வெள்ளி, 20 மார்ச், 2020

பிரதமர் மோடியின் இந்தி உரையும்
அதைத் தமிழில் மொழிபெயர்க்கத் துப்பற்ற
தமிழக ஊடகத்தினரின் மொழித்திறன் இன்மையும்!
-----------------------------------------------------------------------
கொரோனா வைரஸ் குறித்து பிரதமர் மோடி
நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார் தற்போது!

இதை தமிழ் டி வி சானல்கள் ஒழுங்காக
மொழிபெயர்க்கவில்லை. காரணம் இந்தி தெரியாதவர்கள் 
ஊடகங்களில் இருந்து கொண்டு,
தண்டச் சம்பளம் வாங்கிக்கொண்டு திரிவதுதான்!

மோடி பத்துவாக்கியம் பேசினால் ஒரே ஒரு
வாக்கியத்தை மட்டுமே மொழிபெயர்த்துத்
தருகிறது  ஊடகக் கூட்டம்.

எனக்கு இந்தி தெரியும்!
பிரதமர் மோடி மிக எளிய இந்தியில் பேசுகிறார்.
அவர் குஜராத்தியில் பேசினாலும் அல்லது
மராத்தியில் பேசினாலும் என்னால் எளிதாகப்
புரிந்து கொள்ள இயலும்!
இந்த ஊடக நபர்களை நம்பி நான் இல்லை!

பிரதமர்  ஆங்கிலத்தில் பேசினாலும்
தமிழக ஊடகங்களின் மொழிபெயர்ப்பு
இந்த லட்சணத்தில்தான் இருக்கும்!
*************************************************

மருதுபாண்டியன்


நாட்டு மக்களுக்கு உரையாற்றும் வாய்ப்பு
ஜனாதிபதி, பிரதமர் ஆகிய இருவருக்கு
மட்டுமே கிடைக்கிற வாய்ப்பு.

டாக்டர் அப்துல் கலாம் அவர்கள் ஜனாதிபதியாக
இருக்கும்போது, குடியரசுத் தலைவரின் உரையை
இந்தியில் ஆற்றும்படி கலாம் அவர்களை
வாஜ்பாய் கேட்டுக் கொண்டார். கலாம் அவர்களுக்கு
இந்தி தெரியும்.

ஆனால் கலாம் அவர்கள் வாஜ்பாயின் வேண்டுகோளை
ஏற்று இந்தியில் உரையாற்ற இயலாது என்று
தெரிவித்து விட்டார்.

அப்போது வாஜ்பாய் அவர்கள், தமிழில் உரையாற்றலாம்
என்றும் அதற்கு எத்தடையும் இல்லை என்றும்
கலாம் அவர்களிடம் தெரிவித்தார்.
இருப்பினும் கலாம் அவர்கள் ஆங்கிலத்திலேயே
தமது உரையை நிகழ்த்தினார்.

அதற்கு முன்பு ஜனாதிபதியாக இருந்த ஆர் வெங்கட்ராமன்
அவர்களும் தமது பதவிக்காலம் முழுவதும்
ஆற்றிய உரை ஆங்கிலத்திலேயே இருந்தது.


ஹெச் ராஜா இலவசமாக மொழிபெயர்ப்பார்.
என்னுடைய மொழிபெயர்ப்புக் கட்டணம் அதிகம்.
 









     

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக