லெனினது உடல்நிலையை முன்வைத்து லெனினது கட்சியின் எதிர்காலம் குறித்த ஏற்பாடுகளை(Testament) பொய் என நிறுவ முற்படுவது அற்பத்தனமான வாதம்.
1918 ஆம் ஆண்டு அவர் சுடப்பட்டதால் லெனினது கழுத்தில் குண்டு பாய்கிறது. லெனினுக்கு மூன்று மாரடைப்புகள் வருகிறது. 1922 மே மாதம் முதல் மாரடைப்பு. 1922 டிசம்பர் மாதம் இரண்டாவது மாரடைப்பு. மூன்றாவது மாரடைப்பு 1923 மார்ச் மாதம்.
1924 ஜனவரி 21 ஆம் நாள் லெனின் மரணமடைகிறார்.
லெனினது முதல் மாரடைப்பு அவரது கழுத்திலிருந்து துப்பாக்கிக் குண்டு அகற்றப்பட்டதன் தொடர்ச்சியாக மே 1922 நடக்கிறது. லெனின் பேச்சை இழக்கிறார். பயற்சியின் பின் சில மாதங்களில் பேசவும் கட்டுரைகள் எழுதவும் செய்கிறார்.
லெனின், ஸ்டாலின்-டிராட்ஸ்க்கி மற்றும் பல சோவியத் தலைவர்கள் தொடர்பான எழுதிய இரு கடிதங்கள் 1922 டிசம்பர் 25 முதல் ஜனவரி 4 வரை அவரது மனைவி குருப்ஸ்க்கயாவும் அவரது ஸடெனோகிராபரும் இருக்க, லெனினது வலது கை செயலிழந்த நிலையில் வாய்மொழியினால் சொல்லப்படுகிறது.
லெனின் அப்போது முழுப் பிரக்ஞையுடன் பேசும் நிலையில்தான் இருக்கிறார். அவருக்கு முழுமையாகப் பேச்சு இல்லாது போவது அவரது மூன்றாவது மரடைப்பின் பின். அதாவது, 1923 மார்ச் மாதத்தின் பின். இதற்கு இருமாதங்கள் முன்பாகவே குறிப்பிட்ட இரு கடிதங்களும் டிக்டேட் செய்யப்பட்டுவிட்டன.
1918 முதல் 1923 ஜனவரி வரையிலும் பல கட்டுரைகளை லெனின் எழுதியிருக்கிறார். 1923 மார்ச்சின் பின்புதான் அவர் முழுமையாக பேசும் ஆற்றலை இழக்கிறார். இது குறித்து அவருக்கு சிகிச்சையளித்த மருத்துவர்களின் பல அறிக்கைகள் இருக்கின்றன.
குறிப்பிட்ட (1922 டிசம்பர் – 1923 ஜனவரி) ஆவணங்களில் லெனின், ஸ்டாலின் பற்றி மட்டும் அவர் தனது கருத்தைச் சொல்லவில்லை. டிராட்ஸ்க்கி உள்ளிட்டு பல தலைவர்கள் மீது தனது மதிப்பீட்டை முன்வைக்கிறார். டிராட்ஸ்க்கி குறித்த அவரது மதிப்பீடும் அந்த ஆவணத்தில் எதிர்மறையானதுதான்.
நோய்வாய்ப்பட்ட நிலையில் லெனின் டிக்டேட் செயததாகச் சொல்லப்படும் ஆவணங்கள் பொய் என நிரூபிக்கச் செயற்கையாக இருளூட்டப்பட்ட அவரது அந்திம கால புகைப்படத்தை மட்டும் போட்டால் போதாது. (அவர் மூன்றாவது மாரடைப்பின் பின்னும் 10 மாதங்கள் உயர் வாழ்கிறார்). அதுவே ஆதாராகிவிட முடியாது.
மரணப்படுக்கையில் உள்ளவர்கள் கூட தமது இறுதிநேரக் கருத்துக்களை டிக்டேட் செய்ய முடியும்.
லெனினது ஆவணத்தை மறுக்க இன்று குருப்ஸ்க்கயாவை, லெனினது ஸடெனோகிராபரை மறுக்க வேண்டும். லெனினுக்கு மாரடைப்பு ஏற்பட்ட வருடங்களிலும் அவர் எழுதிய கட்டுரைகளை மறுக்க வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக, லெனினுக்கு மருத்துவம் பார்த்த மருத்துவர்களின் சான்றாதாரங்கள் தரப்பட வேண்டும்.
ஆறு வருடங்கள் நோயிலும், இடையில் மீண்டும் செயல்பட்டுக் கொண்டிருந்தும் இருந்த ஒரு புரட்சியாளரின் இட்டுக்கட்டிய புகைப்படத்தை ஆதாரமாக வைத்து ஜல்லியடித்துக் கொண்டிருக்க முடியாது.
கிசுகிசுக் கதைகளை எழுதாமல் காலம், நோய்மை, மருத்துவம் பற்றிய ஆதாரங்களுடன் வாருங்கள். அப்போது இன்னும் விரிவான ஆதாரங்களுடன் நான் வருகிறேன்..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக