ஞாயிறு, 8 மார்ச், 2020

அருவருக்கத்தக்க அறியாமையின் நடுவில்!
--------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
----------------------------------------------------------
இரண்டு செய்திகள்!

1) யெஸ் வங்கி திவால் ஆகும் முன்பு, திருமலை திருப்பதி
தேவஸ்தானம், அவ்வங்கியில் இருந்த தனது ரூ 1300 கோடி
பணத்தை எடுத்து விட்டது.
2) குஜராத்தின் பரோடா நகராட்சி (Vadodara Municipal Corpn)
ரூ 265 கோடி முதலீட்டை எடுத்து விட்டது.

பெரும் ஆச்சரியத்துக்குரிய விஷயமாக இதை
தமிழ்நாட்டின் குட்டி முதலாளித்துவம் கருதுகிறது.
இதன் மூலம் தற்குறித்தனத்தின் உச்சத்தைத்
தொடுகிறது தமிழகத்தின் குட்டி முதலாளித்துவம்.

ஒரு வங்கி திவால் ஆகிறது என்பதில் எந்த ராணுவ
ரகசியமும் இல்லை. திடீரென்று ஒரு நாள் நடுநிசியில்
தெரிய வரும் விஷயமல்ல இது. வங்கியின் நிதிநிலை
பற்றிய விவரங்கள் எவையும் ரகசியம் அல்ல.
அவை பொதுவெளியில் வைக்கப் படுகின்றன.
பொருளாதாரம் சார்ந்த ஆங்கில ஏடுகளில், எகனாமிக்
டைம்ஸ் போன்றவற்றில் வெளியாகின்றன.

முதல் போட்ட வங்கியின் நிதிநிலை ஆரோக்கியமாக
இருக்கிறதா என்று முதல் போட்டவன் எப்போதுமே
கண்காணித்துக் கொண்டு இருப்பான்.
When there is a foul smell, போட்ட பணத்தை எடுத்து
விடுவான்.இது உலக இயற்கை!

சரி, இப்படியே ஒவ்வொரு பணக்காரனும்
கோடிக்கணக்கில் தான் போட்ட பணத்தை எடுத்து
விட்டால், சாதாரண மக்கள் போட்ட பணம் என்ன
ஆகும்? எல்லாப் பணத்தையும் பணக்காரனே
எடுத்து விட்டால், சாதாரண மக்களுக்கு என்ன மிஞ்சும்?

எனவேதான், ரிசர்வ் வங்கி தலையிடுகிறது.
யார் எவரும் ரூ 50,000க்கு (ரூபாய் ஐம்பதாயிரம் மட்டும்)
மேல் பணம் எடுக்கக் கூடாது என்று தடை விதிக்கிறது.
இந்தத் தடைக்கு அப்புறம் எந்தப் பணக்காரனாவது
தான் போட்ட கோடி ரூபாய் முதலீட்டை எடுக்க முடியுமா?
முடியாதல்லவா! இதன் மூலம் சாதாரண ஏழை எளிய
மக்களின் பணம் பாதுகாக்கப் படுகிறது அல்லவா!

Banking குறித்த விழிப்புணர்வு
பொருளாதாரம் பற்றிய விழிப்புணர்வு
பொருளுற்பத்தி சார்ந்த விழிப்புணர்வு
இவையெல்லாம் தமிழ்நாட்டில்தான் மிகவும் குறைந்து
காணப்படுகிறது. அறியாமை தலைவிரித்து ஆடுகிறது.

தமிழ்நாட்டில்தான் தாழ்வு மனப்பான்மையானது
institutionalize ஆகி உள்ளது. இதற்கெல்லாம் மூல
காரணமாக, தற்குறித்தனமான திராவிடக் கருத்தியல்
விளங்குகிறது.

பொருளுற்பத்தியில் இருந்து முற்றிலும் துண்டித்துக்
கொண்டு, வெறும் பண்பாட்டு விவகாரங்களையே
ஊதிப் பெருக்கி, மக்களை மூடர் கூட்டமாக ஆக்கும்
வேலையே திராவிடத்தின் வேலைத்திட்டமாக
இருக்கிறது.

எனவேதான் மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒரு
12ஆம் வகுப்புச் சிறுவனுக்குத் தெரிந்த விஷயம் கூட
தமிழ்நாட்டில் உள்ள ஒரு திராவிடப் பெரியவருக்குத்
தெரியவில்லை.

பொருளாதாரம் என்பது கஷ்டமான பாடமெல்லாம்
அல்ல. எக்கனாமிக் டைம்ஸ் போன்ற பத்திரிகைகளை
ரெகுலராகப் படித்தாலே பொருளாதாரம் பிடிபட்டு
விடும். IQ குன்றியவர்களும் பொருளாதாரத்தில்
பிரகாசிக்கலாம்.

எப்பேர்ப்பட்ட அறியாமை நிறைந்த சூழலில்
நாம் வாழ்கிறோம் என்பதை நினைக்கும்போது
அருவருப்புத் தட்டுகிறது.
*******************************************************



 






          

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக