(7) சாத்தானின் பட்டறையாய் ஆகிப்போன
சிந்தனைக் குள்ளர்களின் மூளை!
ஹைட்ரோ கார்பனும் பொய்களும்!
முதுகெலும்பை முறிக்கும் பதில்கள்!
-------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
------------------------------------------------------------------------------
1) நெடுவாசல் திட்டத்தை எதிர்க்கும் உரிமை அப்பகுதி
விவசாயிகளுக்கு உண்டு. ஆனால் குட்டி முதலாளித்துவ
சிந்தனைக் குள்ளர்கள் பலர் எதிர்க்க வேண்டும்
என்பதற்காகவே எதிர்ப்பவர்கள் (opposition for the sake of opposition).
அறிவியலுக்கு எதிரான முற்றிலும் பொய்யான
செய்திகளை மக்களிடம் இவர்கள் பரப்பி வருகிறார்கள்.
இவர்களின் அறிவியலுக்கு எதிரான இழிந்த பொய்களை
முறியடிப்பது எமது கடமை.
2) ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் புற்று நோய் வரும்
என்கிறார்கள் இவர்கள். அணுஉலைகளால் புற்றுநோய்
வரும் என்று அஞ்சுவதற்கு அணுஉலைகளில் பயன்படும்
யுரேனியம் ஒரு காரணமாக இருக்கிறது. ஏனெனில்
யுரேனியம் ஒரு கதிரியக்கத் தனிமம் (radioactive element).
3) ஆனால், இந்தப் பிரபஞ்சம் முழுவதும் நீக்கமற
நிறைந்திருக்கின்ற கார்பன் கதிரியக்கத் தனிமம் அல்ல.
கார்பனுக்கு மூன்று ஐசோடோப்கள் உண்டு. இவை
இயற்கையாகவே கிடைப்பவை (naturally occuring).
கார்பன்-12, கார்பன்-13, கார்பன்-14 ஆகியவற்றில்
கார்பன்-14 மட்டுமே கதிரியக்கத் தன்மை உடையது.
இதுதான் ரேடியோ கார்பன் டேட்டிங் முறையில்
பயன்படுகிறது. இதைக் கண்டறிந்த வில்லர்ட் லிபி
நோபல் பரிசு பெற்றார். கதிரியக்க ஐசோடோப்பான
கார்பன்-14 மிக மிகக் குறைவாகவே கிடைக்கிறது.
(trace amount only).
4) கார்பனால் புற்று நோய் வருமென்றால் துணிக்கு
இஸ்திரி போடும் தொழிலாளி முதல் வைர மூக்குத்தி
அணிந்த பெண்கள் வரை, ஒருவர் பாக்கி இல்லாமல்
அனைவருக்கும் புற்று நோய் வந்திருக்க வேண்டும்.
வைரம் என்பது கார்பனின் ஒரு புறவேற்றுமை வடிவம்
(allotropy). எனவே புற்றுநோய் வரும் என்பது பொய்.
புற்றுநோய் என்பது ஓராயிரம் காரணிகளால் வருவது.
கார்பன் மோனோ ஆக்ஸைடு புற்று நோயை உண்டாக்கும்
என்பது பரவலாக இருக்கும் ஒரு கருத்து. தினமும் சாலையில்
செல்லும் வாகனங்கள் (ஸ்கூட்டர்,கார்) வெளியிடும்
புகையில் கார்பன் மோனோ ஆக்ஸைடு உள்ளது.
இதனால் சாலையில் செல்லும் எல்லோருக்கும் புற்று
நோய் வந்து விடும் என்று முடிவு கட்டுவது மூடத்தனம்.
***************************************************************
பின்குறிப்பு: முதல் இரண்டு கமென்ட்களில் புற்று நோய்
வரும் என்று பிரபல அரசியல்வாதிகள் கூறிய வீடியோ
இணைக்கப் பட்டுள்ளது. வாசகர்கள் அவற்றைப்
படிக்கலாம்.
_----------------------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக