திங்கள், 13 மார்ச், 2017

உபி  தேர்தல் முடிவுக்குப்பின் காணவில்லை இவரை!
பார்த்தவர்கள் தகவல் அளிக்கவும்!
-----------------------------------------------------------------------------------------------
இந்த அறிவிப்பு திருவாளர் அஜித் சிங் அவர்களுக்கானது.
யார் இந்த அஜித் சிங்? முன்னாள் இந்தியப் பிரதமர்
சரண்சிங்கின் மகன். RLD என்னும் ராஷ்ட்ரிய
லோக் தளம் கட்சியின் தலைவர். இது ஒரு ஜாட் கட்சி.

மேற்கு உ.பி.தான் இக்கட்சியின் அரசியல் களம்.
இங்குதான் ஜாட்கள் பெருமளவில் உள்ளனர்.
இவரின் கட்சி உபி தேர்தலில் எத்தனை இடங்களில்
வெற்றி பெற்றுள்ளது? பொருத்தமான விடையைத்
தேர்ந்தெடுக்கவும்.

ஆப்ஷன் A: 6
ஆப்ஷன் B: 0
ஆப்ஷன் C: 1
ஆப்ஷன் D: 8

சரியான விடை: ஆப்ஷன் C.
ஆக, 403 இடங்களைக் கொண்ட உ.பி சட்டமன்றத்தில்
அஜித்சிங்கின் RLD கட்சி ஒரே ஒரு இடத்தை மட்டும்
பெற்றுள்ளது.

அஜித்சிங்கின் ஜாட் சாதி அடையாள அரசியலுக்கு
உ.பி சாவு மணி அடித்துள்ளது.

இனி இந்தியா முழுவதும் அடையாள அரசியலுக்கு
அழிவு காலம். அடையாள அரசியலை வைத்துக்
கொண்டு பாஜகவை வீழ்த்த முடியாது.
-----------------------------------------------------------------------------------------------
அடுத்த கட்டுரை:
பாஜக வெற்றிக்கு உதவிய மாயாவதி!
******************************************************************  
            

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக