வியாழன், 2 செப்டம்பர், 2021

தடை செய்! தடை செய்! VPNஐ தடை செய்!

தயாநிதி மாறன் முன்வைக்கும் கோரிக்கை!

இணையதளத்தின் மீது பிடி இறுகுகிறது!

--------------------------------------------------------------

நியூட்டன் அறிவியல் மன்றம் 

------------------------------------------------------------

இது ஒரு தொழில்நுட்பக் கட்டுரை. அல்லது கட்டுரைக்கான 

அறிமுகம். அறிவியல் தொழில்நுட்பம் குறித்து கணிசமாக 

எழுதி இருக்கிறேன். அதன் தொடர்ச்சியாக 

இக்கட்டுரை அமையும்.


இதற்கு முந்திய கட்டுரையும் ஒரு தொழில்நுட்பக்

கட்டுரையே. மின்னணு வழியிலான பணப் பரிவர்த்தனை 

(electronic money transfer) பற்றிய கட்டுரை அது. அதைப் 

படித்தீர்களா? என்னுடைய அறிவியல் தொழில்நுட்பக் 

கட்டுரைகளைப் படிக்காமல் தவிர்த்தால், போலி இடதுசாரி 

முகாமில் உள்ள உங்களில் பலர் காலம் முழுவதும் 

பாமரர்களாகவே இருக்க நேரிடும்.


நாடாளுமன்றக் குழுக்கள் பற்றித் தெரியுமா? தெரிந்து 

கொள்ளுங்கள். உள்துறை அமைச்சகத்துக்கான 

நாடாளுமன்றத் குழு உள்ளது. இதில் பலர் உறுப்பினர்களாக 

உள்ளனர். அவர்களில் குறிப்பிடத்தக்க இருவர் தயாநிதி 

மாறனும்  மமதா கட்சியின் அதிர் ரஞ்சன் சௌத்ரியும்.


ஒரு குறிப்பிட்ட விஷயத்தை இந்த நாடாளுமன்றக் குழு 

விவாதித்தது. ஆழமான விவாதத்தின் இறுதியில் அண்மையில் 

ஒரு முடிவும் எடுத்தது. அந்த முடிவு இதுதான்!

இந்தியாவில் VPN எனப்படும் நெட்ஒர்க்கைத் தடை 

செய்ய வேண்டும் என்பதே அந்த முடிவு.

(VPN = Virtual Private Network)


இந்தியாவில் VPNஐ தடை செய்தே ஆக வேண்டும் என்று 

நாடாளுமன்றத் குழுவில் சிங்கமென முழங்கினார் 

தயாநிதி மாறன். அவரின் கருத்தைப் புறந்தள்ள 

முடியாது. ஏனெனில் அவர் தொலைதொடர்புத் 

துறையின் அமைச்சராக இருந்தவர். தொலைதொடர்பு

பற்றி விஷயம் தெரிந்தவர். VPN என்றால் என்ன என்று 

நன்கு தெரிந்தவர்.


தமிழ்நாட்டில் உள்ள 39 எம்பிக்களில் தயாநிதி மாறனைத் 

தொடர்ந்து ஆ  ராசா அவர்களுக்கும் VPN என்றால் என்ன 

என்று தெரியும். மற்றப் பலருக்குத் தெரியாது.

உதாரணமாக காங்கிரஸ் எம்பி செல்வி ஜோதிமணிக்கு 

VPN என்றால் என்ன என்றோ அதை ஏன் தடை செய்ய 

வேண்டும் என்றோ தெரியாது.


சரி, VPN என்றால் என்ன என்று நாம் தெரிந்து கொள்வோம்.

அதற்கு அறிவியல் ஒளி ஏட்டில் நான் எழுதியுள்ள 

கட்டுரையைப் படியுங்கள். அநேகமாக செப்டம்பர் 

இதழில் வெளியாகக் கூடும்.


எனவே இந்திய அரசு VPNகளைத் தடை செய்யும் 

முடிவை எடுக்கக் கூடும். VPNகளும் DARK WEBகளும்

தடை செய்யப் படும்.   

--------------------------------------------------------------------


          





 

 

  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக