ஞாயிறு, 26 மார்ச், 2017

1) எல்லா அரசியல் கட்சிகளும் எல்லா விஷயங்களிலும்
ஏமாற்றுபவை என்று சித்தரிக்க முயல்வது அரசியலற்ற
போக்கை வளர்க்க நினைக்கும் செயலாகும். ஹைட்ரோ
கார்பன் திட்டம் இந்தியா முழுமைக்குமான திட்டம் ஆகும்.
மொத்தம் 31 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க
உரிமம் வழங்கப் பட்டுள்ளது. இது முதல் கட்டம்.
அடுத்த கட்டமாக உரிமம் வழங்கப்பட்ட நிறுவனங்கள்
மத்திய அரசுடன் ஓர் ஒப்பந்தம் செய்து கொள்கின்றன.
அதுதான் இன்று நடக்கிறது. இது இரண்டாவது கட்டம்
ஆகும். இந்த இரண்டு கட்டங்களும் நிறைவேறியதுமே
ஹைட்ரோ கார்பன் எடுக்க முடியாது.
2) மாநில அரசின் அனுமதி பெற வேண்டும். மாநில
மாசுக்கட்டுப்பாடு வாரிய அனுமதி பெற வேண்டும்.
நிலங்களைப் பயன்படுத்த நில உரிமையாளர்களுடன்
குத்தகை ஒப்பந்தம் போட வேண்டும். இதையெல்லாம்
மாநில அரசு அனுமதிக்கப் போவதில்லை.
3) அகில இந்தியாவுக்குமான நடைமுறை இது.
தமிழக அரசு தான் அளித்த உறுதியில் இருந்து
பின்வாங்க இயலாது. மக்கள் அதற்கு அனுமதிக்க
மாட்டார்கள். மக்களின் அறிவைக் குறைத்து எடை
போட வேண்டாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக