செவ்வாய், 28 செப்டம்பர், 2021

 சமூகத்தின் பொருள் உற்பத்தி பற்றிய 

அறிவு வேண்டும்!

சமூக மாற்றம் பற்றிப் பேசுகிறவனுக்கு 

சமூகத்தின் உற்பத்தி பற்றிய அறிவு அவசியம்! 

------------------------------------------------------------

நியூட்டன் அறிவியல் மன்றம் 

----------------------------------------------------

கம்யூனிசம் என்பது சமூகத்தை மாற்றும் தத்துவம்!

கம்யூனிஸ்டுகள் சமூக மாற்றத்துக்காக நிற்பவர்கள்!


சமுக மாற்றம் பற்றிப் பேசுகிற யார் எவர் ஆனாலும் 

சமூகத்த்தின் பொருள் உற்பத்தி பற்றிய அறிவைப் 

பெற்றிருக்க வேண்டும்.


ஆனால் துரதிருஷ்ட வசமாக இந்தியாவில் உள்ள 

கம்யூனிஸ்ட்டுகளுக்கு, அதாவது அவர்களில் 

99.9 சதவீதம் பேருக்கு சமூகத்தின் பொருள் உற்பத்தி 

பற்றி எதுவும் தெரியாது.


பொருள் உற்பத்தி பற்றிய அறிவு அணு அளவுக்குக்கூட 

இல்லாதவன் தன்னை கம்யூனிஸ்ட் என்று சொல்லிக் 

கொள்வது முட்டாள்தனம் மட்டுமல்ல கிரிமினல் 

குற்றமும் ஆகும்.


கொரோனா  தடுப்பூசி பற்றி அறிந்து கொள்வது  

சமூகத்தின் பொருள் உற்பத்தி பற்றிய விஷயம் 

ஆகும். கம்யூனிஸ்டுகளுக்கு இதுபற்றி நன்றாகத் 

தெரிந்திருக்க வேண்டும். ஆனால் கம்யூனிஸ்ட் 

என்றும் மாவோயிஸ்ட் என்றும் நக்சல்பாரி 

என்றும் கூறிக்கொள்ளும் மூடர்களில் 

99.99999  சதவீதம் பேருக்கு கொரோனா பற்றியோ 

தடுப்பூசி பற்றியோ பொருள் உற்பத்தி பற்றியோ 

ஒரு இழவும் தெரியாது.ஏனெனில் இவர்கள் போலிகள்.


இவர்களால் சமூகத்தை மாற்றுவது என்பது 

கனவிலோ கற்பனையிலோ கூட நடக்காது.

ஏனெனில் சமூகத்தின் பொருள் உற்பத்தி பற்றிய 

துளி அறிவு கூட இல்லாதவர்கள் இவர்கள்.


சமகால சமூகத்தில் உற்பத்திக் கருவிகள் மிகவும் 

நவீனமாகி உள்ளன (HIGHLY SOPHISTICATED). மேலும் 

அசுரத் தனமாக வளர்ந்து கொண்டும் உள்ளன. 

தொழிற்புரட்சி 4.0ன் காலம் நம் காலம்.


எனவே நம் காலத்திய சமூகத்தின் பொருள் உற்பத்தி

பற்றிய அறிவைப் பெற வேண்டுமெனில் ஒருவர் 

அறிவியல் கல்வி பெற்றிருக்க வேண்டும். குறைந்தது 

தற்காலத்திய ப்ளஸ் டூ வகுப்பின் கணிதம்,

இயற்பியல் போன்ற அறிவியல் பாடங்களில் நல்ல 

பரிச்சயம் இருக்க வேண்டும். பிளாஸ் டூ வரையிலான 

அறிவியல் அறிவு இல்லாமல், சம காலத்தின் பொருள் 

உற்பத்தி பற்றிய அறிவை யாராலும் பெற்று 

விட முடியாது.


அறிவியலும் சரி, பொருள் உற்பத்தி பற்றிய அறிவும் 

சரி, ஆங்கிலத்தில் உள்ளன என்ற உண்மையை 

இங்கு நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். எனவே 

பொருள் உற்பத்தி பற்றிய அறிவைப் பெற 

வேண்டுமெனில் ஒரு குறிப்பிட்ட அளவு ஆங்கில 

அறிவும் தேவைப் படுகிறது.


இதில் தயவு தாட்சண்யத்திற்கு இடமில்லை.

உண்மைகள் முரட்டுப் பிடிவாதம் கொண்டவை 

என்று ஒரு ஆங்கிலப் பழமொழி உண்டு. எனவே 

ப்ளஸ் டூ வரையிலான அறிவியல் அறிவும்  

ஆங்கில அறிவும் இருந்தால் மட்டுமே இந்திய 

சமூகத்தின் பொருள் உற்பத்தி பற்றிய அறிவைப்

பெற முடியும்.


பொருள் உற்பத்தி பற்றிய அறிவைப் பெறாதவன் 

சமூக மாற்றத்தை ஏற்படுத்த இயலாதவன் ஆவான்.


ஏனெனில் தமிழ் உற்பத்தி மொழியாக இல்லை.

இந்திய சமூகத்தில் ஆங்கிலமே உற்பத்தியின் 

மொழியாக இருக்கிறது.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக