வியாழன், 2 செப்டம்பர், 2021

டிஜிட்டல் இந்தியாவா மயிரு இந்தியாவா!

---------------------------------------------------------------

நியூட்டன் ஆய்வியல் மன்றம் 

---------------------------------------------------------- 

ஒரு விஷயத்தைச் சொல்ல வேண்டும். ஒரு வரியில் 

சொல்லி விடலாம்தான்! ஆனால் படிக்கிறவர்களில் 

பலருக்குப் புரியாது. எனவே பீடிகைகள் தேவை.


நான் சொல்ல வரும் விஷயத்தைப் பிரிந்து கொள்ள 

வேண்டுமெனில் UPI என்றால் என்ன என்று தெரிய 

வேண்டும். UPI என்பதன் விரிவு என்ன என்று கூகுள் 

தேடலில் அறிந்து கொள்ளலாம். ஆனால் அது போதாது. 

உண்மையிலேயே UPI என்றால் என்ன, அது என்ன 

வேலை செய்கிறது, எப்படி வேலை செய்கிறது, நாம் 

பயன்படுத்தலாமா என்றெல்லாம் தெரிய வேண்டும். 

(UPI = Universal  Payment Interface)  


அடுத்து IMPS பற்றித் தெரிந்திருக்க வேண்டும். அப்படியே 

ஒன்றுக்கொன்று தொடர்புடைய NEFT, RTGS பற்றியும் 

இவற்றுக்கான நிறுவனமான NPCI பற்றியும் தெரிந்திருக்க 

வேண்டும்.

IMPS = IMmediate Payment Service  

NEFT = National Electronic Fund Transfer 

 RTGS = Real Time Gross Settlement

NPCI = National Payment Corporation of India.


இவை பற்றியெல்லாம் வங்கிகளில் பணியாற்றுவோர்,

பிற நிதி நிறுவனங்களில் பணியாற்றுவோர், பங்குச் 

சந்தை சார்ந்தோர், இத்தகைய நிறுவனங்களின் 

elite வாடிக்கையாளர்கள் ஆகியோருக்குத் தெரியும். 

இன்றைய இளைய தலைமுறையான எலக்ட்ரானிக் 

தலைமுறைக்குத் தெரியும். 


ஆனால் குப்பன், சுப்பன், முத்துசாமி, ராமசாமி,

துலுக்காணம் ஆகிய பாமரர்களுக்குத் தெரியாது.

மேலும் Dravidian scum மற்றும் Pseudo left scum ஆகியோருக்கும்

இவை பற்றியெல்லாம் ஒரு இழவும் தெரியாது. இந்த 

விஷயங்களில் அதீதத் தற்குறிகளாக இருக்கிறவர்கள் 

யாரென்றால் தமிழ்நாட்டின் போலி இடதுசாரி 

மூதேவிகள்தான். இவர்களை நிலக்குப் பொறை 

(பூமிக்குப் பாரம்) என்பார் வள்ளுவர்.    


மேற்கூறிய மின் வர்த்தக, மின் நிதிச் சேவைகளைப் 

பெற (e commerce, e finance) ஒரு நல்ல ஸ்மார்ட் போன் 

(SMART phone) வேண்டும். அதைப் பயன்படுத்தத் தெரிய 

வேண்டும். அதாவது அவற்றைப் பயன்படுத்தும் 

அளவுக்கு கணினி அறிவும் ஆங்கில அறிவும் வேண்டும்.  

அனைத்து விதமான fund transfer நடவடிக்கைகள் 

ஆங்கிலத்தில் மட்டுமே உள்ளன. எனவே ஆங்கில 

அறிவு இன்றியமையாதது.   


மேற்கூறிய அனைத்தும் (IMPS, NEFT etc)  உடனடியான 

பணப் பரிமாற்றத்தைச் (instant money transfer) 

செயலாக்குபவை. வங்கி விடுமுறை நாளிலும் 

பணத்தை ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு 

அனுப்பலாம். திடீர்ப் புளியோதரை போல திடீர்ப் 

பணப் பரிமாற்றம் இன்று சாத்தியம் ஆகியுள்ளது.

இந்த சேவைகள் அனைத்தும் 24x365ல் கிடைப்பவை. 

இதெல்லாம் டிஜிட்டல் சமாச்சாரம் என்று புரிகிறதா?


இன்று இந்த 2021ல் INSTANT MONEY TRANSFER சாத்தியம் 

ஆகியுள்ளது. எந்த இடத்தில் இருந்து புறப்பட்டு இங்கு 

வந்து சேர்ந்திருக்கிறோம் என்று தெரிந்து கொள்வது 

நல்லது. நான் மதிப்புக்குரிய குமரி அனந்தன் 

அவர்களிடம் இருந்து தொடங்குகிறேன்.


1970களில் ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்குப் 

பணம் செல்ல வேண்டுமென்றால் அதற்கு இரண்டே 

இரண்டு வழிதான் உண்டு.

1) சம்பந்தப் பட்டவர் நேரில் சென்று கொடுப்பது.

2) அஞ்சல் துறையின் மூலம் மணியார்டர் அனுப்புவது.       


திருநெல்வேலியில் ஹாஸ்டலில் தங்கிப் படிக்கும் 

மாணவனுக்கு பாவூர்ச்சத்திரத்தில் உள்ள அவனின் 

தகப்பனார் பணம் அனுப்ப வேண்டும். என்ன வழி?

சுலபமான வழியாக அன்று கடைப்பிடிக்கப் பட்டது 

இதுதான். பாவூர்ச்சத்திரத்தில் இருந்து ரயில் ஏறி,

திருநெல்வேலியில் போய் இறங்கி பையனிடம் நேரடியாகப் 

பணத்தைக் கொடுத்து விட்டு வந்து விடுவார் தகப்பனார்.


இன்னொரு வழி மணியார்டர் அனுப்புவது. இங்கு 

மு மேத்தாவின் புகழ்பெற்ற ஒரு கவிதை நினைவுக்கு 

வருகிறது. 1970களில் அவர் எழுதியது. பெற்ற தாய்க்கு 

மகன் மணியார்டர் மூலம் பணம் அனுப்புவது பற்றிய 

கவிதை.


"இந்தப் படிவத்தில் 

நான் எழுதும் தொகையை 

ஊரிலிருந்து 

இரண்டு பெரிய விழிகள் 

கவனித்துக் கொண்டிருக்கின்றன".

( மு மேத்தா, கண்ணீர்ப் பூக்கள்)


(இதைப்படிக்கிற அறிவார்ந்த வாசகர்களுக்கு ஒரு 

சிறு குறிப்பு: இதை என்னுடைய நினைவில் இருந்து 

எழுதுகிறேன். பிழை ஏதேனும் இருக்கக்கூடும்.

கண்ணீர்ப்பூக்கள்தானா? பிழை இருப்பின் திருத்துக). 

  

சரி, இங்கு குமரி அனந்தன் எங்கிருந்து வந்தார்? 

மணியார்டர் பற்றி எழுதும்போது அவர் இல்லாமலா?

அப்போதெல்லாம் 1970களில் மணியார்டர் படிவம் 

தமிழில் இல்லை; ஆங்கிலத்தில் மட்டும் இருந்தது.


தமிழில் நன்கு எழுதப் படிக்கத் தெரிந்திருந்தும் 

ஆங்கிலம் தெரியாத காரணத்தால் பலரும் 

மணியார்டர் படிவத்தை நிரப்பத் தெரியாமல் இருந்தனர்.

யாரிடமாவது உதவி கேட்க வேண்டிய நிலையில் இருந்தனர்.

இந்த அவல நிலையைப் போக்க குமரி அனந்தன்

ஆண்டுக் கணக்கில் போராடி இறுதியில் வென்றார்.


அன்று மணியார்டரில் தொடங்கிய பணம் அனுப்புதல் 

இன்று instant money transfer என்று வளர்ந்து நிற்கிறது.

இதெல்லாம் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி!


டிஜிட்டல் தொழில்நுட்பம் எவ்வளவு வளர்ந்திருக்கிறது 

என்று பார்க்க வேண்டும். நிதித்துறையிலும் வர்த்தகத் 

துறையிலும் வளர்ச்சி எப்படி இருக்கிறது என்று 

பார்க்க வேண்டும்.குறிப்பாக மின்னணுப் பணப் 

பரிவர்த்தனை எந்த அளவுக்கு வளர்ந்திருக்கிறது 

என்று பார்க்க வேண்டும். பார்ப்போமா!


திடீர்ப் பணப்பரிமாற்றம் கடந்த ஆண்டை விட இந்த 

ஆண்டில் இரண்டு மடங்காகி இருக்கிறது. ஆகஸ்டு 2021ல் 

IMPS மற்றும் UPI மூலமாக, கிட்டத்தட்ட ரூ 10 லட்சம் 

கோடிக்கு மின்னணுப் பரிவர்த்தனைகள் நடந்துள்ளன.   

Cashless transaction பல மடங்கு அதிகரித்துள்ளது. உரிய 

புள்ளி விவரங்களைத் தேடி எடுத்துப் படியுங்கள்.


இன்று காலையில் ஒரு சம்பவம். ஒரு ஓட்டலுக்குச் சென்று 

சிற்றுண்டி அருந்தினேன். அருகில் பல இளைஞர்கள் 

சிற்றுண்டி அருந்தினர். பின் என் உணவுக்குரிய பணத்தை 

நான் ரொக்கமாகச் செலுத்தினேன். என்னுடன் அமர்ந்து 

சாப்பிட்ட இளைஞர்கள் யாரும் ரொக்கப் பணத்தைச் 

செலுத்தவில்லை. அவர்கள் அனைவரும் மின்னணு 

முறையில் பணம் செலுத்தினர். PhonePe மூலமாகவும் 

பல்வேறு மின்னணு முறைகள் மூலமாகவும் அவர்கள் 

பணம் செலுத்தினர். 


இளைஞர்கள் தங்கள் ஸ்மார்ட் போன் மூலமாக e payment

செலுத்துவதை வாயைப் பிளந்து பார்த்துக் 

கொண்டிருந்தார் கறுப்புச் சட்டை அணிந்த ஒரு

புழுத்த தற்குறி. அவருக்கு கைகால் உதறல் எடுத்தது.

ஓட்டல் முதலாளியிடம் சென்று "இந்த டிஜிட்டல் 

மயிரையெல்லாம் நம்பாதீங்க சார், ரொக்கமா 

காசை வாங்கி கல்லாவில் போடுங்க" என்றார்.

இதைக்கேட்டுக் கொண்டிருந்த ஒட்டல் முதலாளிக்கு 

கோபம் தலைக்கு மேல் வந்து, சடாரென்று அவர் 

தன்னுடைய செருப்பைக் கழற்றி அந்தக் கறுப்புச் 

சட்டைத் தற்குறியை அடித்து விட்டார். கல்லடி வாங்கிய 

சொறிநாய் கத்திக் கொண்டே ஓடுவதைப்  போல  

அந்தக் கறுப்புச் சட்டைத் தற்குறியும் கத்திக் 

கொண்டே ஓடியது.

----------------------------------------------------------



  

 





     


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக