வெடிகுண்டுக் கட்டுரை:
-----------------------------------------------
தமிழக முதல்வர் ஜெயேந்திரரும்
உபி முதல்வர் யோகி ஆதித்யநாத்தும்!
-------------------------------------------------------------------------
1) உண்மையில் தமிழக முதல்வராக (DE FACTO CM)
இருப்பவர் போற்றுதலுக்குரிய ஜகத்குரு
ஜெயேந்திர சரஸ்வதி அவர்களே! அப்படியானால்
எடப்பாடி பழனிச்சாமி முதல்வர் இல்லையா என்று
ஐயம் எழலாம். உண்மை என்னவெனில் எடப்பாடியும்
முதல்வரே! ஆம், அவர் வெறும் சட்டப் படியான (DE JURE)
முதல்வரே.
2) de facto, de jure ஆகிய சொற்கள் ஆங்கிலத்தில் புழங்கும்
அயல்மொழிச் சொற்கள். சட்டத் துறையில் இச்சொற்கள்
புழங்குகின்றன.
3) ஆனால் உபி முதல்வர் யோகி ஆதித்தியநாத் அவர்கள்
de facto முதல்வராகவும், de jure முதல்வராகவும் இருந்து
வருகிறார். அவர் முற்றதிகாரம் உள்ள, சட்டமன்ற
உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முறையான
முதல்வர்.
4) ஆனால் ஜெயேந்திரர் அவர்கள் திரைமறைவில்
அதிகாரம் செலுத்தி வரும் ரகசிய முதல்வர். ரகசிய
வியாதி வந்தவன் வெளியே சொல்ல மாட்டான். அது
போலவே, தான்தான் முதல்வர் என்றாலும். அதை
வெளியே சொல்ல மாட்டார் ஜெயேந்திரர்.
5) நடராசன், ஜெயேந்திரர், டாக்டர் சுப்பிரமணியன்
சுவாமி ஆகிய மூவரும் ஒன்று சேர்ந்து, ஜெயேந்திரரை
மெய்யான முதல்வராகவும் எடப்பாடியை வெறும்
பெயரளவிலான முதல்வராகவும் ஆக்கி வைத்துள்ளனர்.
6) பன்னீர் செல்வத்தைப் போல, நாளைய தினம்
எடப்பாடியும் கலகம் விளைவித்து விடக் கூடாது
என்பதில் நடராஜனும் சசிகலாவும் மிகவும்
கவனமாக உள்ளனர். எனவே எடப்பாடியை
அடக்கி வைக்க ஜெயேந்திரரிடம் சரணடைந்து
அவரை முதல்வராக ஏற்றுக் கொண்டுள்ளனர்.
ஜெயலலிதாவின் பல்லாயிரம் கோடிமதிப்பிலான
சொத்துக்களை அபகரிக்கவும் அவற்றைப்
பாதுகாக்கவும் ஜெயேந்திரரிடம் சரணடைவது
நடராசன் சசிகலாவுக்கு அவசியமானது.
7) நடராசனின் உத்தரவின் பேரில், ஜெயேந்திரருக்கு
அரசின் எல்லாத் துறைகளின் கோப்புகளும்
தொடக்கத்தில் அனுப்பி வைக்கப் பட்டதாகக்
கூறப்படுகிறது. ஆனால் உள்துறை, நிதி, இந்து
அறநிலையத்துறை ஆகிய முக்கிய துறைகளின்
கோப்புகளை மட்டும் அனுப்பினால் போதும் என்று
ஜெயேந்திரர் கூறி விட்டாராம்.
8) எனவே தமிழ்நாட்டில் நடப்பது திராவிட ஆட்சி
அல்ல. நடப்பது ஜெயேந்திரரின் பார்ப்பன ஆரிய
ஆட்சியே. இதை திராவிட ஆட்சி என்று எவர்
கூறினாலும், அவர்கள் ஜெயேந்திரரின் எடுபிடிகளே.
9) இந்தக் கட்டுரையின் கருத்துக்களை மறுப்பவர்கள்
பார்ப்பன அடிவருடிகள் என்று குற்றம் சாட்டுகிறேன்.
மறுப்பாளர்கள் தமிழ்நாட்டில் பார்ப்பன ஆதிக்கம்
என்பதே இல்லை என்று கூறத் தயாரா?
10) ஜெயேந்திரர் ஒரு பார்ப்பனர். ஆனால் உபி முதல்வர்
யோகி ஆதித்யநாத் ஒரு சூத்திரர். யோகி ஆதித்தியநாத்
தேர்தல் மூலம் ஆட்சிக்கு வந்த முதல்வர். ஆனால்
ஜெயேந்திரரோ ஜனநாயக முறைப்படி அல்லாமல்,
திரை மறைவில் தமிழ்நாட்டை ஆள்பவர்.
11) எடப்பாடி ஆட்சியை, அதிமுக சசிகலா அணியை
ஆதரிப்பவர்கள் அனைவரும் சங்கராச்சாரி
ஜெயேந்திரரின் அடிவருடிகள். இது முக்கால உண்மை.
******************************************************************

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக