சனி, 4 செப்டம்பர், 2021

 நான் ஏன் மூர்ச்சை ஆனேன்?

கயாஸ் தியரி கூறுவது என்ன?

---------------------------------------------

நியூட்டன் அறிவியல் மன்றம் 

--------------------------------------------

இந்தியாவில் VPN எனப்படும் தொழில்நுட்ப 

வலைப்பின்னல் தடை செய்யப் படக்கூடும்.

இது அண்மைச் செய்தி.

 

உள்துறைக்கான நாடாளுமன்றக்  

குழுவானது VPN பற்றி விவாதித்து 

VPNகளைத் தடை செய்ய வேண்டும்

என்று முடிவு எடுத்து, பிரதமருக்கு

அனுப்பி உள்ளது. இதில் பிரதமர் 

மோடி முடிவு எடுப்பார். அவர் தமது 

அமைச்சரவையைக் கூட்டி முடிவு எடுப்பார்.


அதிர்ஷ்டவசமாக தொலைதொடர்புத் 

துறையின் தற்போதைய அமைச்சராக 

இருப்பவர் அஸ்வினி வைஷ்ணவ் அவர்கள்.

He is an IITian. கான்பூர் ஐஐடியில் எம் டெக் 

பட்டம் பெற்றவர்.நல்லதொரு தொழில்நுட்ப 

அறிஞர். (அவர் ஐ  ஏ எஸ் தேர்வில்  தேறி, 

ஐ ஏ எஸ் அதிகாரியாகப் பணியாற்றியதும்  

அமெரிக்கா சென்று  வணிக மேலாண்மை

பயின்றதும் கூடுதல் தகவல்கள்). 


எனவே VPNகளைத் தடை செய்ய வேண்டுமா 

வேண்டாமா என்பது பற்றி  யாரினும் 

கூடுதலாக அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் 

நன்கறிவார். எனவே நாம் கவலைப்பட 

வேண்டியதில்லை. நிற்க.


முன்பெல்லாம் VPN தேவைப்படும் 

நிறுவனங்களுக்கு BSNL, AIRTEL போன்ற 

சேவை வழங்குநர்களே, VPNஐ வழங்கி 

வந்தனர். இன்று அப்படியா?

ஏகப்பட்ட FREE VPNகள் இணையத்தில் 

இலவசமாகக் கிடைக்கின்றன.


CBSE பாடத்தில் ப்ளஸ் டூவில் கம்ப்யூட்டர் 

சயன்ஸ் படித்த ஒரு மாணவன், இன்று 

இணையத்தில் கிடைக்கும் இலவச VPNஐ 

பயன்படுத்தி பங்குச் சந்தையில் பங்குகளை 

வாங்குகிறான். தான் செலுத்த வேண்டிய 

PAYMENTS அனைத்தையும் PUBLIC WiFi spots

மூலம் அரசாங்கம்  வழங்கும் இலவச WiFiஐ 

பயன்படுத்தி, தனக்கு கிடைத்த free VPN

வழியாக மிகவும் பாதுகாப்பான இணைய 

வழிப் பயணத்தை மேற்கொள்ளுகிறான்.


10,12 ஆண்டுகளுக்கு முன்பு, 2010ல் என்று 

நினைக்கிறேன், எங்கள் BSNL அலுவலகத்துக்கு 

வந்த ஒரு பெரும் தனியார் நிறுவன அதிகாரி,

(HDFC என்பதாக ஞாபகம்) எங்களின் VPN TARIFF 

எவ்வளவு என்று கேட்டபோது, TARIFFஐ 

நான் அவரிடம் கூறியதையும், அவர் 

மூர்ச்சை அடைந்து விழுந்ததையும் இப்போது 

எண்ணிப் பார்க்கிறேன்.


என் பக்கத்து வீட்டில் ஒரு சைவப் 

பிள்ளைமார் குடும்பம். திருநெல்வேலிக் 

காரர்கள். அவர்கள் வீட்டுப் பையனிடம் 

கேட்டபோது, அவன் இலவச VPNஐ 

பயன்படுத்துவதாகக் கூறினான்.

இப்போது மூர்ச்சையாக வேண்டியது 

என்னுடைய டர்ன். எனவே நான்

மூர்ச்சையானேன்.    

                      

என்னை மூர்ச்சையடைய வைத்த பையன் 

வேறு யாருமல்ல; முன்னர் எங்கள் 

அலுவலகத்துக்கு வந்து VPN TARIFFஜக் கேட்டு 

மூர்ச்சையானாரே, ஒரு HDFC அதிகாரி!

அவரின் மகன்தான் இவன் என்கிறது 

கயாஸ் தியரி. நிற்க.  


இந்திய அரசானது பின்வருமாறு 

முடிவெடுக்கும் என்று நான் கருதுகிறேன்;


1) dark webஐ முழுமையாகத் தடை 

செய்யும்.


2) VPNஐ selectiveஆகத் தடை செய்யும்.

இதற்கேற்ற ஒரு மெக்கானிஸத்தை 

அரசு உருவாக்கும்.

****************************************

  

 

  


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக