சனி, 21 மார்ச், 2020

கொரோனா வைரஸ் எவ்வளவு காலம் உயிர் வாழும்?
---------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-------------------------------------------------------------------------------
கொரோனா வைரஸ் என்று சொல்லும்போது அது
ஒரு ஒற்றை வைரஸ் (single virus) என்ற புரிதலையே
பரந்துபட்ட மக்கள் வெளிப்படுத்துகிறார்கள். ஆனால்
கொரோனா வைரஸ் என்பது ஒத்த தன்மை உடைய
பல்வேறு வைரஸ்களின் தொகுப்பு. இந்த வைரஸ்கள்
தாக்கினால் தீவிர சுவாசக் கோளாறுகளும் மூச்சுத்
திணறலும்  ஏற்படும்.

2019 இறுதியில் சீனாவில் யுஹான் (Wuhan, China)
மாகாணத்தில் கண்டறியப்பட்ட வைரசானது
கொரோனா வைரஸ் தொகுப்பில் கடைசியாகச் சேர்க்கப்
பட்டதாகும். கொரோனா வைரஸ் தற்போது COVID-2019
என்று அறியப் படுகிறது.

இந்த வைரஸ் எவ்வளவு காலம் உயிர் வாழும்? இது
குறித்து பல்வேறு அனுமானங்கள் உலா வருகின்றன.
COVID-19 எவ்வளவு காலம் உயிர் வாழும் என்பதை அறிய
அமெரிக்க விஞ்ஞானிகள் அண்மையில் பல்வேறு ஆய்வுகளை
மேற்கொண்டனர். இந்த ஆய்வு முடிவானது
New England Journal of Medicine என்ற அறிவியல் ஏட்டில்
ஒரு கட்டுரையாக வெளிவந்தது
(பார்க்க: Neeltje Van Doremalan மற்றும் பலர் எழுதிய கட்டுரை)

பிவரும் பொருட்களில் கொரோனா வைரஸ்
உயிர் வாழும் நேரம் வருமாறு:-
தாமிரம் (Copper surface)...4 மணி நேரம் உயிர் வாழும்.
எஃகு ......  13.1 மணி நேரம்
பிளாஸ்டிக்......15.9  மணி நேரம்.

துணியின் மீது எவ்வளவு நேரம் உயிர் வாழும் என்ற
ஆய்வு முடிவு இன்னும் வெளிவரவில்லை. சூரிய
வெப்பத்தில் நல்ல உச்சி வெயிலில் இந்த வைரஸ்
எவ்வளவு காலம் தாக்குப் பிடிக்கும் என்பது குறித்தும்
ஆய்வு முடிவு எதுவும் வெளிவரவில்லை. விரைவில்
வெளியாகும் என எதிர்பார்க்கப் படுகிறது.

ஒரு டீக்கடையில் காப்பர் பாய்லர் இருக்கிறது.
அதன் மீது கொரோனா வைரஸ் வந்து அமர்கிறது
என்று வைத்துக் கொள்வோம். இந்த வைரஸ் அந்த
பாய்லரின் மீது எவ்வளவு நேரம் உயிருடன் இருக்கும்?
அதிகபட்சம் நாலு மணி நேரம் மட்டுமே
உயிருடன் இருக்கும்.
******************************************************

கொரோனா வைரஸ் ஏன் செலக்டிவாக ஒரு சில
நாடுகளை மட்டுமே பாதித்துள்ளது?
-------------------------------------------------------------------------
கொரோனா வைரசின் உயிர்க்கொல்லித் தன்மை
பற்றி உலகம் ஏற்கனவே அறியும்.கொரோனா வைரஸின்
ஒரு வகையான சார்ஸ் வைரஸை மருத்துவ உலகம்
(SARS = Severe Accurate Respiratory Syndrome)
எதிர்கொண்டிருப்பதால், அதன் ஆபத்து
நன்கறியப் பட்ட ஒன்று என்பதால், சீனத்தின் கொரோனா
வந்தவுடனே உலகம் பல மடங்கு சுதாரித்துக் கொண்டது.

COVID-19 வைரஸின் பிறப்பிடம் சீனா என்பதால்,
சீனா மூலமே உலகிற்குப் பரவ முடியும். வேறெந்த
வழியும் கிடையாது. எனவே உலகின் முக்கியமான
அனைத்து நாடுகளும் பயணத்தடைகளை (Travel bans)
ஏற்படுத்தின. சந்தேகத்துக்கு உரிய பயணிகள்
அனைவரும் குவாரன்டைன் செய்யப் பட்டனர்.

மிகக் கடுமையான கட்டுப்பாடுகளை எல்லா நாடுகளும்
விதித்தன. சவூதி அரேபியாவில் ஹஜ் யாத்திரை,
தொழுகை அனைத்தும் தடை செய்யப்பட்டன. இதன்
மூலம் அறிவுபூர்வமாக நடந்து கொண்டு சவூதி
அரேபியா தன்னையும் தன் நாட்டு மக்களையும்
காப்பாற்றிக் கொண்டது.

சீனா போன்ற காற்று மாசடைந்த, அசுத்தமான ஒரு
தேசத்தில்தான் கொரோனா போன்ற வைரஸ்கள்
பிறக்க முடியும்.

கொரோனா வெளிப்பட்டதுமே, எந்தெந்த நாடுகள்
எல்லாம் சுதாரித்துக் கொண்டு, பயணத் தடைகளை
ஏற்படுத்தி, கொரோனா நுழைய முடியாமல் தடுத்தனவோ
அந்த நாடுகள் எல்லாம் தப்பித்துக் கொண்டன.

இத்தாலியில் அதிகப் பாதிப்புக்கான காரணம் அரசு
மின்னல் வேகத்தில் பயணத் தடைகளை ஏற்படுத்தாததும்,
அரசின் விதிமுறைகளை 100 சதக் கட்டுப்பாட்டுடன்
மக்கள் பின்பர்றாததுமே காரணம். இதன் பின்னணியில்
கிறித்துவ மதத்தின் செல்வாக்கு இருப்பதே மக்களின்
அசட்டை உணர்வுக்கு காரணம்.

ஹஜ் யாத்திரையை ரத்து செய்து, இஸ்லாமியர்கள்
தொழுகைக்கு கூடுவதை அறவே தவிர்த்த சவூதி
அரேபியா, கொரோனாவைப் பொறுத்த மட்டில்
புத்திசாலித் தனமான நாடு.

இந்தியாவில் மோடி அரசானது மிகச் சிறப்பான
நடவடிக்கைகளை எடுத்திருந்தது.விருப்பு வெறுப்பற்று
art of governance அடிப்படையில் விஷயத்தை அணுகும்
யார் எவரும் இதை அட்டியின்றி ஒப்புக் கொள்வர்.
ஒருவேளை டாக்டர் மன்மோகன்சிங்கின் காங்கிரஸ்
அரசு தற்போது இருந்திருக்குமானால், கொரோனா
வேகமாகப் பரவிய நாடுகளில் ஒன்றாக இந்தியா
இருந்திருக்கும். பாலி எண்ணிக்கை வெகு சுலபமாக
ஆயிரக் கணக்கில் இருந்திருக்கும்.

ஆனால் மோடி அரசானது கொரோனா பலிகளின்
எண்ணிக்கையை ஒற்றை இலக்கத்துக்குள் கட்டுக்குள்
வைத்திருப்பது பெரும் நிர்வாகத்திறனின் வெளிப்பாடு.

தமிழகத்திலும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்
டாக்டர் விஜய பாஸ்கர் மிகச் சிறந்த நிர்வாகத்திறனை
வெளிப்படுத்தி கொரோனாவைக் கட்டுக்குள் வைப்பதில்
பெரும் வெற்றி அடைந்துள்ளார். அன்று முதல் இன்று
வரையிலான திராவிட இயக்க அரசியல்வாதிகளில்
IQ அதிகம் உடையவர் இவரே. டாக்டர் விஜயபாஸ்கருக்குப்
பதிலாக, IQ குன்றிய வேறு எவரேனும் அமைச்சராக
இருந்திருந்தால், கொரோனா பலிகள் இங்கு செஞ்சுரி
அடித்திருக்கும்.

கொரோனாவைப் பொறுத்து மிக மோசமான நிர்வாகத்தை
வெளிப்படுத்தியவர் கேரள முதல்வர் பினராயி விஜயன்.
பினராயி விஜயன் கல்வி அறிவற்றவர். தெருச்சண்டையில்
பிறந்து, தெருச்சண்டையில் வளர்ந்து, தெருச்சண்டையைத்
தவிர்த்து வேறெதற்கும் தன் மூளையில் இடம் தராத
பினராயி விஜயன் IQ குன்றியவர். அவரிடம் நிர்வாகத்
திறனை எங்ஙனம் எதிர்பார்க்க இயலும்?

ஒரு சிறிய மாநிலத்தை நிர்வகிக்கத் துப்பற்றவர்தான்
பினராயி விஜயன்.இந்தியாவிலேயே கேரளத்தில்தான்
கொரோனா பாதிப்பு அதிகம். கேரள முதல்வராக
நவீன் பட்நாயக் இருப்பதாக கற்பனை செய்தால்,
அவர் மிகச் சிறப்பாக நிர்வாகம் செய்து கொரோனா
பாதிப்பைக் குறைத்திருப்பார்.

மார்க்சியக் காற்று வேகமாக அடித்தபோது, பினராயி
விஜயன் போன்ற எச்சில் இலைகள் கோபுரத்தில் ஒட்டிக்
கொண்டன. இனி இப்படி நடக்காது.

மாவோயிஸ்டுகளைச் சுட்டுக் கொல்லுவது மட்டுமே
நிர்வாகத் திறன் என்று கருதும் பினராயி
விஜயனுக்காக கண்ணீர் சிந்த விரும்புவோர்
வேறிடம் செல்க.    
     
 

 






 




  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக