வியாழன், 30 மார்ச், 2017

சிட்டி பாங்க் சார்பாக கிரிடிட் கார்டு வழங்கும்போது
ஒவ்வொருவரையும் வாங்கு வாங்கு என்று தலையில்
கட்டப் பார்ப்பார்கள். ஆனால் ஒரு வக்கீலோ போலீசில்
வேலை செய்பவரோ கேட்டால் கிரிடிட் கார்ட் தர
மாட்டார்கள். இதற்குக் காரணம் போலிஸாரிடமும்
வக்கீலிடமும் வசூல் பண்ண முடியாது என்பதே.
இதுதான் உண்மை. இதில் மதமோ சாதியோ
மருந்துக்கும் தீர்மானிப்பதில்லை. அதுபோலவே,
வீடு வாடகைக்கு விடுவதிலும் வணிக ரீதியான
காரணிகள்தான் தீர்மானிக்கின்றனவே தவிர,
மதம் தீர்மானிப்பதில்லை. அதாவது மதம் பிரதான
காரணி அல்ல. அல்லது ஒற்றைக் காரணி அல்ல. 
**
என்னுடைய நண்பர் ஒருவர் டியூஷன் சென்டர் நடத்தி
வந்தார். ஹோம் டியூஷனும் அவரிடம் உண்டு.
ஆனால், அன்றைய அதிமுக அமைச்சர் அழகு
திருநாவுக்கரசு, தன் மகனுக்கு டியூஷன் கோரியபோது
என் நண்பர் நாசூக்காக மறுத்து விட்டார். காரணம் என்ன?
அழகு திருநாவுக்கரசு இஸ்லாமியர் என்பதாலா?
இல்லை. அதிகாரம் மிக்கவர்; அவர் பையன் படிக்க
மாட்டான்; கண்டிக்க முடியாது. எனவே நமக்கு ஏன்
வம்பு என்று என் நண்பர் மறுத்து விட்டார். வேறு மதம்
கிதம் என்றெல்லாம் எந்தக் காரணமும் கிடையாது.
**
வணிக ரீதியான உறவுகளில் சுமுகத்தன்மை வேண்டும்
என்பதே எல்லோரின் ஏகோபித்த விருப்பம். அந்த
சுமுகத்தன்மையை உத்தரவாதம் செய்ய முடியும்போது,
வணிக உறவு ஏற்படுகிறது. இதில் பண்பாட்டுக்
காரணிகளுக்குப் பங்கில்லை.   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக