செவ்வாய், 10 மார்ச், 2020

குரோனி முதலாளித்துவத்தை ஆதரிக்கும்
தமிழகத்தின் குட்டி முதலாளித்துவம்!
-------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
--------------------------------------------------------------
யெஸ் வங்கியைப் பற்றி ஒரு இழவும் தெரியாமல்
வானுக்கும் பூமிக்கும் குதித்துக் கொண்டிருக்கிறது
குட்டி முதலாளித்துவம். யெஸ் வங்கியின் Assets என்ன,
Liabilities என்ன என்று ஒரு குட்டி முதலாளித்துவரிடம்
கேட்டேன். அசடு வழிந்த அவர், "அதெல்லாம்
தெரிஞ்சுக்கணுமா தோழர்": என்று கேட்டு, தனது
தற்குறித் தனத்தின் உச்சத்தைத் தொட்டார்.

Yes Bank Ltd, Reconstruction Scheme 2020 என்ற ரிசர்வ் வங்கியின்
ஆவணத்தைப் படித்தீர்களா என்று மேற்படி குட்டி
முதலாளித்துவரிடம் கேட்டேன்.  கேள்வியையே அவரால்
பிரிந்து கொள்ள இயலவில்லை. இரு வெறும் ஐந்து பக்க
ஆவணம்தான் குட்டி முதலாளித்துவரே என்றேன். அந்த
ஆவணம் தமிழில் இருக்கிறதா என்று கேட்டார். இல்லை
என்றேன்.

தமிழகத்தின் குட்டி முதலாளித்துவத்தின் தரமும்
தராதரமும் இந்த லட்சணத்தில்தான் இருக்கிறது.
ஒரு வங்கியின் Assets, Liabilities பற்றி ஒரு இழவும்
தெரியாத ஒரு கசடனோடு, அந்த வங்கியைப் பற்றி
என்ன உரையாடல் நிகழ்த்த முடியும்?

யெஸ் வங்கியானது ரூ ஒரு லட்சத்து நாற்பத்தி
இரண்டாயிரம் கோடி (ரூ 1,42,000 கோடி) கடன்
வழங்கி இருக்கிறதே என்று வானத்துக்கும்
பூமிக்குமாகக் குதிக்கிறார் நமது குட்டி
முதலாளித்துவர். அந்த அளவு பணம் வங்கியில்
இருப்பதனால்தானே கடன் கொடுக்க முடிகிறது
என்ற உண்மை அவரின் மூளையில் உறைக்கவில்லை.

யெஸ் வங்கியின் நெருக்கடி குரோனி முதலாளித்துவத்துடன்
தொடர்பு உடையது. குரோனி முதலாளித்துவத்திடம்
இருந்து தொடர்பற்றதாக யெஸ் வங்கி நெருக்கடியைப்
பார்க்கக் கூடாது.

ஆனால் குரோனி முதலாளித்துவம் என்றால் என்ன
என்று தமிழகத்தின் குட்டி முதலாளித்துவத்துக்குத்
தெரியாது. யார் யாரெல்லாம் குரோனிகள் என்றும்
அவர்களுக்குத் தெரியாது. குறோணிகள் எப்படிப்
பொதுப்பணத்தைச் சூறையாடுவார்கள் என்றும்
அரசனது அவர்களுக்கு எப்படி எப்படி எல்லாம்
சலுகை வழங்கும் என்பதும் குட்டி முதலாளித்துவத்துக்குத்
தெரியாது.

Ignorance is the source of all evils என்றான் சாக்ரட்டீஸ்.
குட்டி முதலாளியத்தன் அறியாமையே சகல
தீமைகளுக்கும் ஊற்றுக்கண்ணாக இருக்கிறது.
************************************************
 


 





       

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக