வியாழன், 5 மார்ச், 2020

எல் ஐ சிக்கு ஆபத்தா?
தேசத்தின் பொருளுற்பத்தியில் எல்ஐசியின் பங்கு!
இந்தியப் பொருளுற்பத்தி பற்றிய கட்டுரை!
---------------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
--------------------------------------------------------------------------------
இன்சூரன்சில் இரண்டு வகை உண்டு.
1) ஆயுள் இன்சூரன்ஸ் (life insurance)
2) பொது இன்சூரன்ஸ் (general insurance)
பொது இன்சூரன்ஸில் life தவிர மீதி அனைத்தும்
அடக்கம்.

ஆயுள் இன்சூரன்ஸ் என்றால், ஒருவர் இறந்து போனால்
பணம் தருவது. இந்தியாவில் ஆயுள் இன்சூரன்ஸ்
வழங்கும் உரிமை இரண்டே இரண்டு நிறுவனங்களுக்கு
மட்டுமே இருந்தது. அவ்விரண்டும் அரசு நிறுவனங்கள்.

அ) எல் ஐ சி
ஆ) பி எல் ஐ (PLI = Postal Life Insurance)
PLI வழங்கும் ஆயுள் இன்சூரன்ஸ் அரசு ஊழியர்களுக்கு
மட்டுமே. இதை மத்திய அரசின் அஞ்சல் துறை வழங்குகிறது.

எல்ஐசியின் ஏகபோகம் இருந்தபோதிலும், காங்கிரஸ்
ஆட்சியின்போது,தனியார் நிறுவனங்களும்
இன்சூரன்ஸில் அனுமதிக்கப் பட்டிருந்தன.
ஆனால் ஆயுள் இன்சூரன்சு ((life) வழங்க அனுமதிக்கப்
படவில்லை. பீர்லெஸ் (Peerless) என்னும் தனியார்
இன்சூரன்ஸ் நிறுவனம் அப்போது மிகவும் பிரபலமாக
இருந்ததை பொருளுற்பத்தியில் அக்கறை உள்ளவர்கள்
அறிவார்கள். இது பின்னர் நொடித்துப் போனது.             

இன்சூரன்சில் அரசின் ஏகபோகத்தை அடித்து நொறுக்கிய
"தலைசிறந்த" புண்ணியவான்கள் நாலு பேர்.

1) புண்ணியவான் நரசிம்மராவ்
2) புண்ணியவான் பிரணாப் முகர்ஜி
3) புண்ணியவான் டாக்டர் மன்மோகன் சிங்
4) புண்ணியவான் ப சிதம்பரம்.
(ப சிதம்பரத்தைச் சேர்க்காமல் இந்தியாவில்
புண்ணியவான்களின் பட்டியலைத் தயாரிக்க முடியாது)

உலகமயக் கொள்கைகளுக்குப் பின், தனியார்
நிறுவனங்களுக்கும் ஆயுள் இன்சூரன்ஸ் (life) வழங்கும்
உரிமையை காங்கிரஸ் அரசு வழங்கியது. இதன்
விளைவாக புற்றீசல் போல் பல தனியார் நிறுவனங்கள்
எல்ஐசிக்குப் போட்டியாக ஆயுள் இன்சூரன்ஸ்
வழங்க முன்வந்தன.

ஆனால் இந்த நிறுவனங்களை மக்கள் சீந்தவில்லை.
இவர்களை நம்பி இவர்களிடம் ஆயுள் இன்சூரன்ஸ்
பாலிசி எடுக்க எவரும் முன்வரவில்லை. இன்சூரன்ஸ்
என்பது பரஸ்பர நம்பிக்கை (mutual trust) சார்ந்தது.

அந்நிய நாட்டு நிறுவனங்களுடன் tie up செய்து கொண்ட
இந்த நிறுவனங்களை மக்கள் புறக்கணித்ததால்
நூற்றுக்கணக்கான நிறுவனங்கள் மூடப்பட்டன.
நிறுவனம் நடத்த முடியாமல் தோல்வி அடைந்த
பல முதலாளிகள் தற்கொலை செய்து கொண்டனர்.

தனியார் நிறுவனங்களால் எல்ஐசிக்கு ஆபத்தா?
ஒருபோதும் இல்லை; மாறாக எல் ஐ சியை எதிர்த்து
நின்றவன் எவனும் வாழ முடியாது என்ற நிலைதான்
உள்ளது.
      
இந்தியப் பொருளுற்பத்தியின் கடவுள் எல் ஐ சிதான்.
இந்தியாவின் தங்கச் சுரங்கம் எல் ஐ சிதான்.
மத்திய அரசு தனது ரயில்வே நவீனமயத் திட்டங்களுக்கு
எல் ஐ சியிடம் இருந்துதான் பணம் பெறுகிறது.
அரசாங்கத்துக்கே கடன் கொடுக்கும் கடவுள்
எல் ஐ சிதான்.

பொதுத்துறை வங்கிகள் ஊருக்கெல்லாம் கடன்
கொடுக்கின்றன. அவர்களுக்குக் கடன் வேண்டுமென்றால்
அதைக் கொடுப்பது எல்ஐசிதான்.

எல் ஐ சி குறித்து நிறைய எழுத வேண்டும். அது இப்போது
இயலாது. போன மாதம் ஒரு தொழிற்சங்கக் கூட்டத்தில்
எல் ஐ சி குறித்து உரையாற்றினேன். அது வெளி மாநிலத்
தோழர்கள் பங்கெடுத்த கூட்டம் என்பதால், ஆங்கிலத்தில்
ஆற்றிய உரை அது. எனவே அதைச் சேமித்து
வைக்கவில்லை.

இந்தியப் பொருளுற்பத்தியில் எல் ஐ சியின் பாத்திரம்
பற்றி மார்க்சிய லெனினிஸ்டுகளின் கருத்து என்ன?
இது குறித்து மா லெ அமைப்பினர் யாரவது ஏதாவது
எழுதி இருக்கின்றனரா? இல்லை.

பிரபல மார்க்சிய கிராம்சிய "வினவு" என்னும் இணைய
தளத்தைப் பார்த்தேன். ஒரு குட்டி பூர்ஷ்வா ஊடகவியலாளர்
LIC பற்றிய வெறும் தக்வல்களாகத் தொகுத்த ஒரு முகநூல்
பதிவை வெளியிட்டு அத்தோடு ஓடி விட்டனர் மேற்படி
வினவு இணையதள மார்க்சிய கிராம்ஸியவாதிகள்.
சொந்தமாக எழுத, பாவம், மூளைக்கு அவர்கள் எங்கே
போவார்கள்?

பொருளுற்பத்தியில் இருந்து முற்றிலும் துண்டித்துக்
கொண்டு, வெறும் பண்பாட்டுக் கருமாந்திரங்களை
மட்டும் கட்டி அழுபவர்களாக அனைத்து மார்க்சிய
கிராம்ஸியவாதிகளும் இருக்கின்றனர் என்பதை
நான் நிரூபித்து இருக்கிறேன்.
************************************************************************


BSNL விருப்ப ஓய்வுத் திட்டம் என்பது BSNLல் உள்ள
கம்யூனிஸ்ட் தொழிற்சங்கங்களால் ஏற்றுக் கொள்ளப்
பட்ட ஒரு திட்டம். அது BSNLஐப் புத்தாக்கம் செய்யும்
திட்டத்தின் (Revival plan) ஒரு பகுதி.

BSNL தொழிற்சங்கங்கள் இந்த விருப்ப ஓய்வூத்
திட்டத்தை எதிர்த்திருந்தால், எந்த அரசாலும்
அதைக் கொண்டு வர இயலாது.இதுதான் உண்மை.
போர்க்குணமிக்க லட்சோப லட்சம் BSNL ஊழியர்களின்
முடிவை, BSNL குறித்து எதுவும் தெரியாதவர்கள்
விமர்சிப்பது அறியாமை ஆகும்.

5G ஏலம் என்பது இந்தியாவின் பொருளுற்பத்தியில்
பாரதூரமான தாக்கத்தை ஏற்படுத்த வல்லது.
இதைப் புரிந்து கொள்ள குறைந்தபட்ச அறிவியல்
புரிதலுடன், இன்றைய டெலிகாம் தொழிலில்
உள்ள நெருக்கடி பற்றியும் அறிந்திருக்க வேண்டும்.

இந்தியாவின் நிறுவனங்கள் 5ஜி ஏலம் எடுக்க
இயலாமல் படுத்த படுக்கையாக இருக்கும்போது,
மத்திய அரசு நடத்த விரும்பும் ஏலம் என்ன பாதிப்பை
ஏற்படுத்தும் என்று தெரியாமல் பேசுகிறீர்கள்.
அந்நிய நிறுவனங்களுக்கு இந்தியத் தொலைதொடர்பை
தாரை வார்த்துக் கொடுப்பதற்கே இந்த ஏலம் என்ற
உண்மை தெரியாமல் பேசுகிறீர்கள்.

இந்தியப் பொருளுற்பத்தி பற்றி எதுவும் தெரியாமல்,
பொருளுற்பத்தியில் இருந்து துண்டித்துக் கொண்டு,
வெறும் கிராம்சியவாதியாக இருக்கிறார்கள்
என்று நான் சொல்வதற்கு, தங்களின் இந்தப்
பதிவே உதாரணமாக உள்ளது.
தோழரே, எவ்வளவு காலம்தான் இந்து முஸ்லீம்
என்று சக்தியை வீணடித்துக் கொண்டு
இருப்பீர்கள்? பொருளுற்பத்தி அரங்கத்துக்கு
வாருங்கள் என்று உங்களை அழைக்கிறேன்.


திரும்பிச் செலுத்தாத நிறுவனங்கள் ஏலத்தில்
பங்கேற்க வாய்ப்பில்லை. 5ஜி அலைக்கற்றை
வாங்க அவர்களிடம் பணம் ஏது? வங்கிகள் கடன்
கொடுக்காது என்று SBI Chairman சொல்லி இருக்கிறாரே.







 
   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக