சனி, 4 மார்ச், 2017

கரிப்படுகை மீத்தேனை எதிர்க்க வேண்டும்!
இயற்கை வாயு மீத்தேனை ஆதரிக்க வேண்டும்!
ADSORPTION என்றால் என்ன?
----------------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
--------------------------------------------------------------------------------------
1) கரிப்படுகை மீத்தேன் (CBM Coal Bed Methane) தமிழ்நாட்டில்
எடுக்கக் கூடாது. தமிழ்நாட்டைப் பொறுத்த மட்டில்,
அது ஒரு பேரழிவை உண்டாக்கும் திட்டம். தமிழகத்தை
சஹாரா பாலைவனம் ஆக்கிவிடும் திட்டம்.  

2) ஏன் தமிழகத்தில் CBM கூடாது என்பதற்கான அறிவியல்
விளக்கம் இதோ.

3) பூமிக்கு அடியில் சில ஆயிரம் அடி ஆழத்தில்,
நிலக்கரிப் படுக்கைகள் (coal beds) உள்ளன. இவற்றில்
மீத்தேன் வாயு உள்ளது. இதற்கு மேல் நிலத்தடி நீர்
(aquifer) உள்ளது. நிலத்தடி நீரை அப்புறப் படுத்தி
வெளியேற்றாமல், இந்த மீத்தேனை எடுக்க முடியாது.

4) அதாவது நீர்ப்பாறைகளின் மீது (aquifers) மீத்தேன்
வாயு பசை போட்டு ஒட்டியது போல் ஒட்டிக் கொண்டு
இருக்கும். இதை அறிவியலில் ADSORPTION என்று
கூறுவர். (கவனிக்கவும்: ADSORPTION; இதில் உள்ள
D முக்கியம்; இது ABSORPTION அல்ல).

5) ADSORPTION என்பது பொருளின் ஒரு பண்பு
(one of the properties of matter). அடர்த்தி (density) என்பது
பொருளின் ஒரு பண்பு அல்லவா? அது போல
adsorption என்பதும் பொருளின் ஒரு பண்பு. இது
ஒரு surface phenomenon. அதாவது surface tension போன்றது.

6) இது அழுத்தத்தைப் (pressure) பொறுத்தது. எனவே
இப்பண்பு காரணமாக, நிலத்தடி நீரை, தோண்டி
எடுத்து வெளியேற்றாமல், மீத்தேனை எடுக்க
முடியாது.        

7) நிலத்தடி நீரை அப்புறப்படுத்தி வெளியேற்றுவது
என்பது காவிரிப் படுகையின் ஒட்டுமொத்த மக்களும்
கூட்டம் கூட்டமாகத் தற்கொலை செய்து கொள்வதற்குச்
சமம். எனவே CBM மீத்தேனை தமிழ்நாட்டில் எடுக்கக்
கூடாது.      

8) அன்றைய திமுக அரசு 2011 ஜனவரியில் CBM மீத்தேன்
இருக்கிறதா என்று கண்டறியும் ஆய்வுக்கு மட்டுமே
அனுமதி கொடுத்தது. அதாவது EXPLORATIONக்கு
மட்டுமே அனுமதி; EXTRACTIONக்கு அனுமதி இல்லை.

9) பின்னர் வந்த ஜெயலலிதா அரசு அக்டோபர் 2013இல்
CBM மீத்தேன் எடுக்க அனுமதி மறுத்து ஒரு
அரசாணையை  (GO number 186) பிறப்பித்தது. இத்தோடு
தமிழ்நாட்டில்  CBM மீத்தேனுக்கு கல்லறை கட்டப்
பட்டது.

10) செத்துப்போன CBM மீத்தேன் சில அன்பர்களின்
கனவில் வந்து பயமுறுத்துகிறது போலும்!

11) அதே நேரத்தில் இயற்கை வாயுவோடு சேர்த்து
எடுக்கப் படுகிற மீத்தேன் திட்டத்தை எதிர்க்கத்
தேவையில்லை. இதில் நிலத்தடி நீரை அப்புறப்
படுத்தவோ வெளியேற்றவோ தேவையில்லை.
காரணம் இங்கு ADSORPTION இல்லை.

12) இரண்டு விதமான முறைகளிழும் எடுக்கப்
படுவது என்னவோ மீத்தேன்தான் (CH4). ஆனால்
தோண்டி எடுக்கும் முறை வேறு; தொழில்நுட்பம்
வேறு. இதை புரிந்து கொள்ள வேண்டும்.   
***********************************************************   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக