ஞாயிறு, 12 மார்ச், 2017

உபி பாஜக வெற்றியின் விளைவு
ஜனாதிபதியாக பாஜக வெல்லும்!
ராஜ்யசபா பெரும்பான்மை.

மீண்டும் பாஜகவில் சேரலாமா?
திருநாவுக்கரசர் மனக்குழப்பம்!

பாஜகவில் சேர
திருநாவுக்கரசர் தூது!
H ராஜா எதிர்ப்பு
இல கணேசன் வரவேற்பு!

பொது சிவில் சட்டம்
இனி ஆழமாக விவாதிக்கப்படும்!
உபி வெற்றி எதிரொலி!

ஆர்கே நகரில் பாஜக
போட்டியிட வேண்டும்!
போட்டியிட மறுத்து
ஒதுங்குவது இழுக்கு!

இழுக்கு என்றால் கேவலம் என்று பொருள்.
இன்றைய தலைமுறைக்கு இதற்குக்கூட
பொருள் தெரியாத நிலை உள்ளது.


ஆடிக்காற்றில் அம்மியே பறக்கும்போது
திருநாவுக்கரசரும் பறக்கிறார்!
------------------------------------------------------------------------
ஹெச் என் பகுகுணா என்பவர் யார் என்று தெரியுமா?
உபி முதல்வராக இருந்தவர்; மறைந்த பிரபல காங்கிரஸ்
தலைவர். இவர் மகள் திருமதி ரீட்டா பகுகுணா ஜோஷி.
இவர் உபி மாநில காங்கிரஸ் தலைவராக இருந்தவர்.
இவர் உபி தேர்தலுக்கு சிலநாள் முன்னதாக,
காங்கிரசில் இருந்து விலகி, பாஜகவில் சேர்ந்தார்.

பாஜக இவருக்கு சீட் கொடுத்தது. தற்போது இவர்
வென்று விட்டார். நாளை அமைச்சரும் ஆகி விடுவார்.
இவர் மாநில காங்கிரஸ் தலைவராக இருந்தவர்.
திருநாவுக்கரசரை விட ஆயிரம் மடங்கு பெரியவர்.
ஆடிக்காற்றில் அம்மியே பறக்கும்போது, திருநாவுக்கரசர்
போன்ற அப்பளங்கள் பறப்பதற்கு கேட்கவா வேண்டும்?

எனவே திருநாவுக்கரசர் பாஜகவில் சேர வாய்ப்பு
பிரகாசமாக உள்ளது!பாஜகவில் இருந்தபோது,
திருநாவுக்கரசர் தொலைதொடர்புத்துறை
இணையமைச்சராக இருந்தார் என்பது
குறிப்பிடத் தக்கது.
 

(தகவல் ஆதாரம்: ஈவிகேஎஸ்  இளங்கோவன் வட்டாரம்)
**********************************************************************


அகிலேஷ் கொழுந்தியாள்
அபர்ணாவை தோற்கடித்த
ரீட்டா பகுகுணா உபி பாஜக
மகளிர்நல அமைச்சர் ஆகிறார்!
அமைச்சராவார்

அகிலேஷ் மனைவி டிம்பிள் ஒரு MP.
கொழுந்தியாள் அபர்ணா தோல்வி.
ஓரகத்தி தோல்வியால்
குடும்பமே சோகம்!

ஓரகத்தி அபர்ணா தோல்வியால்
முலாயம் குடும்பமே சோகம்!
அகிலேஷ் மனைவி டிம்பிள் MP ஆறுதல்!


ஆர்கே நகரில் தனித்துப் போட்டி!
டெப்பாசிட் இழக்க இருக்கும்
கேப்டன் வாழ்க!
4000 ஒட்டு பெறலாம்!
தேமுதிக 4000 ஒட்டு பெறும்

ஆர்கே நகரில் போட்டியிடாதே
வைகோவுக்கு நடராசன் கட்டளை!
வைகோ: சரிங்க எசமான்.

இரட்டை இலை சின்னம்
கிடைக்காவிட்டால்
ரோடு உருளை சின்னத்தில் நிற்க
TTV தினகரன் முடிவு!
 

கற்பழிப்புக் குற்றவாளி
அகிலேஷ் கட்சி அமைச்சர் பிரஜாபதி
அமேதியில் தோல்வி!

இல்லை; பெருமுதலாளித்துவம் என்பது
இந்திய நாடு முழுவதையும் தழுவியும், நாடு கடந்த
சர்வதேசத் தன்மை கொண்டும் மூலதனச்
செயல்பாடுகளை மேற்கொள்ளுவது. இந்திய நாட்டின்
அரசாங்கத்தை தன்னுடைய நம்பகமான பிரதிநிதிகள்
மூலமாக ஆட்சி செய்வது பெருமுதலாளித்துவத்தின்
பணிகளில் ஒன்று.
**
எந்த ஒரு அரசியல் கட்சியும் ஏதேனும் ஒரு வர்க்கத்தின்
அல்லது சில வர்க்கங்களின் பிரதிநிதியே என்பது
மார்க்சிய பாலபாடம். அந்த இலக்கணப்படி,
திமுக, அதிமுக உள்ளிட்ட எந்த ஒரு மாநிலக்
கட்சியும் பெருமுதலாளித்துவத்தின் பிரதிநிதிகள்
அல்ல; மாநிலக் கட்சிகள் பெருமுதலாளித்துவத்திற்கு
எதிராக நின்று கொண்டு, தங்களின் பிராந்திய
நலன்களை பாதுகாக்க முனைவார்கள். எனவே மாநிலக்
கட்சிகளை பிராந்திய பூர்ஷ்வாக்களின் கட்சிகள்
(parties representing Regional Bourgeoise) என்று மார்க்சியம்
வரையறுக்கிறது.
**
இரோம் ஷர்மிளாவின் தவறு அவர் அரசியலற்றவராக
(apolitical) இருந்ததே. இது சர்வ நிச்சயமாக
குட்டி முதலாளித்துவப் பண்பு.        

நடராசன் வைகோ நெடுமாறன்
ஆலோசனை!
மீண்டும் பாஜக கூட்டணிக்கு
வைகோ முயற்சி!




கச்சத்தீவு கைநழுவாமல் இருக்க தன்னால்
இயன்றது அனைத்தையும் செய்தவர் கலைஞர்.
உணர்வுபூர்வமாகச் செய்தவர். அந்தக் காலக்
கட்டத்தில், இதை நான் என்னுடைய நேரடி அனுபவம்
மூலமாக உணர்ந்தவன் நான். ஆதாரங்கள் உள்ளன.
நெருக்கடி நிலையின்போது, இந்திரா அம்மையார்
திமுக ஆட்சியை 356இல் கலைக்க முடிவு செய்ததற்கு
இதுவும் ஒரு காரணம் ஆகும். விரிவாகப் பின்னர்
எழுதுகிறேன். காங்கிரஸ் கட்சியின் கோபண்ணா
ஆசிரியராக இருக்கும் தேசிய முரசு ஏட்டில் இது
குறித்த விளக்கம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு
விரிவாக்க கோபண்ணா அவர்களால் எழுதப் பட்டது.
தேடி எடுத்து சில ஆதாரங்களை தர முயல்கிறேன்.





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக