை சட்டமாக்கியது...
அதன்படி இனிமே மருத்துவ படிப்பில் சேர நாடு முழுவதும் நீட் தேர்வு கட்டாயம், அதை சிபிஎஸ்இ க்கு பதிலாக NTA எனும் தேசிய தேர்வு முகமை நடத்தும், MCI க்கு பதிலா இனி NMC என சட்டத்திருத்தங்கள் நடைமுறைக்கு வந்தது...
நீட் தேர்வை மாநில அரசாலோ ஏன் மத்திய அரசாலோ கூட தீர்மானம் எல்லாம் போட்டு தடை செய்ய முடியாது என்பது அடிப்படை அறிவுள்ள எவருக்கும் புரியும், ஆனா அறிவார்ந்த தமிழ் சமூகத்துக்கு எப்படி இது புரியாமல் போனது....
இந்த நீட் தேர்வை வைத்து அரசியல் செய்து, அதை மோடி வெறுப்பாக மாற்றி, மாணவர்களை குழப்பி, அவர்களின் பிணத்தில் அரசியல் செய்யும் அயோக்கிய திராவிட ஸ்டாக்குகளை நம்பும் தமிழர்களை என்ன சொல்வது ...
பாலிடாயில் நிதி மாதிரி தற்குறிகள் எல்லாம் தமிழர்களை ஈசியா ஏமாத்தும் நிலையில் தமிழர்கள் இருப்பது தமிழினத்திற்கே அவமானம்...
இனியாவது இந்த வெட்டி நீட் எதிர்ப்பை விட்டுட்டு பிற மாநிலங்கள் போல ஒழுங்கா நம்ம மாணவர்களுக்கு பயிற்சி குடுக்கற வழியை பாருங்க 😉
VijayaPandian Thanaraj, M Ayyanar and 6 others
67 Comments
4 Shares
Like
Comment
Share

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக