செவ்வாய், 21 செப்டம்பர், 2021

 நீட் தேர்வு பற்றிய அறிக்கையை அரசிடம் 

அளித்து விட்டார் நீதியரசர் ஏ கே ராஜன்.

அந்த அறிக்கை ஆங்கிலத்தில் உள்ளது.

தமிழில் இல்லை.


ஏன் தமிழில் இல்லை என்று கேள்வி கேட்க நாதியில்லை.

தமிழில் இருக்காதுதான். ஏனெனில் தமிழானது உற்பத்தி 

மொழியாக இல்லை.


மத்திய அரசு வெளியிடும் நிபுணர் குழு அறிக்கைகளும் 

ஆங்கிலத்தில்தான் இருக்கும். பின்னர்தான் அது 

ஒவ்வொரு மொழியிலும் மொழிபெயர்க்கப் படும்.

அதற்கு நாளாகும். 


இந்த இடத்தில் ஓர் உண்மையைப் புரிந்து கொள்ள 

வேண்டும். எந்த நிபுணர் குழுவாக இருந்தாலும்,

அது ஆங்கிலத்தில்தான் தனது அறிக்கையைக் கொடுக்கும்.

இஸ்ரோ தலைவராக இருந்த கஸ்தூரி ரங்கன் குழு 

புதிய கல்விக் கொள்கை பற்றிய தனது அறிக்கையை   

ஆங்கிலத்தில்தான் எழுதியது. ஆங்கிலத்தில் உள்ள 

அறிக்கையைத்தான் மோடி அரசிடம் கஸ்தூரி ரங்கன் 

குழு அளித்தது.


அதே போல, நீட் தேர்வு பற்றிய அறிக்கையை நீதியரசர் 

ஏ கே ராஜன் குழு ஆங்கிலத்தில்தான் எழுதியது. முதல்வர் 

ஸ்டாலின் அவர்களிடம் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட 

அறிக்கையைத்தான் ஏ கே ராஜன் வழங்கினார்.


ஏன் எந்த நிபுணர் குழுவும் தமிழில் அறிக்கை வழங்குவதில்லை?

---------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக