வெள்ளி, 31 மார்ச், 2017

இந்தி எல்லோரும் படிக்க வேண்டுமா?
-----------------------------------------------------------------------
எல்லோருக்கும் இந்தி அறிவு தேவை என்பது
எனது நிலைபாடு அல்ல. என்னைப்போன்ற
அரசியல் விமர்சகர்களுக்குத் தேவைப் படுகிறது.
உபி அரசியல் குறித்த, சரியான முழுமையான
புரிதலைப்பெற இந்தி மொழியறிவு தேவைப்
படுகிறது. உபி மாநிலத்தின் dynamicsஐப் புரிந்து
கொள்ளாமல், எதிர்கால இந்திய அரசியலைப்
புரிந்து கொள்ள இயலாது. இது இன்றைய
கள யதார்த்தம்.
**
ஆங்கில டிவி சானல்கள், ஆங்கில ஏடுகள் மூலம்
உபி அரசியலை ஓரளவுதான் அறிய முடிகிறது.
இந்தி டி.வி, இந்தி ஏடுகள் ஆகியவற்றைப்
படித்தால் மட்டுமே முழுமையான புரிதல் கிடைக்கும்.
மொத்தமுள்ள தரவுகளில் 10 சதம்தான் ஆங்கிலம்
வழியாக அறிய முடிகிறது. ஏனெனில் நமக்குத்
தேவையான தகவல்கள், தரவுகள் எல்லாம்
இந்தியில் உள்ளன. இந்தி தெரியாத நிலையில்,
என்னுடைய தேவையை நிறைவேற்றிக் கொள்ள
இயலவில்லை. இனி இந்தி படிக்க இயலாது. காரணம்
இந்தி படிப்பதில் எனக்கு உள்ள மனத்தடை.
**
டெலிகாம் துறையில் duty permission கொடுத்து,
இலவசமாக இந்தி கற்றுத் தந்தார்கள். increment, special pay
தரப்பட்டது. என்றாலும் இந்தி வெறுப்பு காரணமாக
அந்த வாய்ப்புகளை மறுத்தேன். இதுவே உண்மை.
**
தேவை  என்பதும் போதாமை என்பதும் நபர் சார்ந்தது.
என்னுடைய தேவை உபி பற்றிய அரசியல் புரிதல்.
இதில் என்னுடைய போதாமை என்பது எனக்கு
இந்தி தெரியாதது. என்னுடைய தேவை எல்லோருக்கும்
இருக்காது. அப்படித்  தேவையே இல்லாதவர்களுக்கு
போதாமை என்பது எழவே வாய்ப்பில்லை.
**
காரல் மார்க்ஸ் தம் அந்திம காலத்தில் சமஸ்கிருதம்
கற்கத் தொடங்கினார். ஏன்? அவர் இந்தியாவைப்
பற்றி அறிய விரும்பினார். இந்தியா குறித்த நூல்கள்
அக்காலத்தில் சமஸ்கிருதத்தில்தான் இருந்தன.
எனவே மார்க்ஸ் சமஸ்கிருதம் கற்றார். அது அவருக்கான
தேவை. அதுபோல என்னுடைய தேவை, என்னுடைய
போதாமை பற்றி நான் குறிப்பிட்டு இருப்பது
அனைவருக்கும் பொதுவான ஒரு கோட்பாடு அல்ல.
**
இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் மொழி பற்றிய
ஆரோக்கியமற்ற புரிதல் உள்ளது. இந்தியாவில்
இந்தி எதிர்ப்பில் மேற்கு வங்கம் முன்னிலையில்
உள்ளது. தமிழ்நாட்டில் வெற்று ஆரவாரமான
எதிர்ப்பு மட்டுமே. 
**
தமிழ்நாட்டில் 1970களில் காங்கிரஸ் ஆட்சியில்
இந்தி ஒரு பாடமாக மட்டுமே பள்ளிகளில் இருந்தது.
அதில் எடுக்கும் மதிப்பெண்கள் தேர்வில் கணக்கில்
கொள்ளப் படுவதில்லை. இந்தியில் பூஜ்யம் எடுத்தாலும்
அந்த மாணவன் SSLC தேர்வில் தேறி விடுவான்.


       

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக