செவ்வாய், 7 செப்டம்பர், 2021

 கொரோனா மரணங்கள் மாநிலவாரியாக!

செப்டம்பர் , 2021 தேதிய  நிலவரம்.

-------------------------------------------------------- 

நியூட்டன் அறிவியல் மன்றம் 

---------------------------------------------------

1) மேற்கு வங்கம்: மக்கள்தொகை = 9.13 கோடி

கொரோனா மரணம் = 18,502. 

(முதல்வர் மமதா பானர்ஜி).


2) கேரளம்: மக்கள் தொகை 3.46 கோடி.

கொரோனா மரணம் = 21,496. 

(முதல்வர் பினராயி விஜயன்).


மமதா பானர்ஜியையும் பினராயி விஜயனையும் 

ஒப்பிட்டுப் பாருங்கள். கேரளத்தில் கொரோனா மரணம் 

21,496. கேரளத்தைப் போல் மூன்று மடங்கு 

மக்கள்தொகை மேற்கு வங்கத்தில் இருக்கிறது.

என்றாலும் கொரோனா மரணம் கேரளத்தை விடக் 

குறைவு.மேற்கு வங்கத்தில் கொரோனா மரணம் 

18,502 மட்டுமே.


மமதா பானர்ஜி, பினராயி விஜயனை விட 

கொரோனாவைக் கட்டுப் படுத்துவதில் 

திறம்படச் செயல்பட்டுள்ளார். இதைப்  

புள்ளி விவரங்கள் உறுதிப் படுத்துகின்றன.  


அடுத்து உத்தரப் பிரதேசம், கேரளம் ஆகிய 

இரண்டு மாநிலங்களையும் ஒப்பிடுவோம்.

உத்தரப் பிரதேச மக்கள் தொகை 20 கோடி.

(முதல்வர் யோகி ஆதித்யநாத்).


உபியில் கொரோனா மரணம் = 22,856.

கேரளத்தில் கொரோனா மரணம் = 21,496.

உபியின் மக்கள் தொகை கேரளத்தைப் போல 

6 மடங்கு. என்றாலும், உபியில் கொரோனா 

மரணம் கேரளத்தைப் போல் 6 மடங்கு அல்ல. 

6 மடங்கு என்றால்,ஒன்றேகால் லட்சம் கொரோனா 

மரணங்கள் உபியில் ஏற்பட்டு இருக்க வேண்டும். 

ஆனால் அப்படி ஏற்படவில்லை.


ஆக உபியின் முதல்வர் யோகி ஆதித்தியநாத் 

பினராயி விஜயனை விட மிகவும் சிறப்பாகச் 

செயல்பட்டு கொரோனாவைக் கட்டுப்படுத்தி 

மக்களின் உயிரைப் பாதுகாத்து உள்ளார்.


மூன்று மாநில முதல்வர்களைப் பார்த்தோம்.

1) மமதா பானர்ஜி 

2) யோகி ஆதித்யநாத் 

3) பினராயி விஜயன்.


முதல் இருவரும் தங்களின் மாநில மக்களின் 

உயிரைப் பாதுகாத்து கொரோனா மரணங்களைக் 

கட்டுக்குள் வைத்து இருக்கிறார்கள்.

  

ஆனால் பினராயி விஜயனோ கேரள  மக்களின் 

உயிரைப் பற்றிக் கவலைப் படாமல் 

மிக மோசமான நிர்வாகியாகச் செயல்படுகிறார்.

நேற்று ஒருநாளில் மட்டும் கேரளத்தில் 135 பேரை  

கொரோனாவுக்கு பலி கொடுத்துள்ளார் 

பினராயி விஜயன்.


கொரோனா மட்டுமல்ல ஜிகா வைரஸ் தொற்றும் 

கேரளத்தில் கட்டுக்கடங்காமல் போய்க்

கொண்டிருக்கிறது.


3.5 கோடி மலையாளிகள் அத்தனை பேரையும்

கொரோனாவுக்கும் ஜிகா வைரசுக்கும் பலி

கொடுத்து விடுவார் பினராயி விஜயன். 

  

மோடி அரசு துணிச்சலாக ஒரு முடிவு எடுத்து 

கேரள மக்களைக் காப்பாற்ற வேண்டும்.

356ஆவது பிரிவின் கீழ் பினராயி விஜயனின் 

மக்கள் விரோத ஆட்சியைக் கலைத்து விட்டு   .      

குடிஅரசுத் தலைவரின் ஆட்சியைக் 

கொண்டு வர வேண்டும். அப்போதுதான் 

கேரள மக்களின் உயிர்களைக் காப்பாற்ற முடியும்.

***************************

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக