சனி, 18 மார்ச், 2017

தோழர் பாருக் அவர்களை படுகொலை செய்த
இஸ்லாமிய மதவெறியை, மதவெறி பயங்கரவாதத்தை
கண்டிக்க 100 சதம் "பகுத்தறிவாளர்கள்" ஒருபோதும்
முன்வர மாட்டார்கள். காரணங்கள்:
**
1) இவர்கள் அனைவரும் போலிப் பகுத்தறிவாளர்கள்.
2) இவர்களில் பலர் மதவெறியர்களிடம் இருந்து
பல வகையிலும் சுயநல ஆதாயம் பெறுபவர்கள்.
3) இஸ்லாமிய மதவெறி பயங்கரவாதத்தைக்
கண்டித்தால், தங்களுக்கும் ஆபத்து வரும் என்ற
யதார்த்த நிலையை நன்கு உணர்ந்தவர்கள்.
4) எனவே தங்களின் முற்போக்கு அந்தஸ்த்தைத்
தக்க வைத்துக் கொள்ளும் பொருட்டு, மிக மிக
மென்மையாகக் கண்டித்து விட்டு, தப்பித்துச்

சென்று விடுவார்கள்.
**
5) இவர்களின் போலித்தனத்தை அம்பலப் படுத்தாமல்
நாட்டில் பகுத்தறிவு இயக்கம் என்பது ஒரு அங்குலம்கூட
முன் செல்ல முடியாது. 
6) இந்து, கிறிஸ்துவம், இஸ்லாம் ஆகிய மூன்று
மதங்களையும் சம அளவில் பாவித்து, இம்மூன்று
மதங்களிலும் உள்ள மதவெறியர்களை, மதவெறிப்
போக்கை எதிர்த்து முறியடிக்காமல், வெறுமனே
இந்துமத எதிர்ப்பு மட்டும் பேசுபவன் போலிப்
பகுத்தறிவாளனே.

எல்லா மூடத்தனங்களும் மிகுந்த இறுக்கத்துடன்
மட்டுமல்ல மிகுந்த மூர்க்கத்துடனும் எதிர்க்கப்
படவேண்டும்.
தந்தை பெரியார் கூறிய வாசகங்களான
1) கடவுள் இல்லை 2) கடவுளை வணங்குபவன்
காட்டு மிராண்டி 3) கடவுளைப் பரப்புபவன்
அயோக்கியன் என்ற வாசகங்களை முதலில் கூறி
அதன் பின் ஆட்டையோ மாட்டையோ வெட்டலாமே!
அதற்கு இஸ்லாமிய அன்பர்கள் தயாரா?

பாவலர் வரதராசன் ஒன்றும் மாயா காவ்ஸ்கி அல்ல.
எங்கள்  பக்கத்தில் (மதுரை, நெல்லை) பாவலர்
வரதராசன் அவர்களை ஒரு திமுக  பாடகர் என்றுதான்
நாங்கள் அறிவோம். நான் முதன் முதலில் அவரின்
இசையைக் கேட்டது திமுக கூட்டத்தில்தான்.

இதில் வாதம் செய்வதற்கு ஒன்றுமே இல்லை.
தமிழ்நாட்டில் வாழும் ஒரு தமிழன் தான் உண்ணும்
கோழி அல்லது ஆடு அல்லது மாட்டின் இறைச்சிக்காக
ஹலால் என்ற அரபுச் சொல்லையோ ஹலால் என்ற
செயலையோ ஏற்க வேண்டும் என்று நிர்ப்பந்தம் செய்வது
மிக்க கொடிய மதவெறியே தவிர .வேறொன்றும் இல்லை.
ஹலால் கூடாது, .அவ்வளவுதான். விருப்பம் இல்லாத
எட்டுக்கோடித் தமிழர்கள் மீது, ஒரு சில மதவெறியர்கள்
ஹலாலைத் திணிப்பதை ஏற்க முடியாது. இதில்
மேற்கொண்டு பேசுவதற்கு இடமே இல்லை. ஹலாலை
ஆதரிப்பவர்கள் தங்கள் மதத்தவர்களுடன் மட்டும் அதை
 வேண்டும்.   உண்மை, உண்மை!

வறட்டுப் பகுத்தறிவு இங்கு ஆட்சி செலுத்தியதால்தான்
இந்த அளவு மதவெறி பயங்கரவாதம் இங்கு தலைதூக்க
முடிந்தது. பிராமணாள் ஓட்டல் என்பதும், ஹலால்
செய்யப்பட்டது என்பதும் சம அளவிலான தீமைகளே.
இதில் ஒன்றுதான் தீமை என்று கருதுவதும், மற்றது
புரட்சிகரமானது என்று கருதுவதும் பேதைமை ஆகும்.
**
சம அளவிலான தீமைகளான
மேற்கூறிய இரண்டில், ஹலால் புரட்சிகரமானது
என்று கூறுவது சமூக முன்னேற்றத்திற்கு எவ்வாறு
உதவ இயலும்? சமூகத்தைப் பிளவுபடுத்த மட்டுமே
இது உதவும் என்பதால் மட்டுமே இதை எதிர்க்க
வேண்டியதாகிறது. இவை அனைத்தும்  பின்நவீனத்துவம்
தமிழகத்தில் செல்வாக்குப் பெற்றபின் உருவான
.நிகழ்வுகள். பின்நவீனத்துவம் தன்னை மறைத்துக்
 கொண்டு செயல்படுகிறது. இது அதன் நுண்ணரசியல்.


 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக