சீனா இன்றும் ஒரு இரும்புத்திரை நாடு அங்கு அரசின் செய்தி நிறுவனங்கள் தான் இருக்கின்றன நம் ஊர் போல் நூற்றியெட்டு தனியார் தொலைக்காட்சி பத்திரிக்கைகள் எல்லாம் கிடையாது அரசு என்ன செய்தி வெளியிட சொல்கிறதோ அது தான் செய்தி மற்றவை வெளிவர முடியாது இருந்தபோதிலும் அவ்வப்போது ஒன்றிரண்டு செய்திகள் சில வெளிநாட்டு பத்திரிகைகள் மூலம் அந்த செய்தியின் உள்ளூர் தொடர்பாளர்களால் வெளிவரும் சில போனால் போகிறது என்று அரசே வெளியிடும் அப்படி ஒரு செய்தி தான் சீனா உய்குர் முஸ்லிம்களுக்கு எதிராக எடுக்கும் நடவடிக்கைகள்.
உய்குர் தன்னாட்சி பகுதி என்பது இன்று சீனாவின் வடமேற்கு பகுதியில் இருக்கிறது ஷின்ஜியாங் மாகாணம்.கசகஸ்தான் தஜிகிஸ்தான் போன்ற நாடுகளின் எல்லையை ஒட்டியது பெரும்பான்மையான இஸ்லாமியர்களை கொண்ட பகுதி ஒரு 1.5 கோடி பேர் இருப்பார்கள். இன்று சீனா அந்த பிரதேசத்தை கடுமையாக ஒடுக்குகிறது ஏனென்றால் அவர்கள் தனி நாடு கேட்டுக்கொண்டு மத அடிப்படையில் பிரிந்து செல்வார்களா என்று அஞ்சுகிறது அதற்கான காரணமும் இருக்கிறது. பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்து கடுமையாக மூளைச்சலவை செய்யப்பட்ட வஹாபிகள் இங்கு ஊடுருவி இவர்களை அடைப்படைவாதிகளாக்குகிறார்கள் அவ்வப்போது குண்டு வெடிப்பது, தனி ஓநாய் தாக்குதல் எனப்படும் ஒரு தனித்த மனிதனின் வெறிச்செயல், திடீரென்று ரயில்வே ஸ்டேஷன்களில் சென்று ஒரு 50 பேரை வெட்டுவது போன்ற நிகழ்வுகள் நடக்கின்றன.
இதை கட்டுப்படுத்த சீனா கடுமையான மதக்கட்டுப்பாடுகளை விதிக்கிறது. சென்ற ஆண்டு ரம்ஜான் நோன்பு அனுசரிக்க கூட கடுமையான தடைகள் விதிக்கப்பட்டது மாணவர்கள் கண்காணிக்கப்படுகிறார்கள். வானொலி தொலைக்காட்சி ஆகியவற்றை முல்லாக்கள் மதகுருமார்கள் தடை செய்வது கூடாது என்று எச்சரிக்கை விதிக்கப்பட்டுள்ளது கைது செய்வது மரண தண்டனை விதிப்பது போன்றவை தொடர்கிறது.தாடி வைப்பதெல்லாம் கூடாது மத சின்னங்களை அணியக்கூடாது. மதரசா எல்லாம் நடைபெற முடியாது மார்க்கக் கல்விக்கு தடை என்று கடுமையான கட்டுப்பாடுகள் இருக்கின்றன. பலவந்தமாக நோன்பு காலத்தில் உணவு ஊட்டப்பட்ட நடவடிக்கைகள் எல்லாம் நடந்தன.
ஹான் சீனர்களை சீன பெரும்பான்மைவாத அரசு பெருமளவில் அங்கு குடியேற்றுகிறது திபெத் போல்.இவ்வளவு விஷயங்களும் ராய்டர்ஸ், அல் ஜஸீரா போன்ற ஊடகங்களில் வெளிவருகிறது உலகெங்கும் புலம் பெயர்ந்த அகதிகளாக சென்ற உய்கூர்கள் இதை பற்றி பேசுகிறார்கள். ஐநாவில் இதை பற்றி விவாதிக்கப்படுகிறது ஆனால் நம் ஊர் செய்தி ஊடகங்கள் இதை பற்றி வாயே திறக்காது. தேசவிரோத ஹிந்து மதவிரோத ஊடக இடதுசாரிகளால் இவை அனைத்தும் மூடி மறைக்கப்படுகின்றன. மௌண்ட்ரோடு மாவோ என்று விளிக்கப்படும் ஹிந்து ராமோ அல்லது 'தி ஹிந்துவோ' இதை பற்றியெல்லாம் கிஞ்சித்தும் செய்தி வெளியிடாது. சட்டவிரோதமான பசுவதைக்கூடங்களை மூடுவதை பற்றி பக்கம் பக்கமாக செய்தி போடும் இந்த ஊடக பேடிகள் இதை பற்றி வாயே திறக்க மாட்டார்கள் ஏனென்றால் அது கம்யூனிச ஆட்சியை பற்றி இந்திய முஸ்லிம்களிடம் ஒரு மோசமான எண்ணத்தை ஏற்படுத்தும் என்பதால். ஊடகங்களில் இருந்து இந்த இடது சாரி திருட்டு கூட்டத்தை மொத்தமாக வெளியேற்ற வேண்டும் அன்று தான் ஊடக சுதந்திரம் என்றால் என்ன நடுநிலையில் நின்று செய்திகளை தருவது என்றால் என்ன என்பது இந்த மக்களுக்கு தெரியும்.அதுவரை காசுக்கும் போலியான ஒரு சித்தாந்தத்திற்கும் செய்திகளை மறைக்கும் திரிக்கும் நிலை தான் ஏற்படும்..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக