செவ்வாய், 21 செப்டம்பர், 2021

 அக்னி மிசைல்-5…!

சீன அதிபர் ஜின் பிங் அலறல்..!
அடுத்த வாரத்தில் இந்தியா இதை பரிசோதிக்க உள்ளது. எப்படிப்பட்ட பரிசோதனை என்றால் "யூசர் ட்ரையல்".
இதனுடைய பல கட்ட சோதனைகள் ஏற்கனவே முடிந்துவிட்டன. அதாவது இப்போது இராணுவ அதிகாரிகள் இதனுடைய திறனை பரிசோதித்து பார்ப்பார்கள். அதன் பிறகு இது இந்திய ராணுவத்தில் சேர்க்கப்படும்.
இது எதிரிகளை திகிலடையச் செய்யும் ஆயுதம்.
இதன் ரேஞச் 5,000 முதல் 8,000 கிலோ மீட்டர் தூரம் சென்று தாக்கும்.
இது கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை. அணு ஆயுதத்தை ஏந்திச் செல்லும் ஏவுகணை அது மட்டுமல்லாமல் இது ஒரே நேரத்தில் ஒரு ஏவுகணையை ஏவினாலே பல இலக்குகளை தாக்கும் திறன் கொண்டது. இதனுடைய அணு ஆயுதம் பொருத்தப்பட்ட பகுதி பல துண்டுகளாகப் பிரிந்து பல்வேறு இலக்குகளை அழிக்கும்.
இதனுடைய வேகமும் துல்லியமும் எதிரிகள் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு மேம்படுத்தப்பட்டுள்ளது.
இதை தடுத்து நிறுத்துவதும் இடை மறிப்பதும் இயலாத ஒரு காரியம்.
அதனால்தான் சீனாக்காரன் அலறல் சத்தம் கொஞ்சம் அதிகமாகவே கேட்கிறது.
அணு ஆயுதங்களையும் அதன் தொழில்நுட்பத்தையும் வட கொரியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் விற்று பணம் சம்பாதிக்கும் சீனா இந்தியாவில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட மிசைலை பரிசோதித்து பார்ப்பதால் ஆசியாவின் அமைதி கெட்டு விடும் என்று புலம்புகிறான்
சீனாவின் அலறலுக்கு முக்கியமான காரணம் இது முழுக்க முழுக்க உள் நாட்டில் தயாரிக்கப்பட்டது. இதை அதிக எண்ணிக்கையில் இந்தியா தயாரித்து ராணுவத்தில் சேர்த்து விடுமேயானால் சீனாவின் மொத்த இடங்களும் இந்த ஏவுகணையின் ரேஞ்சுக்குள் வந்துவிடும்.
வாலாட்டினால் சீனாக்காரன் தொலைந்தான்.
உடனே சீன கைக்கூலிகள் சீனாவிடம் இதுபோல் இல்லையா..? என்று கேட்பார்கள்.
இருக்கிறது. ஆனால் அதெல்லாம் வெடிக்காத பட்டாசுகள்.
அதன் தொழில்நுட்பம் காப்பி அடிக்கப்பட்ட கீழ்த்தரமான, இரண்டாம் தரமான தொழில்நுட்பம். சீனாக்காரனே அவற்றை நம்புவதில்லை. அதுதான் அவனுடைய பயத்துக்கு காரணம்.
-------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக