இயற்பியல் அறிஞர் தாணு பத்மநாபன்
மறைவுக்கு அஞ்சலி!
------------------------------------------------------------
இந்தியாவின் தலைசிறந்த இயற்பியல் அறிஞர்களுள்
முக்கியமானவர் பேராசிரியர் தாணு பத்மநாபன் (64).
கடுமையான மாரடைப்பால் கடந்த செப்டம்பர் 17ல்
புனேயில் இவர் காலமானார்.
கேரளத்தில் பிறந்த இவர் புனேயில் உள்ள விண்ணியற்பியல்
பல்கலையில் பேராசிரியராகப் பணியாற்றினார். இந்தியாவையும்
தாண்டி உலக அளவில் புகழ்பெற்ற கோட்பாட்டு இயற்பியலாளர்
இவர். உலகின் தலைசிறந்த விஞ்ஞானிகளைப் பட்டியலிட்ட
அமெரிக்காவின் ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகம், இவருக்கு
24ஆம் இடம் அளித்திருந்தது. தமது வாழ்நாளில் 300க்கும் மேற்பட்ட
ஆராய்ச்சிக் கட்டுரைகளை இவர் எழுதியுள்ளார். நிறைய
நூல்களையும் இவர் எழுதி உள்ளார்.
புனே பல்கலையில் மட்டுமின்றி, டாட்டா அடிப்படை
ஆராய்ச்சிக் கழகத்திலும் (TIFR), கேம்பிரிட்ஜ்
பல்கலையின் வானியல் கல்லூரியிலும் பேராசிரியராகப்
பணியாற்றி வந்தவர் இவர்.
பேராசிரியர் தாணு பத்மநாபனின் மறைவு மெய்யாகவே
இயற்பியலுக்கு ஈடு செய்ய இயலாத இழப்பு. அவருக்கு
சிரம் தாழ்த்தி அஞ்சலி செலுத்துவோம்.
-------------------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக