திங்கள், 6 மார்ச், 2017

நிலத்தடி நீர் மாசு படுமா? எப்படி?
(ஹைட்ரோ கார்பன் திட்டம்)
---------------------------------------------------------------
ஆறுகள் ஏரிகள் குளங்கள் போன்றவை மேற்பரப்பு நீர்
(surface water) எனப்படும். நிலத்தடி நீரானது (ground water)
மேற்பரப்பு நீரைத் தொடர்ந்து அதன் தொடர்ச்சியாகவே
இருக்கும்.

வெவ்வேறு இடங்களில் வெவேறு ஆழத்தில் நிலத்தடி
நீர் கிடைக்கும். பொதுவாக நிலத்தடி நீரானது
1000 அடி ஆழத்திற்குள் அல்லது அதிகபட்சமாக
2000 அடி ஆழத்திற்குள் அடங்கி விடும். அதாவது
நிலத்தடி நீர் 2000 அடிக்குக் கீழ் இருப்பதில்லை.

ஹைட்ரோ கார்பன் அல்லது மீத்தேன் 5000 அடி
தோண்டினாலோ 6000 அடி தோண்டினாலோ கிடைக்கும்.

1) நிலத்தடி நீர் 2000 அடிக்குள் இருப்பது.
2) மீத்தேன் கிடைப்பது 60000 அடியில்.
இடையில் 4000 அடி இருக்கிறது. இங்கு தண்ணீர்
உட்புக முடியாத பாறைகள் இருக்கின்றன.

இந்தப் பாறைகளைத் தாண்டி, நிலத்தடி நீர்
மீத்தேன் கிணற்றுக்குள் இறங்க முடியாது.
மீத்தேனும் நிலத்தடி நீருடன் கலக்க முடியாது.

பின் எப்படி நிலத்தடி நீர் மாசடையும்?
*******************************************************************     


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக