வெள்ளி, 3 மார்ச், 2017

நீரியல் விரிசலும் மண்ணாங்கட்டியும்
தெருப்புழுதியும்!
ஹைட்ரோ கார்பன் பற்றிய செய்திகள்!
-------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-------------------------------------------------------------------------
தற்போது ஹைட்ரோ கார்பன் தோண்டி எடுக்க
உரிமம் மட்டுமே வழங்கப் பட்டுள்ளது.
இது மிக மிக ஆரம்ப நிலை. இதன் பிறகு நிறைய
கட்டங்கள் உள்ளன.

1) மத்திய அரசுடன் ஒப்பந்தம் போட  வேண்டும்.
இது அடுத்து நடைபெற்று விடும். இது மிகச் சுலபமானது.
இதில் சிக்கல் இல்லை.

2) அடுத்து மாநில அரசு அனுமதிக்க வேண்டும்.
இதில் மாபெரும் சிக்கல் உள்ளது.

3) மாநில அரசு அனுமதித்த பிறகு, நிலங்களைப்
பயன்படுத்த லீஸ் ஒப்பந்தம் போட வேண்டும்.
இது இன்னும் மாபெரும் சிக்கல்.

4) இதன் பிறகே, உரிமம் பெற்ற நிறுவனத்தால்
தோண்டி எடுக்கப்பட இருக்கும் இடத்திற்கே (site)
செல்ல முடியும்.

5) அதன் பிறகு அங்கு ஆய்வு நடத்திய பிறகே. என்ன
தொழில்நுட்பம் என்பதைத் தீர்மானிக்க முடியும்.

6) இந்தக் கட்டத்தில்தான் தொழில்நுட்பம் பற்றித்
தெரியவரும்.

7) நீரியல் விரிசல் முறை என்பது கரிப்படுகை மீத்தேன்
(COAL BED METHANE) எடுப்பதற்கும் ஷேல் வாயு
எடுப்பதற்கும் உரிய தொழில்நுட்பம். இது வதந்தி
பரப்புவோர் அறியாத விஷயம்.

8) மறைந்த ஜெயலலிதா அவர்கள் முதல்வராக
இருக்கும்போதே, CBM மீத்தேனுக்குத் தடை விதித்தார்.
அந்தத் தடை இருக்கும்போது, CBM மீத்தேன் எடுப்பது
என்ற பேச்சுக்கே இடம் இல்லை.

9) தமிழ்நாட்டில் ஷேல் வாயு கிடைப்பதாக
எந்த ஆய்வு முடிவும் இல்லை. எவ்வளவு ஷேல் வாயு
தமிழ்நாட்டில் உள்ளது என்பது வதந்தி பரப்பும்
குட்டி முதலாளித்துவ அன்பர்களுக்குத் தெரிந்தால்
சொல்லலாம்.

10) எனவே இது எதுவும் தெரியாமல், எதையாவது
கற்பனை செய்து கொண்டு  மக்களை
அச்சுறுத்திக்கொண்டு இருப்பது சரியல்ல.
------------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக