வெள்ளி, 3 மார்ச், 2017

(8) நெடுவாசலில் தோண்டி எடுக்கப்பட இருக்கும்
எரிவாயு என்ன? மீத்தேனா? ஷேல் வாயுவா?
அல்லது வேறு எதுவுமா என்றே தெரியாமல்
பொய்களைப் பரப்பும் சிந்தனைக் குள்ளர்கள்!
---------------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
---------------------------------------------------------------------------------------
1) நெடுவாசலில் தோண்டி எடுக்கப்பட இருக்கும்
எரிவாயு எது? குட்டி முதலாளித்துவ சிந்தனைக்
குள்ளர்களிடம் இந்தக் கேள்வியை நியூட்டன்
அறிவியல் மன்றம் முன்வைக்கிறது.

2) நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு
உரிமம் பெற்றுள்ள நிறுவனம் ஜெம் லபாரட்டரீஸ்
என்ற நிறுவனம். இந்த நிறுவனம் எந்த எரிவாயுவைத்
தோண்டி எடுக்கப் போகிறது?

3) இந்தக் கேள்விக்குப் பதில் தெரியாமல்தான் அனைத்து
குட்டி முதலாளித்துவக் குள்ளர்களும் நச்சுக்
கருத்துக்களைப் பரப்பிக் கொண்டு இருக்கிறார்கள்.

4) ONGC நிறுவனத்திற்கும் நெடுவாசல் திட்டத்திற்கும்
தொடர்பு இல்லை. ONGCக்கு நெடுவாசலில் உரிமம்
வழங்கப் படவில்லை.

5) ஹைட்ரோ கார்பன் என்பது பொதுப்பெயர் (generic name).
என்றாலும் இதில் ஆகப் பிரதானமாக இருப்பது
மீத்தேன் (CH4)தான்.

6) பூமிக்கு அடியில் வெவ்வேறு இடங்களில் மீத்தேன்
கிடைக்கிறது. கிடைக்கிற இடத்தைப் பொறுத்து
மீத்தேனுக்கு வெவ்வேறு பட்டப் பெயர்கள் வழங்கப்
படுகின்றன.

7) உதாரணமாக, பூமிக்கு அடியில் உள்ள களிமண்
தன்மை வாய்ந்த ஷேல் (shale) பாறைகளில் மீத்தேன்
கிடைக்கிறது. இது ஷேல் வாயு என்று பெயர் பெறுகிறது.

8)பூமிக்கு அடியில், சுண்ணாம்புப் பாறைகளில் மீத்தேன்
கிடைக்கிறது. இது இறுக்கவாயு (tight gas) எனப் பெயர்
பெறுகிறது.

9) பூமிக்கு அடியிலுள்ள நிலக்கரி அடுக்குகளில் மீத்தேன்
உட்கவரப்பட்டு உள்ளது. இது நிலக்கரிப் படுக்கை மீத்தேன்
(CBM =Coal Bed Methane) எனப்படுகிறது.

10) ONGC நிறுவனம் நாடு முழுவதும் இயற்கை வாயுவை
தோண்டி எடுக்கிறது. இயற்கை வாயு என்பதிலும்
பிரதானமாக இருப்பது மீத்தேன்தான்.

11) இங்குதான் ஒரு முக்கியமான விஷயத்தைக்
கவனிக்க வேண்டும். மேற்கூறிய எல்லா இடங்களிலும்
கிடைப்பது மீத்தேன்தான் என்றாலும், பூமிக்கு அடியில்
கிடைக்கிற இடத்தைப் பொறுத்து, அதைத்தோண்டி
எடுக்கும் தொழில்நுட்பம் மாறுபடுகிறது; பாரதூரமாக
மாறுபடுகிறது.

12) ஆக, என்ன தொழில்நுட்பம் பயன்படுகிறது
என்பதுதான் தீர்மானிக்கும் காரணி (the deciding factor).
ஆனால், சிந்தனைக் குள்ளர்களில் ஒருவருக்குக் கூட 
இந்த உண்மை தெரியாது. இது வேதனையானது.   

13) திட்டத்திற்கு நாளொன்றுக்கு எவ்வளவு தண்ணீர்
தேவைப்படும்? நிலத்தடி நீர் மாசு படுமா? நிலத்தடி
நீரை வெளியேற்ற வேண்டுமா? விவசாய
விளைநிலங்கள் பாதிக்கப் படுமா? சுருங்கக்
கூறின், இத்திட்டம் நல்லதா, கெட்டதா? இந்தக்
கேள்விகளுக்கு எல்லாம் விடை தருவது
பயன்படுத்தப் படும் தொழில்நுட்பமே.

14) என்ன தொழில்நுட்பம் பயன்படப் போகிறது
என்ற கேள்விக்கே விடை தெரியாமல், கற்பனையில்
சுயஇன்பம் காண்கிறது குட்டி முதலாளித்துவம்.

15) நீரியல் விரிசல் (hydraulic fracture or fracking) முறையை
படம் போட்டு பாகங்களைக் குறித்து போலி
அறிவியல் விளக்கம் தரும் புதிய தலைமுறை போன்ற
ஊடகங்களால், நீரியல் விரிசல் முறைதான்
செயல்படுத்தப் படும் என்று நிரூபிக்க முடியுமா?

16) மேற்கு வங்கத்தில் ராணிகஞ்சில் மீத்தேன் (CBM)
எடுக்கப் படுகிறது. அங்கு பயன்படுத்தும்
தொழில்நுட்பத்தை தமிழ்நாட்டில் நெடுவாசலில்
பயன்படுத்த முடியாது. ஏனெனில், மீத்தேன்
கிடைக்கிற இடத்தைப் பொறுத்து, தோண்டி எடுக்கும்
தொழில்நுட்பம் மாறும்.

17) நாம் மேலே கூறியவை மிக மிக அடிப்படையான
உண்மைகள். இதில் எதை பற்றியுமே தெரிந்து
கொள்ளாமல், விகடன் மின்னிதழ் போன்ற இதழ்களில்
"எழுதும்"(!)  பல போலி அறிவியல் கசடர்கள், மக்களிடம்
அச்சத்தை விதைத்துக் கொண்டு இருக்கிறார்கள்.

18) இந்த சிந்தனைக் குள்ளர்கள் அறிவியல் என்ற
பெயரில் பிதற்றும் அனைத்தும் தற்குறித்தனத்தின்
வெளிப்பாடுகளே என்று நாங்கள் அடித்துக்
கூறுகிறோம்.

19) நாம் முன்வைத்த கேள்விகளுக்கு சிந்தனைக்
குள்ளர்கள் பதிலளிக்க வேண்டும்.  

20) நியூட்டன் அறிவியல் மன்றம் மட்டுமே ஹைட்ரோ
கார்பன் குறித்த மெய்யான அறிவியலை அதன்
துல்லியத்துடன் எழுதுகிறது. இதுவே உண்மை.
எங்களின் உரிமைகோரல் (CLAIM) தவறு என்றால்,
அதை DISPROVE செய்யுங்கள் என்று நியூட்டன்
அறிவியல் மன்றம் சவால் விடுகிறது.
**********************************************************************




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக