கணக்குகள்! விதைகளுடன் கணக்குகள்!
இரண்டாம் பாகம்!
-------------------------------------------------------------
பி இளங்கோ சுப்பிரமணியன்
தலைவர், நியூட்டன் அறிவியல் மன்றம்
----------------------------------------------
1) மாணவர்களுக்கான வகுப்புகளில், முதல்நாள் வகுப்புக்கு
36 பேர் வந்தனர். இரண்டாம் நாள் வகுப்பில், முதல் நாள்
வந்தவர்களை விட 19 பேர் அதிகம் வந்தனர். இவ்வாறு ஒவ்வொரு
நாளிலும் முந்திய நாள் வந்தவர்களை விட 19 பேர் அதிகம் வந்தனர்.
மொத்தம் 14 நாட்கள் வகுப்புகள் நடந்தன. எனில் எல்லா
வகுப்புகளுக்கும் சேர்த்து மொத்தம் வந்தவர்கள் எத்தனை பேர்?
(விடை: 2233 பேர்)
2) ஒரு குரங்குக் கூட்டத்தில் உள்ள குரங்குகளின்
குரங்குகள் எத்தனை?
(விடை: 16 அல்லது 48. (No unique answer)
3) வீட்டில் இருந்து மணிக்கு 20 கிமீ வேகத்தில் சென்றால், 4 நிமிடம் தாமதமாக கல்லூரியை அடையும் ராதா, வேகத்தைச் சிறிது அதிகரித்து மணிக்கு 25 கிமீ வேகத்தில் சென்றால், கல்லூரி திறப்பதற்கு 2 நிமிடம் முன்பே அங்கு சென்று விடுகிறாள். எனில் ராதாவின் வீட்டில் இருந்து கல்லூரி எவ்வளவு தொலைவில் உள்ளது?
(விடை: 10 கிமீ)
4) ஒரு பெண்ணின் நெக்லஸ் அறுந்து அதன் முத்துக்கள் சிதறி விட்டன.
ஆறில் ஒரு பங்கு முத்துக்கள் தரையிலும், ஐந்தில் ஒரு பங்கு முத்துக்கள் படுக்கையிலும் கிடந்தன. மூன்றில் ஒரு பங்கு முத்துக்களை அந்தப்
பெண்ணும், பத்தில் ஒரு பங்கு முத்துக்களை அப்பெண்ணின் கணவனும்
பிடித்துக் கொண்டனர். நெக்லசோடு ஆறு முத்துக்கள் ஒட்டிக் கொண்டிருந்தன. எனில் நெக்லசில் இருந்த மொத்த முத்துக்கள் எத்தனை?
(விடை: 30 முத்துக்கள்)
5) உயிரெழுத்துக்கள் 4 மற்றும் மெய்யெழுத்துக்கள் 6ல் இருந்து,
3 மெய்யெழுத்துக்களும் 2 உயிரெழுத்துக்களும் கொண்ட
எத்தனை வார்த்தைகளை உருவாக்க இயலும்?
(விடை: 14400).
6) இரண்டு எண்களின் கூட்டுத்தொகை 30. அவற்றின்
பெருக்கற்பலன் 216. இவ்வெண்களின் தலைகீழிகளின்
(reciprocals) கூட்டுத்தொகையைக் காண்க.
(விடை: 5/36)
7) கமலா 1, 4, 9, 16, 25, 36, ............. என்று வரிசையாகச் சொல்லிக்
கொண்டே வந்து 625ல் முடித்தபோது அதுவரை 25 எண்களைச்
சொல்லி முடித்திருக்கிறாள். அவள் சொன்ன 25 எண்களின்
கூட்டுத்தொகை என்ன?
(விடை: 5525)
8) ஒரு சரிவகத்தின் (trapezium) இணையான பக்கங்கள் 22 செமீ
மற்றும் 10 செமீ ஆகும். அதன் செங்குத்து உயரம் 5 செமீ.
எனில் அதன் பரப்பு என்ன?
(விடை: 80 சதுர செமீ)
9) ஒரு எண்ணின் 30 சதவீதம் 12.6 என்றால், அந்த எண் யாது?
(விடை: 42).
10) ஒரு செங்கோண முக்கோணத்தின் கோணங்களின்
விகிதம் 1;1:2 என்று இருக்குமானால் அதன் பக்கங்கள்
என்ன விகிதத்தில் இருக்கும்?
(விடை: 1:1: square root of 2)
---------------------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக