ஞாயிறு, 26 மார்ச், 2017

ஹைட்ரஜன் என்பது  தனிமங்களின்
அட்டவணையில் (Periodic Table) முதல் இடம் பெற்ற
தனிமம்.
கார்பன் என்பது தனிம அட்டவணையில்
ஆறாவதான தனிமம்.
 ஹைட்ரஜன், கார்பன் ஆகிய இரண்டு தனிமங்களை 
மட்டும் கொண்ட ஒரு 
கூட்டுப் பொருளே ஹைட்ரோ கார்பன்.
எரிசாராயத்தின் 
வேதியியல் பெயர் எதில் ஆல்கஹால் (C2H5OH)
ஆகும் (Ethyl Alcohol). எத்தனால் என்றும் இதைக்
கூறுவதுண்டு. இதில் கார்பன், ஹைட்ரஜன்
ஆகியவற்றுடன் ஆக்சிஜனும் சேர்ந்துள்ளது.
ஆனால் எதில் ஆல்கஹாலை ஹைட்ரோ
கார்பன் என்று கூறக்கூடாது. ஹைட்ரோ கார்பன் என்றால்,
கார்பன், ஹைட்ரஜன் ஆகிய இரண்டு தனிமங்கள்
மட்டுமே இடம் பெற்று இருக்க வேண்டும்.
எவையெல்லாம் ஹைட்ரோ கார்பன்கள் ஆகும்?
----------------------------------------------------------------------------------------
கார்பனும் ஹைட்ரஜனும் எவ்வாறு சேர்கின்றன
என்பதை பொறுத்து வெவ்வேறு வகையான ஹைட்ரோ
கார்பன்கள் உண்டாகின்றன. மேலும் ஒவ்வொரு
ஹைட்ரோ கார்பனிலும் உள்ள கார்பன் அல்லது
ஹைட்ரஜனின் அணுக்களின் எண்ணிக்கையைப்
பொறுத்தும் ஹைட்ரோ கார்பன்கள் வெவ்வேறு பெயர்களைப் 
பெறுகின்றன.
1) மீத்தேன் என்பது மிகவும் பொதுவான ஒரு ஹைட்ரோ
கார்பன். இதில் ஒரே ஒரு கார்பன் அணு மட்டுமே உள்ளது.
(methane= CH4)
 2) அடுத்து ஈத்தேன் (C2H6). இதன் பார்முலாவைப்
பாருங்கள். இதில் இரண்டு கார்பன் அணுக்கள் இருப்பது
தெரியும்.
3) அடுத்து, புரோப்பேன் (C3H6). இதில் மூன்று கார்பன்
அணுக்கள் உள்ளன.
4) இவ்வாறு கார்பன் அல்லது ஹைட்ரஜனின்
அணுக்களின் எண்ணிக்கையைப் பொறுத்து
வெவ்வேறு ஹைட்ரோ கார்பன்கள் உண்டாகும்.

இந்தியா முழுவதும், பெட்ரோலியம் போன்ற எரிபொருள்வளம் மிகுந்த
சிறுவயல்கள் (Discovered Small Fields) கண்டறியப் பட்டுள்ளன.ஹைட்ரோ கார்பன் திட்டம்
ஓர் அகில இந்தியத் திட்டம்!
தமிழ்நாட்டுக்கு மட்டுமானது அல்ல!
4) அசாம் (9 இடங்கள்), குஜராத் (5), தமிழ்நாடு (2), ஆந்திரா (4), ராஜஸ்தான் (2),
மத்தியப் பிரதேசம் (1), மும்பை கடற்பகுதி (6), கட்ச் வளைகுடா
கடற்பகுதி (1), கிருஷ்ணா கோதாவரி (1) என்று அகில இந்தியாவிலும்
நிலப்பகுதி கடற்பகுதிகளில் இந்தச் சிறுவயல்கள் (DSF)
கண்டறியப் பட்டுள்ளன.
5) நிலப் பகுதியில் அமைந்த 28 சிறுவயல்கள் மற்றும்
கடற்பகுதியில் அமைந்த 16 சிறுவயல்கள் என்று 
மொத்தம்
44 சிறுவயல்களை உள்ளடக்கிய ஒரு தொகுப்பு,
நிர்வாக வசதிக்காக 34 ஒப்பந்தப் பிரதேசங்களாக
(Contract Areas) பிரிக்கப் பட்டுள்ளது.
6) இந்த 34இல், 31 ஒப்பந்தப் பிரதேசங்களில் எரிபொருள்
தோண்டி எடுக்கும் பணியை மேற்கொள்வதற்காக
பகிரங்க மின்னணு ஏலம் (e bid) நடைபெற்றது. ஏலத்தின்
இறுதியில், 22 நிறுவனங்களுக்கு உரிமம் வழங்கப்
பட்டுள்ளது.
7) இவற்றில் 4 பொதுத்துறை நிறுவனங்கள், 17 தனியார்
நிறுவனங்கள், 1 வெளிநாட்டு நிறுவனம் (மொத்தம் 22)
அடங்கும்.
8) 4 கோடி மெட்ரிக் டன் அளவு எண்ணெயும்
2200 கோடி கன மீட்டர் அளவு வாயுவும் புதைந்து
உள்ளன. (by volume: 40 MMT oil and 22.0 BCM gas).
இவற்றைத் தோண்டி எடுக்க 15 ஆண்டு காலம் ஆகும்.
9) இவை அனைத்தும் 2015இல் வகுக்கப்பட்ட "எண்ணெய்
கண்டறியும் கொள்கை"யின்படி (Oil exploration policy)
அமைந்துள்ளன. உரிமங்களை CCEA
(Cabinet Committeeon Economic Affairs) வழங்கியது.

ஹைட்ரோ கார்பன்கள் அனைத்திற்கும்
பொதுப்பண்புகள் உண்டு என்றாலும், இவை
தமக்குள் வேறுபாடும் பண்புகளையும்
கொண்டிருக்கும். பெட்ரோல், டீசல்
என்னும் இவ்விரண்டில், ஒப்பீட்டளவில்
வளிமண்டலத்தை குறைவாக மாசுபடுத்துவது
பெட்ரோல் ஆகும். கார்பன்டை ஆக்ஸைடை
பெட்ரோலை விட டீசல் அதிகமாக வெளிவிட்டு
சூழலை மாசு படுத்தும்.
ஷேல் வாயு (shale gas) என்பது அறிவியல் பெயர் அல்ல.
SHALE என்ற ஆங்கிலச் சொல்லுக்கு களிமண்
படிவப்பாறை என்று பொருள். பூமிக்கு அடியில்
உள்ள இந்தப் பாறையில் கிடைக்கும் வாயு என்பதால்
இது ஷேல் வாயு எனப்படுகிறது. ஷேல் பாறைகள்
பூமியின் அடியாழத்தில் இருப்பவை. பொதுவாக
5000 அடி ஆழத்தில்தான் இப்பாறைகள் இருக்கும்.
ஷேல் வாயு என்பது பிரதானமாக மீத்தேன்தான் (CH4).
ONGC என்னும் பொதுத்துறை நிறுவனம் பற்றி நாம்
அறிவோம். இந்நிறுவனம் இயற்கை வாயுவை
(NATURAL GAS) அகழ்ந்து எடுக்கும் நிறுவனம். ஆயின்,
இயற்கை வாயு என்றால் என்ன?
இயற்கை வாயு என்பது மீத்தேன் உள்ளிட்ட பல்வேறு
வாயுக்களின் கலவை ஆகும். இதிலும் மீத்தேன்
வாயுவே பெரும்பங்கு உள்ளது. மேலும் ஈத்தேன்,
புரோப்பேன், பியூட்டேன் ஆகிய பிற வாயுக்களும்
கலந்திருக்கும். மேலும் இயற்கைவாயுக் கலவையில்,
கார்பன், ஹைட்ரஜன் தவிர கந்தகம், ஆக்சிஜன்,
நைட்ரஜன் ஆகிய பிற பொருட்களும் கலந்த
நிலையில்தான் இயற்கையில் கிடைக்கும்.
ஆக மொத்தத்தில், ஹைட்ரோ கார்பன் என்பதை
மீத்தேன் வகையறா என்று புரிந்து கொள்ளலாம்.
எங்கும் மீத்தேன் எதிலும் மீத்தேன் என்று ஹைட்ரோ
கார்பன் கட்சியின் நிரந்தரப் பொதுச்செயலாளராக
மீத்தேன் உள்ளது. இதற்கு ஓர் எளிய அறிவியல்
காரணம் உண்டு.
மீத்தேன் என்பது CH4 என்பது நாம் அறிந்ததே. கார்பன்
தனிமத்தின் அணுவில் உட்கருவைச் சுற்றி ஆறு
எலக்ட்ரான்கள் இருக்கும். இந்த ஆறில் இரண்டு
எலக்ட்ரான்கள் முதல் சுற்றுப்பாதையில் (first orbit)
இருக்கும். மீதி நான்கு எலக்ட்ரான்களும் இரண்டாவது
சுற்றுப்பாதையில் இருக்கும். இரண்டாவது சுற்றுப்
பாதையில் எட்டு எலக்ட்ரான்களுக்கு இடம் உண்டு.
ஆனால் நாலு எலக்ட்ரான்கள்தான் உள்ளன. மீதி
நாலு இடம் காலியாக இருக்கிறது.
காலியாக இருக்கும் இந்த நாலு இடத்தில் யாரையாவது
குடியேற்றி விட வேண்டும் என்று கார்பன் மிகவும்
விரும்பும். கார்பன் மட்டுமல்ல, எல்லா அணுக்களுமே
இப்படித்தான் விரும்பும். இவ்வாறு விரும்புவது
அணுக்களின் பொதுப்பண்பு.
எனவே கார்பன் புணர்ச்சிக்கு ஏங்கும். அப்போது
இந்தப் பிரபஞ்சம் எங்கும் நீக்கமற நிறைந்து இருக்கிற
ஹைட்ரஜன் அணு ஓடோடி வந்து கார்பனைப்
புணரும். கார்பனைப் புணரும் தகுதி ஹைட்ரஜனுக்கு
உண்டு. எப்படியெனில், ஹைட்ரஜனின் சுற்றுப்பாதையில்
(orbit) ஒரு எலக்ட்ரான் மட்டுமே இருப்பதால், ஒரு
காலியிடம் உண்டு. எனவே கார்பன் ஹைட்ரஜன்
இரண்டும் ஓர் ஒற்றைப் பிணைப்பு முறையில்
(single bond) புணர்ந்து, CH4 என்ற மூலக்கூறாக (molecule)
வாழத் தொடங்கும். கார்பன், ஹைட்ரஜன் என்று
தனித்தனியான அணுக்களாக இருந்த இவை,
புணர்ச்சிக்குப் பின் மூலக்கூறாக மாறி விடுகின்றன

சமையல் எரிவாயு (LPG-Liqufied Petrolium Gas) என்பது
என்ன வாயு என்று சிலர் அறிந்திருக்கலாம். பலர்
அறிந்திருக்க வாய்ப்பில்லை. புரோப்பேன் (C3H8)
அல்லது பியூட்டேன் (C4H10) கொண்ட கலவையே
சமையல் வாயு.

இதற்கு மாறாக, இயற்கை வாயு (Natural gas) என்பது
மீத்தேன் மற்றும் ஈத்தேன் கொண்ட கலவை. இது
சமையல் வாயுவை விட எரிதிறன் (calorific value)
குறைவானது.

அசாமில் திக்பாயில் உள்ள எண்ணெய் வயல்
1882இல் உருவாக்கப்பட்டு இன்றும் செயல்படுகிறது.
65 சதுர கிலோமீட்டர் பரப்பில் உள்ள மிகப்பெரிய
எண்ணெய் வயல்களில் ஒன்று இது. 1 சதுர கி.மீ
என்பது தோராயமாக 250 ஏக்கர் ஆகும். அப்படியானால்
திக்பாய் எண்ணெய் வயல் தோராயமாக 17,000 ஏக்கர்
 பரப்பைக் கொண்டதாகும்.
8) தமிழ்நாட்டில் நெடுவாசலில் வரவிருக்கும் எண்ணெய்
வயலின் (Discovered Small Field) பரப்பு 10 சதுர கிலோமீட்டர்தான்.
அதாவது 2500 ஏக்கர் மட்டுமே. பதினேழாயிரம் ஏக்கர்
பரப்பில் உள்ள திக்பாய் எண்ணெய்க் கிணறுகளால்
அசாமில் விவசாயம் பாதிப்பு அடையவில்லை. அசாமில்
ஓடும் பிரம்மபுத்திரா நதி மாசடையவில்லை.

பூமிக்கு அடியில் சில ஆயிரம் அடி ஆழத்தில்,
நிலக்கரிப் படுக்கைகள் (coal beds) உள்ளன. இவற்றில்
மீத்தேன் வாயு உள்ளது. இதற்கு மேல் நிலத்தடி நீர்
(aquifer) உள்ளது. நிலத்தடி நீரை அப்புறப் படுத்தி
வெளியேற்றாமல், இந்த மீத்தேனை எடுக்க முடியாது.
4) அதாவது நீர்ப்பாறைகளின் மீது (aquifers) மீத்தேன்
வாயு நிறைந்த நிலக்கரியானது பசை போட்டு ஒட்டியது போல் ஒட்டிக் கொண்டு
இருக்கும். இதை அறிவியலில் ADSORPTION என்று
கூறுவர். (கவனிக்கவும்: ADSORPTION; இதில் உள்ள
D முக்கியம்; இது ABSORPTION அல்ல).
5) ADSORPTION என்பது பொருளின் ஒரு பண்பு
(one of the properties of matter). அடர்த்தி (density) என்பது
பொருளின் ஒரு பண்பு அல்லவா? அது போல
adsorption என்பதும் பொருளின் ஒரு பண்பு. இது
ஒரு surface phenomenon. அதாவது surface tension போன்றது.
6) இது அழுத்தத்தைப் (pressure) பொறுத்தது. எனவே
இப்பண்பு (adsorption) காரணமாக, நிலத்தடி நீரை, தோண்டி
 எடுத்து வெளியேற்றாமல், மீத்தேனை எடுக்க
முடியாது.
7) நிலத்தடி நீரை அப்புறப்படுத்தி வெளியேற்றுவது
என்பது காவிரிப் படுகையின் ஒட்டுமொத்த மக்களும்
கூட்டம் கூட்டமாகத் தற்கொலை செய்து கொள்வதற்குச்
சமம். எனவே CBM மீத்தேனை தமிழ்நாட்டில் எடுக்கக்
கூடாது.
8) அன்றைய திமுக அரசு 2011 ஜனவரியில் CBM மீத்தேன்
இருக்கிறதா என்று கண்டறியும் ஆய்வுக்கு மட்டுமே
அனுமதி கொடுத்தது. அதாவது EXPLORATIONக்கு
மட்டுமே அனுமதி; EXTRACTIONக்கு அனுமதி இல்லை.
9) பின்னர் வந்த ஜெயலலிதா அரசு அக்டோபர் 2013இல்
CBM மீத்தேன் எடுக்க அனுமதி மறுத்து ஒரு
அரசாணையை (GO number 186) பிறப்பித்தது. இத்தோடு
தமிழ்நாட்டில் CBM மீத்தேனுக்கு கல்லறை கட்டப்
பட்டது.
10) செத்துப்போன CBM மீத்தேன் சில அன்பர்களின்
கனவில் வந்து பயமுறுத்துகிறது போலும்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக