புதன், 8 மார்ச், 2017

போற்றுதலுக்குரிய பெண்கள்!
-----------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
--------------------------------------------------------
மகத்தான சாதனைகளைப் புரிந்த
போற்றுதலுக்கும் பின்பற்றுதலுக்கும் உரிய
மகத்தான பெண்களில் தலையாய பெண்கள்:

1) ரோசா லக்ஸம்பர்க் (1871-1919): போலந்தில் பிறந்து
ஜெர்மனியில் வாழ்ந்தவர். சிறந்த மார்க்சிய
சிந்தனையாளர்; தத்துவஞானி. நாஜிப்படைகளால்
கொல்லப்பட்டார்.

2) மேரி கியூரி (1867-1934): போலந்தில் பிறந்து பிரான்சில்
வாழ்ந்தவர்; இரண்டு முறை நோபல் பரிசை வென்ற
இயற்பியல் மற்றும் வேதியியல் விஞ்ஞானி.   

3) கிளாரா ஜெட்கின் (1857-1933): ஜெர்மன் தேசத்து
மார்க்சிய அறிஞர்: பெண்ணுரிமைச் செயல்பாட்டாளர்.
சர்வதேச மகளிர் தினத்தை உலகிற்குத் தந்தவர்.

4) மற்றும் அ) வாலன்டினா தெரெஸ்கோவா
(விண்வெளியில் முதன் முதலில் பறந்த பெண்மணி)
ஆ) கல்பனா சாவ்லா (விண்வெளி விஞ்ஞானி)
இ) சுனிதா வில்லியம்ஸ் (விண்வெளி விஞ்ஞானி)
ஈ) சகுந்தலா தேவி (கணித மேதை)
ஆகிய இவர்களின் வரலாற்றைப் படிப்போம்.
இவர்களால் உந்துசக்தி பெறுவோம்.
பட்டியல் நீள்கிறது.
************************************************************************

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக