சனி, 18 செப்டம்பர், 2021

இணையத்தில் மேலும் ஒரு மூடுவிழா!

மோடி ஆட்சியின் அவலம்!

மோடியின் கையாலாகாத்தனத்தைக் கண்டித்து 

மார்க்சிஸ்டுகளின் கமலாலய முற்றுகை!

-------------------------------------------------------

நியூட்டன் அறிவியல் மன்றம் 

-----------------------------------------------

10 ஏக்கர் பரப்பில் ஒரு புல்தரை. கண்ணுக்கெட்டிய 

தூரம் வரை ஒரே பச்சை! இப்புல்வெளியில் மாடு 

மேய்வது போல, இணையம் எனப்படும் 

இன்டர்நெட்டுக்குள் நாம் நுழைந்து விரும்பிய 

எல்லா சைட்டுகளையும் (sites) பார்க்கிறோம்.

இதை இணையத்தில் உலவுதல் அல்லது மேய்தல் 

என்று சொல்கிறார்கள்.  ஆங்கிலத்தில் browsing என்று 

சொல்கிறார்கள்.


இவ்வாறு browsing செய்வதற்கு ஒரு browser வேண்டும்.

Browser என்றால் தமிழில் இணைய உலவி என்று 

சொல்ளலாம். இணையத்தில் நிறைய browsers 

உள்ளன. ஏதேனும் ஒன்றிரண்டு browserன் பெயர் சொல்ல 

முடியுமா? 


போலி இடதுசாரிகள், முகநூலில் சுயஇன்பம் 

அனுபவிக்கும் புழுத்த போலி மார்க்சிய உதிரிகள், போலி 

நக்சல்பாரிகள் இப்படிப் பலருக்கும் browser என்றால் 

ஒரு இழவும் தெரியாது. எனவே ஏதேனும் ஒரு browserன் 

பெயரைச் சொல்லு என்றால் இந்தப் போலிப் புழுக்களால் 

சொல்ல முடியாது. அவர்கள் பெருந் தற்குறிகள்.     


எனவே நானே சொல்லி விடுகிறேன். இன்று மிகவும் 

பிரபலமாக இருக்கும் ஒரு பிரௌசர் Google Chrome பிரௌசர் 

ஆகும். பல ஆண்டுகளுக்கு முன்பு, இணையம் வந்த 

அந்த ஆரம்பக் காலத்தில் ஒரு பிரௌசர் மிகவும் 

புகழ் பெற்று இருந்தது. அது என்ன? நினைவுக்கு 

வருகிறதா?


அதுதான் மைக்ரோசாப்ட்டின் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர்.

இந்த பிரௌசருக்கு மூடுவிழா நடத்துகிறார் பில் கேட்ஸ்.

அதாவது மைக்ரோசாஃப்ட் நிறுவனம் இந்த பிரௌசரை 

முடிவுக்குக் கொண்டு வருகிறது. பில் கேட்ஸ்தான் 

மைக்ரோசாஃப்ட்டின் முதலாளி என்று தெரியுமாடா 

போலி இடதுசாரித் தற்குறிகளே!  


தற்போது அடுத்த ஆண்டான 2022 ஜூன் மாதம் 15ஆம் 

தேதியன்று இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரரின் சேவையை 

முடிவுக்கு கொண்டு வருவதாக மைக்ரோசாஃப்ட் 

அறிவித்துள்ளது. என்னைப்போல் பலர் எப்போதோ IEக்கு 

அதாவது இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரருக்கு  குட்பை 

சொல்லி விட்டோம்.


பல ஆண்டுகளுக்கு முன்பு எழுத்தாளர் சுஜாதா எழுதி 

இருந்தார். இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரருக்கு பதிலாக 

மொசில்லா பயர்பாக்ஸைப் பயன்படுத்துங்கள் என்று.


இத்தனை ஆண்டுகளில் நான் மூன்றே மூன்று பிரௌசர்களை 

மட்டுமே, பிரதானமாக, பயன்படுத்தி வந்துள்ளேன்.

அவை 1) IE 2) மொஸில்லா 3) க்ரோம்.


சரி, இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரரின் மூடுவிழாவுக்கு 

யார் காரணம்? வேறு யார், மோடிதான் என்கிறார் 

எங்களூர் மார்க்சிஸ்ட் கட்சியின் (CPM) மாவட்டக் 

குழு உறுப்பினர். அதை ஆமோதிக்கிறார் பக்கத்து 

ஊரில் உள்ள போலி நக்சல்பாரி மலப்பெருமாள்.


எனவே நாளைக்கு பாஜக அலுவலகமான கமலாலயத்தை 

முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்த அறைகூவல் 

விடுத்துள்ளது இடதுசாரி ஒற்றுமைக் குழு.


மூடாதே மூடாதே 

எக்ஸ்ப்ளோரரை மூடாதே!

மோடியே மூடாதே!

பாஜகவே மூடாதே!

இப்படியான கோஷங்களால் நாளைக்கு காற்றின் 

அடர்த்தி அதிகமாகும். மோடியை கண்டிக்க வாரீர்!

*************************************************      

 


          

   


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக