புதன், 8 செப்டம்பர், 2021

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்
பற்றிய வெண்பா!
------------------------------------------------------

இயற்றியவர்:

வீரை பி இளஞ்சேட்சென்னி 

-----------------------------------------------------

பசும்பொன்னில் தோன்றிய ஆடகப்பொன் தெய்விகமும் 

தேசியமும் கண்ணிரண்டாய்க் கொண்டகோ- காசுபணம் 

தேடாமல் மாசெதுவும் அண்டாமல் வாழ்ந்தொளிர்ந்த 

தேவரையா வாழியவே நீடு.

--------------------------------------------------------------------------

பசும்பொன்னில் -- புளிமாங்காய் 

தோன்றிய -- கூவிளம் 

ஆடகப்பொன் -- கூவிளங்காய் 

தெய்விகமும் -- கூவிளங்காய்


தேசியமும் -- கூவிளங்காய்

கண்ணிரண்டாய்க் -- கூவிளங்காய்

கொண்டகோ -- கூவிளம் 

காசுபணம் -- கூவிளங்காய்


தேடாமல் -- தேமாங்காய் 

மாசெதுவும் -- கூவிளங்காய்

அண்டாமல் -- தேமாங்காய்   

வாழ்ந்தொளிர்ந்த -- கூவிளங்காய்


தேவரையா -- கூவிளங்காய்

வாழியவே -- கூவிளங்காய்

நீடு -- காசு என்னும் வாய்பாடு.

-----------------------------------------------------

பசும்பொன்னில் தோன்றிய -- காய் முன் நேர்-- வெண்சீர் வெண்டளை   

தோன்றிய ஆடகப்பொன் -- விளம் முன் நேர் -- இயற்சீர் வெண்டளை 

ஆடகப்பொன் தெய்விகமும் --  காய் முன் நேர்-- வெண்சீர் வெண்டளை   

தெய்விகமும் தேசியமும் -- காய் முன் நேர்-- வெண்சீர் வெண்டளை   

தேசியமும் கண்ணிரண்டாய்க் -- காய் முன் நேர்-- வெண்சீர் வெண்டளை   

கண்ணிரண்டாய்க் கொண்டகோ -- காய் முன் நேர்-- வெண்சீர் வெண்டளை   

கொண்டகோ- காசுபணம் -- விளம் முன் நேர் -- இயற்சீர் வெண்டளை 

காசுபணம் தேடாமல் -- காய் முன் நேர்-- வெண்சீர் வெண்டளை

தேடாமல் மாசெதுவும் -- காய் முன் நேர்-- வெண்சீர் வெண்டளை

மாசெதுவும் அண்டாமல் -- காய் முன் நேர்-- வெண்சீர் வெண்டளை

அண்டாமல் வாழ்ந்தொளிர்ந்த -- காய் முன் நேர்-- வெண்சீர் வெண்டளை

வாழ்ந்தொளிர்ந்த தேவரையா -- காய் முன் நேர்-- வெண்சீர் வெண்டளை

தேவரையா வாழியவே -- காய் முன் நேர்-- வெண்சீர் வெண்டளை

வாழியவே நீடு -- காய் முன் நேர்-- வெண்சீர் வெண்டளை.

-----------------------------------------------------------------------------------------

மிகப்பெரிதும் காய்ச்சீரால் அமைந்த வெண்பா இது.

இதன் நலம் உணர்வீர்! 

**********************************




          






















கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக