சனி, 25 செப்டம்பர், 2021

 சூனா பூனா என்று எழுதினால் மட்டுமே 

புரிந்து கொள்ளும் குட்டி முதலாளித்துவம்!

--------------------------------------------------------

ஒற்றைச் சொல்லில் எந்த நியாயமும் 

போகவில்லை. குட்டி முதலாளித்துவ 

மனப்பான்மை எதிலும் நாசூக்கைத் 

தேடுகிறது.


பாட்டாளி வர்க்க மனப்பான்மை 

வேறு. குட்டி முதலாளித்துவ மனப்பான்மை 

வேறு. நாசூக்கு வேண்டும்தான். இதே 

நாசூக்கு என்பதை நான் discreet என்று 

ஆங்கிலத்தில் எழுதினால் அது 

அதிகபட்ச நாசூக்கு ஆகும். ஆனால் 

அது எத்தனை பேருக்குப் புரியும்?


வெண்பா எழுதி அதன் மூலம் கருத்தைச் 

சொல்வதும் நாசூக்குத்தான். அண்மையில் 

நிறையவே வெண்பாக்களை எழுதினேன்.

ஆனால் என்ன பயன்? தற்குறிகள் 

எத்தனை பேர் புரிந்து கொண்டனர்?? 


நான் 35 ஆண்டு காலம் தொழிற்சங்கத்தில் 

வேலை செய்தவன். தொழிலாளிகள் எப்படிப் 

பேசுவார்கள் என்று எனக்குத் தெரியும்.

ஆனால் மற்றவர்களுக்குத் தெரியாது.

இங்கு முகநூலில் பலர் சுயஇன்பம் 

அனுபவிக்கக் கூடிய இழிந்தவர்கள். 

அவர்களின் மரமண்டையில் ஏறுவதற்கு 

எப்படிச் சொல்ல வேண்டும் என்று 

எனக்குத் தெரியும்.


I am always right and others are always wrong.

இதுதான் நான் கடைப்பிடிக்கும் கோட்பாடு.

இது தப்பு என்று நீங்கள் கருதினால் நீங்கள் 

என்னுடைய கோட்பாட்டை disprove செய்ய 

வேண்டும்.


என்னுடைய IQ மிகவும் அதிகம்.

என்னுடைய versatilityஐ எல்லோராலும் 

புரிந்து கொள்ள இயலாது. கற்றாரைக் 

கற்றாரே காமுறுவர். இதன் பொருள் 

கல்லார் காமுறார். இந்த ரேஞ்சில் நான் 

எழுதிக் கொண்டே போனால் என்னைத் 

தவிர யாருக்கும் புரியாது.


பொதுவெளியில் எழுதும்போது, 

எல்லாருக்கும்  புரியும்படி எழுத 

வேண்டும். அப்படியானால் சூனா 

பூனா என்று எழுதுவது சில நேரங்களில் 

தவிர்க்க முடியாமல் போய் விடுகிறது.

discreetஆக எழுதினால் ஒருவருக்கும் புரியாது. 

குவான்டம் தியரியை நான் எழுதியபோது 

எத்தனை பேருக்குப் புரிந்தது? 


இந்த சமுதாயம் எப்படி இருக்கிறதோ 

அப்படித்தான் என்னுடைய எழுத்தும் 

இருக்கும். சமுதாயம் நாசூக்காக 

இருக்கிறதா? இல்லை. ஒரு சுரண்டல் 

சமுதாயம் நாசூக்காக இருக்காது.

அப்படி இருக்கும்போது நம்முடைய 

எழுத்தில் மட்டும் நாசூக்கு எப்படி இருக்க 

இயலும்?


நான் உயர்ந்த சாதியைச் சேர்ந்தவன்.

சாதித்திமிர் நிறைய உடையவன். 

(இட்டார் பெரியோர் இடாதார் 

இழிகுலத்தோர் என்று நல்வழி என்னும் 

நீதிநூலில் ஒளவையார் கூறும் 

சாதியையே நான் இங்கு கூறுகிறேன்).  

நான் ஏன் கெளரவக் குறைச்சலாக 

எழுத வேண்டும்? அதில் எனக்கு என்ன லாபம்?  


ஒட்டு மொத்த சமுதாயத்தின் IQ 

உயரும்போது சூனா பூனா என்று எழுத 

வேண்டிய தேவை இருக்காது.   

-------------------------------------------------------------

 

   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக