யானைகள் குழிகளில் விழுகின்றன!
வங்கிகள் திவால் ஆவதும் அவற்றின் மீட்பும்!
கே என் நேருவின் வாராக் கடன் என்ன ஆனது?
பொருளுற்பத்தி பற்றிய கட்டுரைகளின் அணிவகுப்பு!
--------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-----------------------------------------------------------------------------
குட்டி முதலாளித்துவம் கன குஷியில் இருக்கிறது.
யெஸ் வங்கி (Yes Bank) திவால் ஆகிறது என்ற செய்தி
குட்டி முதலாளித்துவத்தின் செவிகளில் தேனாகப்
பாய்கிறது.
1995ல் நரசிம்மராவ் உலகமய, தனியார்மயப்
பொருளாதாரத்தை அறிமுகம் செய்தார். அதை
டாக்டர் மன்மோகன்சிங்கும் ப சிதம்பரமும்
பெரும் அக்கறையுடன் வளர்த்தெடுத்தார்.
குழந்தையைப் பெற்றுப் போட்டு விட்டுப் போய்ச் சேர்ந்து
விட்டார் நரசிம்ம ராவ். அதை பாராட்டிச் சீராட்டி
வளர்த்து ஆளாக்கியவர்கள் டாக்டர் மன்மோகன் சிங்கும்
சிதம்பரமும்.
யெஸ் வங்கி ஒரு தனியார் வங்கி. தனியார் மயத்துக்குப்
பின், 2004ல் தொடங்கப் பட்டது. 2004-2014ல், இந்தப்
பத்தாண்டுகளில் அபரிமிதமான வளர்ச்சி கண்டது
யெஸ் வங்கி. தனியார் மையத்தின் அதிதீவிர
ஆதரவாளர்களான மன்மோகன்சிங்கும் சிதம்பரமும்
சிறப்புக் கவனம் எடுத்து யெஸ் வங்கியை வளர்த்தனர்.
தனியார் மயக் கொள்கை தோற்று விடக்கூடாது
என்பதில்தான் மன்மோகன் சிங்கிற்கு எவ்வளவு
அக்கறை!
அதிகமாகச் செல்லம் கொடுத்து வளர்க்கப்பட்ட
குழந்தை சீரழிந்து போவதைப் போல, இன்று யெஸ்
வங்கியும் சீரழிந்து போய் விட்டது.
ஒரு வங்கி திவாலாக என்ன காரணம்?
1) வாராக்கடன் (NPA)
2) வங்கியில் டெபாசிட் செய்ய எவரும் முன்வராத நிலை.
வாராக்கடனுக்கு யார் காரணம்?
1) தொழில்துறை முதலாளிகள்
2) குரோனி முதலாளிகள்.
குரோனி முதலாளிகள் எந்தத் தொழிலையும்
நடத்துவதில்லை. அவர்கள் அரசுப் பணத்தை,
பொதுப்பணத்தைக் கொள்ளையடிக்க மட்டுமே
செய்வார்கள். குரோனி முதலாளிகள் என்ற ஒரு
புதிய வர்க்கத்தை (அதாவது வர்க்க உட்பிரிவை)
உருவாக்கியதே டாக்டர் மன்மோகன்சிங்-சிதம்பரம்
கூட்டணிதான். UPA-I and UPA-II என்பது குரோனி
முதலாளிகளின் சொர்க்கம்.
இந்தியாவிலேயே குரோனி முதலாளிகள்
தமிழ்நாட்டில்தான் அதிகம். ராஜாத்தி அம்மாள்
உலகின் தலைசிறந்த குரோனி முதலாளிகளில் ஒருவர்.
குரோனி முதலாளி என்பதற்கு ஒரு உயிருள்ள
உதாரணத்தைப் பார்ப்போம் (living example).
கடந்த அக்டோபர் 2019ல், அதாவது நாலு மாதத்துக்கு
முன்பு, இந்தியன் வங்கி ஒரு ஏல நோட்டீசை
தனது அதிகாரபூர்வ இணையதளத்தில் வெளியிட்டு
இருந்தது.
திமுக முன்னாள் அமைச்சர் கே என் நேரு, திருச்சி
கண்டோன்மெண்ட்டில் உள்ள இந்தியன் வங்கியில்
ரூ 100 கோடி ரூபாய் நூறு கோடி மட்டும்) கடன்
வாங்கி இருந்தார். பல ஆண்டுகளுக்கு முன்பு
வாங்கிய கடன் இது. ஆனால் வாங்கிய கடனைத்
திருப்பிக் செலுத்தவில்லை. இந்தியன் வங்கி
அதிகாரிகள் கே என் நேருவின் காலில் விழுந்து கதறி
கடனைத் திரும்பிச் செலுத்துமாறு கோரினர்.
நேரு அசையவில்லை. யானை வாய்க்குள் போன
கரும்பு மீளுமா?
எனவே கடன் பெறுவதற்கான நேரு ஈடாக
வைத்திருந்த அவரின் சொத்துக்களை ஏலம்
விடுவதாக இந்தியன் வங்கி அறிவித்து, ஏல
நோட்டீஸை வெளியிட்டு இருந்தது.
திருச்சி புறநகரில் உள்ள சில நிலங்களை ரூ 100 கோடி
கடனுக்கு ஈடாகக் காட்டி இருந்தார். இது வெறும்
பெயரளவிலான ஈடு. அவ்வளவுதான். இதை எவனாவது
ஏமாந்த சோணகிரியிடம் விற்றால் கூட, சில லட்சத்துக்கு
மேல் தேறாது. வாங்கிய கடனோ ரூ 1000 கோடி!
காட்டிய ஈடோ அற்பமான சில லட்சம்!
ரூ 100 கோடி கடன் வாங்கிய நேரு, அந்தப் பெரும்
பணத்தில் ஏதாவது தொழில் நடத்தினாரா?
பல்லாயிரக் கணக்கான இளைஞர்களுக்கு வேலை
கொடுத்தாரா? இல்லை. இப்படிப்பட்ட ஒருவரைத்தான்
குரோனி முதலாளி என்கிறோம். கே என் நேரு
குரோனி முதலாளி என்பதற்கு மிகச் சிறந்த உதாரணம்.
சரி, ஏல நோட்டீஸ் விட்டதே இந்தியன் வங்கி! நேருவை
மீறி அவரின் சொத்தை ஏலம் எடுப்பதற்கு இந்தியாவில்
ஏன் இந்த உலகிலேயே எவனுக்காவது தைரியம்
இருக்கிறதா?
வாராக்கடன் நாட்டின் பொருளாதாரத்தை எப்படி
எல்லாம் நாசமாக்கும் என்று இப்போது புரிகிறதா?
வங்கிகள் ஏன் திவால் ஆகின்றன என்று இப்போது
புரிகிறதா? யெஸ் வங்கி எப்படி திவால் ஆகி
இருக்கும் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறதா?
கே என் நேருவை ஒரு உதாரணத்திற்குச் சொல்லி
இருக்கிறேன். இவரைப் போன்ற குரோனி முதலாளிகள்
எல்லாக் கட்சிகளிலும் இருக்கிறார்கள். இவர்களைப்
பற்றிய செய்திகள் எந்தப் பத்திரிகையிலும் வராது.
மொத்தத் தமிழ்நாட்டிலும், கே என் நேருவின் ரூ 100 கோடி
மோசடி பற்றி எழுதியவன் நான் ஒருவன் மட்டுமே.
பிரபல CPI, CPM கடசிகளின் ஏடுகளான தீக்கதிரிலும்
ஜனசக்தியிலும் எழுதிக் கிழித்து விட்டார்களா?
அவர்களே குரோனிகள்தானே ஐயா!
மு க ஸ்டாலினிடம் ரூ 25 கோடி வாங்கிய இவர்களை
கம்யூனிஸ்டுகள் என்பதா? அல்லது குரோனிகள்
என்பதா?
CPI, CPMஐ விடுங்கள். அவர்கள் போலிக் கம்யூனிஸ்டுகள்.
நக்சல்பாரிகளின் யோக்கியதை என்ன?
பிரபல நக்சல்பாரி இணையதளமான "வினவு" என்னும்
இணைய தளத்தில் கே என் நேருவின் ரூ 100 கோடி
மோசடி பற்றி, கட்டுரை வேண்டாம், ஒரு செய்தியாவது
வந்ததா? வருமா? காளியப்பன் வர விடுவாரா?
மருதையன்தான் பிரசுரித்து விடுவாரா? CPI,CPM
போலிக் கம்யூனிஸ்டுகள் என்றால், இவர்கள் போலி
நக்சல்பாரிகள், அவ்வளவுதானே!
பிரபல டிவி நெறியாளர்கள் செந்தில், நெல்சன் சேவியர்,
குணசேகரன் ஆகியோரால் ஒரு டிவி விவாதம்
நடத்த முடிந்ததா? முடியுமா? விவாதம் நடத்திய
பிறகு இந்த மூவரும் உயிரோடு இருக்க முடியுமா?
எனவே புத்திசாலித் தனமாக, வாங்க வேண்டியதை
வாங்கிக் கொண்டு ஆசனத் துவாரங்களைப்
பொத்திக் கொள்வதுதானே இங்குள்ள நடைமுறை!
கே என் நேருவின் ரூ 100 கோடி மோசடி பற்றிய எனது
முகநூல் கட்டுரையை ஸ்கிரீன் ஷாட் எடுத்து வைத்துக்
கொண்டு, திமுக இணையதள நிர்வாகி திரு தியாகராஜன்
அவர்களுக்கு அனுப்புவதுதான் "மக்கள் ஜனநாயகக்
குடியரசு" ஆசாமிகளின் வேலையா, மூடர்களே!
இதற்குத்தான் கட்சி நடத்துகிறீர்களா கோழைகளே!
நிற்க. மீண்டும் யெஸ் வங்கிக்கு வருவோம்.
யெஸ் வங்கியானது எப்படி திவால் ஆகி இருக்கும்
என்பது படக்காட்சி போல உங்களுக்குத்
புரிந்திருக்கும்.
இருப்பினும் யெஸ் வங்கியில் பணம் போட்ட எவரும்
பயப்பட வேண்டாம். குழியில் விழுந்த யானையை
மீட்பது போல, யெஸ் வங்கியை மத்திய அரசின்
மீட்புக்குழு மீட்டு விட்டது. ஸ்டேட் வங்கியானது
தேவையான முதலைப் போட்டு (ரூ 12,000 கோடி)
யெஸ் வங்கியின் 49 சதம் பங்குகளை வாங்கி
விட்டது. இது யெஸ் வங்கியின் புத்தாக்கத்
திட்டத்தின் ஒரு பகுதி (Revival plan).
ஒரு தனியார் வங்கி திவால் ஆகிறது என்றால்,
தனியார்மயக் கொள்கை தோல்வி அடைகிறது
என்று பொருள். இதை முந்திய மன்மோகன்சிங்
அரசும் சரி, இன்றைய மோடி அரசும் சரி,
அனுமதிக்காது. எனவேதான் விரைந்து நடவடிக்கை
எடுத்து (acted swiftly), யெஸ் வங்கியை மீட்டு இருக்கிறது
மோடி அரசு.
பொருளாதாரக் கொள்கைகளைப் பொறுத்த மட்டில்,
மன்மோகன்சிங் அரசும் மோடி அரசும் LPG
கொள்கைகளையே பின்பற்றி வருகின்றன. ஏனெனில்
LPG கொள்கைகள் இந்திய ஆளும் வர்க்கத்தின்
கொள்கைகள் ஆகும்.
காங்கிரஸ் அரசுக்கும் பாஜக அரசுக்கும் பொருளாதாரக்
கொள்கைகளைப் பொறுத்த மட்டில், எந்த வேற்றுமையும்
இல்லை என்ற உண்மையை உணராதவர்களால்
இந்தக் கட்டுரையைப் புரிந்து கொள்ள முடியாது.
********************************************************

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக