கொரோனா வைரசும் பிறழ்புரிதல்களும்!
---------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
---------------------------------------------------------------------
நான் அறிவியல் மன்றம் நடத்தினாலும் கூட, இது
பிரதானமாக இயற்பியல் மன்றம்தான்:
Physics always includes maths என்ற கோட்பாட்டின்படி
இது கணித மன்றமும்தான்!
எனினும் தவிர்க்க இயலாமல் பிற துறைகள் குறித்து
உயிரியல், மருத்துவம், பொது சுகாதாரம் குறித்தும்
தேவை ஒட்டி நியூட்டன் அறிவியல் மன்றம் கட்டுரைகள்
எழுதி வருகிறது. அந்த வகையில் இதுவரை கொரோனா
வைரஸ் குறித்து மூன்று கட்டுரைகளை எழுதி உள்ளோம்.
இன்று வெளியான எமது மூன்றாவது கட்டுரையைப்
படித்த பின்னர், இந்த வைரசின் ஆயுட்காலம் குறித்து
சில கேள்விகள் எழுப்பப் பட்டுள்ளன. அவற்றுக்கு
விடையளிக்கவே இக்கட்டுரை.
COVID-19 எவ்வளவு காலம் உயிர் வாழும் என்பதை அறிய
அமெரிக்க விஞ்ஞானிகள் அண்மையில் பல்வேறு ஆய்வுகளை
மேற்கொண்டனர். இந்த ஆய்வு முடிவானது
New England Journal of Medicine என்ற அறிவியல் ஏட்டில்
ஒரு கட்டுரையாக வெளிவந்தது
(பார்க்க: Neeltje Van Doremalan மற்றும் பலர் எழுதிய கட்டுரை)
பிவரும் பொருட்களில் கொரோனா வைரஸ்
உயிர் வாழும் நேரம் வருமாறு:-
தாமிரம் (Copper surface)...4 மணி நேரம் உயிர் வாழும்.
எஃகு ...... 13.1 மணி நேரம்
பிளாஸ்டிக்......15.9 மணி நேரம்.
இந்தத் தரவுகள் விஞ்ஞானி டோரிமலன் எழுதியுள்ள
தரவுகள் ஆகும். இவை வைரசின் அரை ஆயுளைக்
குறிப்பிடுவன.
இங்கு ஒரு கதிரியக்கத் தனிமத்தின் அரை ஆயுள்
(half life) என்றால் என்ன என்று தெரிந்து கொள்ள வேண்டும்.
என்னிடம் ஒரு தனிமத்தின் சாம்பிள் 10 கிராம் உள்ளது.
இந்த 10 கிராமானது 5 கிராமாகக் குறைய வேண்டுமென்றால்
அதற்கு ஆகும் கால அளவு அரை ஆயுள் எனப்படும்.
தெளிவுபெற ஒரு எளிய கணக்கைச் செய்வோம்.
கணக்கைச் செய்தால் அல்லாமல், கோட்பாட்டைப்
புரிந்து கொள்ள இயலாது.
கணக்கு இதுதான்!
----------------------------
என்னிடம் கதிரியக்கத் தன்மை உடைய துத்தநாகத்தின்
(Zinc) ஒரு ஐசோடோப்பின் சாம்பிள் உள்ளது. அதன் அரை
ஆயுள் 5 நிமிடம் ஆகும். என்னிடமுள்ள சாம்பிளின் நிறை
10 கிராம் ஆகும். 15 நிமிடம் கழித்து என்னிடம் எவ்வளவு
சாம்பிள் மிச்சம் இருக்கும்?
T (half) = 5 minutes
Now 15 divided by 5 = 3.
3 half lives have elapsed.
(1/2)^3 = 1/8 = 0.125 (amount remaining after 3 half lives)
Sample remaining = 10 gram x 0.125 = 1.25 gram.
ஆரம்பத்தில் 10 கிராம் சாம்பிள் இருந்தது.
15 நிமிடம் கழித்து, 1.25 கிராம் சாம்பிள் மட்டுமே
மிச்சம் உள்ளது.
விஞ்ஞானிகள் எழுதிய கட்டுரையில் வைரசின்
அரைஆயுள் தரப்பட்டு உள்ளது. அதிலிருந்து
அந்த வைரஸ் ஒரு மீடியத்தில் எவ்வளவு நேரம்
உயிர் வாழும் என்று புரிந்து கொள்ள வேண்டும்.
இதற்கு அரைஆயுள் பற்றிய புரிதல் வேண்டும்.
*************************************************

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக