வலதுசாரி என்பவன் யார்?
வலதுசாரியின் அடையாளம் எது?
-------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-----------------------------------------------
1) எவன் ஒருவன் தடுப்பூசியை எதிர்க்கிறானோ
தடுப்பூசி போடக்கூடாது என்று பிரச்சாரம்
செய்கிறானோ, அந்த இழிந்தவன்
வலதுசாரி ஆவான்.
2) எவன் ஒருவன் அல்லோபதி என்னும் அறிவியல்
மருத்துவத்தை எதிர்க்கிறானோ, அந்த இழிஞன்
வலதுசாரி ஆவான்.
3) எவன் ஒருவன் மின்னணு வாக்குப் பதிவு
இயந்திரத்தை (EVM) எதிர்க்கிறானோ, அவன்
அறிவியலை எதிர்ப்பவன் ஆகிறான்.
அவன் வலதுசாரி ஆவான்.
4 எவன் ஒருவன் மார்க்சியத்தால் நிராகரிக்கப்பட்ட,
சோவியத் ஒன்றியத்தில் ஜோசப் ஸ்டாலினால்
தடை செய்யப்பட்ட, போலி அறிவியலான
ஹோமியோபதியைக் கட்டிக் கொண்டு
அழுகிறானோ, அவன் இழிந்த வலதுசாரி
ஆவான்.
போலிக் கம்யூனிஸ்ட் கட்சிகளான CPI.CPM
கட்சிகளில் பலர்,
போலி நக்சல்பாரிக் குழுக்களில் சிலர்,
போலி மாவோயிஸ்ட் தற்குறிகள்
போலி இடதுசாரி, போலி முற்போக்கு
இப்படிப் பலரும் வலதுசாரிகளே!
இவர்கள் 1) EVMஐ எதிர்த்தவர்கள்.
2) அறிவியல் மருத்துவமான அல்லோபதியை
எதிர்த்தவர்கள்.
3) தடுப்பூசியை எதிர்த்துப் பிரச்சாரம்
செய்தவர்கள்.
4) ஹோமியோபதியைக் கட்டிக் கொண்டு
அழுதவர்கள்.
இவர்கள் அனைவரும் வலதுசாரிகளே!
--------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக