சனி, 4 மார்ச், 2017

Total consumption of petroleum products in the country during 2015-16 was 184.7 million metric tonnes (MMT) which marked a growth of 11.60% over the consumption of 165.5 MMT during 2014-15. •

தமிழ்நாட்டில் ஷேல் வாயு கிடப்பதாக இதுவரை
எந்த ஆய்வு முடிவும் இல்லை. நீரியல் விரிசல் முறை
(hydraulic fracture) என்பது ஷேல் வாயுவை தோண்டி எடுக்கும்
தொழில்நுட்பம். இங்கு ஷேல் வாயுவே கிடைக்காதபோது
நீரியல் விரிசல் முறை பற்றிப் பேசத் தேவை என்ன?
ஆய்வகம் ஆராய்ச்சிப் பட்டறை என்பதெல்லாம்
பெரும்பணம் செலவு பிடிக்கக் கூடிய விஷயம்.
அரசு அல்லது பெருந் தனியார் நிறுவனம்
(உதாரணம் டி.வி.எஸ்) மட்டுமே இதைப்பற்றி
யோசிக்க முடியும்; செயல்படுத்த முடியும்.
நியூட்டன் அறிவியல் மன்றமானது அறிவியல்
பரப்பும் பணியை (science communication) கடந்த
17 ஆண்டுகளாக மேற்கொண்டு வருகிறது.
அச்சு ஊடகம், மின்னணு ஊடகம், சமூக ஊடகம்
ஆகிய மூன்றிலும் அறிவியல் பரப்பும் பணியை
மேற்கொண்டு வருகிறது.

கரிப்படுகை மீத்தேன்
coal bed methane
சாதாரண மீத்தேன் இரண்டிலும்
தொழில்நுட்பம் வேறு

எங்கு கிடைத்தாலும் மீத்தேன் மீத்தேன்தான் (CH4).
ஆனால் கிடைக்கிற இடத்தைப் பொறுத்து
தோண்டி எடுக்கும் தொழில்நுட்பம் வேறுபடுகிறது.
இது தெரியாமல் CBM மீத்தேனில் பயன்படும்
தொழில்நுட்பத்தை, மற்ற வகையில் எடுக்கும்
தொழில்நுட்பமாகக் கருதி வதந்தி பரப்பும்
சமூக விரோதிகள் கொடிய கிரிமினல்கள்.   

தமிழ்நாட்டில் ஜெயலலிதா அரசு ரத்து செய்தது
கரிப்படுகை மீத்தேன் திட்டத்தை (Coal Bed Methane).
காரணம், தமிழ்நாட்டில் இத்திட்டம் பெருநாசத்தை
விளைவிக்கும் என்பதால். ஆனால் இதே திட்டம்
மேற்கு வங்கத்தில் ராணிகஞ்ச் உள்ளிட்ட நாட்டின்
சில இடங்களில் பயன்படுத்தப் படுகிறது. காரணம்
அங்குள்ள சூழல் வேறு.


அறிவியல் ரீதியாக மட்டுமே இப்பதிவு பேசுகிறது.
திமுக, அதிமுக அரசுகளைக் குற்றம் சொல்ல
இதில் எதுவும் இல்லை. எரிவாயு தோண்டி எடுப்பது
இந்தியா முழுவதும் செயல்படுகிற திட்டம்.
இதில் மாநில அரசுகளுக்குப் பெரிய அளவில் பங்கில்லை.
மத்திய அரசு மட்டுமே இதுபோன்ற திட்டங்களை
உருவாக்கும்; தீர்மானிக்கும்.

அக்டொபர் 8,2013இல் ஜெயலலிதா அரசு அரசாணை
எண்: 186 ஐ பிறப்பித்து மீத்தேன் எடுப்பதைத் தடை
செய்தது. இது நாடறிந்த செய்தி. ஆதாரமாக ஆங்கில
இந்து ஏடு வெளியிட்ட செய்தியை இத்துடன்
இணைத்துள்ளேன். Please see next comment.

ஜெயலலிதா அரசு ரத்து செய்தது கரிப்படுகை மீத்தேன்
(CBM- Coal Bed Methane) திட்டத்தை மட்டுமே. காரணம் அது
தமிழ்நாட்டுக்கு எள்ளளவும் பொருந்தாத நாசகார
திட்டம் என்பதால். அதே நேரத்தில் வழக்கமான
முறையில் மீத்தேன் எடுப்பதற்கு (அதாவது
ONGCயின் இயற்கை எரிவாயு முறையில்) இத்தடை
பொருந்தாது என்பதையும் நாம் கணக்கில்
கொள்ள வேண்டும்.  கலைஞர் ஆட்சி முதல்
ஜெயா ஆட்சி வரை இயற்கை எரிவாயுவைக் கண்டறிதல் உள்ளிட்ட ஜியாலஜிக்கல் சர்வேக்களை ONGC
நடத்திக் கொண்டுதான் இருக்கிறது. இரண்டு
விதமான மாறுபட்ட தொழில்நுட்பத்தைப் பற்றிப் புரியாதவர்கள்தான் வதந்தியைப் பரப்பி வருகிறார்கள்.


ஒருங்கிணைந்த உரிமம் என்பது சிங்கிள் விண்டோ
போல, நிர்வாக வசதிக்காக ஏற்படுத்தப் பட்டது.
ஒருங்கிணைந்த உரிமம் இருப்பதாலேயே
எல்லாவற்றையும் எடுக்கலாம் என்று கருதுவது பிழை.
ஒரு இடத்தில் என்ன கிடைக்கிறதோ
அதை மட்டும்தான் எடுக்க முடியும். உதாரணமாக,
ஷேல் வாயு தமிழ்நாட்டில் கிடைக்கிறதா?
கிடைக்கிறது என்றால் எவ்வளவு கிடைக்கிறது
என்பதற்கான தகவல் ஏதேனும் உண்டா?
"இறுக்க வாயு" (tight gas) என்று ஒரு ஹைட்ரோ கார்பன்
உண்டு. அது தமிழ்நாட்டில் கிடைக்கிறதா?
கிடைக்கிறது என்றால் எவ்வளவு கிடைக்கிறது?
தகவல் உண்டா? trace amount என்ற அளவில் கிடைத்தால்
அது தோண்டி எடுக்க யாரவது முன்வருவார்களா? .  

இதற்கு
    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக