Yes bank had the deposit book of Rs 2.09 lakh crore at the end of September 2019.
5. Huge Liabilities:
The Yes Bank has a total liability of 24 thousand crore dollars. The bank has a balance sheet of about $40 billion (2.85 lakh crore rupees). The Yes Bank has to pay $ 2 billion to increase the capital base.
================

As on September 30, 2019; the Non-Performing Assets (NPAs) of Public Sector Banks (PSBs) stood at ₹7.27 lakh crore. The private sector banks are also have huge NPA.
-----------------------------------------------------------
izhintha poykalil pukalidam
பொய்களில் புகலிடம்!
---------------------------
தோழர் மருதுபாண்டியன் அவர்களுக்கு,
1) கடந்த இரண்டு வருடங்களில் மட்டும் யெஸ் வங்கி
கொடுத்த கடன் ரூ 2,41,000 கோடி என்ற செய்தியில்
உண்மை இல்லை.
2) இந்தச் செய்தியின் சுய முரண்பாடுகளே இச்செய்தி
ஒரு பொய் என்பதை அறிவிக்கும்.
3) இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, ரூ 2,41,000 கோடி
அளவுக்கு எஸ் வங்கி கடன் கொடுத்திருக்கிறது என்றால்,
குறைந்தது அந்த அளவு பணம் (ரூ 2,41,000 கோடி)
வங்கியில் இல்லாமல் கடன் கொடுக்க முடியாது. அந்த
அளவு பணம் உள்ள வங்கி இன்று திடீரென திவால்
ஆக முடியாது.
4) நான் ஒருவருக்கு ஆயிரம் ரூபாய் கடன்
கொடுத்திருக்கிறேன் என்றால், குறைந்தது என்னிடம்
ஆயிரம் ரூபாய் இருந்தால்தான் கடன் கொடுக்க
முடியும் அல்லவா?
5) இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, ரூ 2,41,000 கோடி
கடன் கொடுத்திருந்தால், அது வங்கியின் ஆவணங்களில்
இருக்கும். அப்படி எந்த ஆவணமும் இல்லை. இருந்தால்
காட்டுங்கள்.
6) ஒரு கடன் எப்போது வாராக்கடனாக (NPA)
அறிவிக்கப்படும்? நேற்று கடன் கொடுத்து விட்டு
இன்று வாராக்கடன் என்று அறிவிக்க இயலாது.
அடுத்து கோடிக்கணக்கான ரூபாய் கடனாகக்
கொடுக்கப்படும்போது, அவை நீண்ட காலக்
கடனாக (long term loan) மட்டுமே தரப்படும்.
7) இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, ரூ 2,41,000 கோடி
கடனாகக் கொடுக்கப் பட்டிருந்தால், அதை
இன்றைக்கே வாராக்கடன் என்று அறிவிக்க இயலாது.
வாராக்கடன் என்று declare செய்வதற்கு நிறைய
சட்ட திட்டங்களும் நடைமுறைகளும் உள்ளன.
எனவே இந்த ரூ 2,41,000 கோடியை அதற்குள்
வாராக்கடன் என்று அறிவிக்க இயலாது.
8) குரோனி முதலாளித்துவம் என்றால் என்ன என்று
தெரியாமல், வங்கி நடைமுறைகள் சட்ட திட்டங்கள்
பற்றி அறிந்திராமல் தமிழ்ச்சமூகம் இருக்கும்போது
இத்தகைய பொய்கள் கொரோனா வைரசாகப்
பரவிக் கொண்டுதான் இருக்கும்.
-----------------------------------------------------
குரோனி முதலாளித்துவத்தின் சரிவே
யெஸ் வங்கியின் நெருக்கடிக்குக் காரணம்!
--------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
---------------------------------------------------
1) 2018-19ல் யெஸ் வங்கி ரூ 1,42,000 கோடி அளவுக்கு
கடன் கொடுத்துள்ளது என்ற செய்தியைப் பார்ப்போம்
2) இது மலைக்க வைக்கும் பிரம்மாண்டமான
தொகையாகத் தெரியக் கூடும். அதாவது அன்றாட
வாழ்க்கையில் நண்பர்கள் ஒருவருக்கொருவர்
கைமாத்தாக வாங்கும் ரூ 500, ரூ 1000த்துடன்
ஒப்பிடும்போது இந்த பிரம்மாண்டமான தொகை
பாமரர்களுக்கு மலைப்பைத் தருவதில் வியப்பில்லை.
3) யெஸ் வங்கியானது corporate banking செய்யும்
வங்கி என்பதை உணர வேண்டும்.அது சாதாரண
மக்களுக்கு மட்டும் சேவை வழங்கும் வங்கி அல்ல.
எனவே தொகைகள் பெரிதாகவே இருக்கும். இது நம்
மூளைக்குப் பழக வேண்டும்.
4) 2018-19ல் யெஸ் வங்கி பல்வேறு கார்ப்பொரேட்
வாடிக்கையாளர்களுக்கு ரூ ஒரு லட்சத்து நாற்பத்தி
இரண்டாயிரம் கடன் வழங்கி உள்ளது. இவ்வளவு
பெருந்தொகை கடனாக வழங்கப்பட்டு இருப்பது ஒரு
உண்மையைச் சுட்டிக் காட்டுகிறது. அதாவது
கடந்த ஆண்டில் ரூ 1,42,000 கோடி கடன் வழங்கும்
அளவுக்கு வங்கியின் நிதிநிலைமை ஆரோக்கியமாக
இருந்திருக்கிறது.
5) பணம் இல்லாத வங்கியால் யாருக்கும் கடன்
வழங்க முடியாது. பணம் இருந்தால் மட்டுமே
கடன் வழங்க முடியும். எனவே கடன் வழங்கப் பட்டு
இருக்கிறது என்பதன் பொருள் வங்கியில் பணம்
இருந்திருக்கிறது என்பதே ஆகும்.
6) கோடிக்கணக்கான ரூபாய் கடனாகக்
கொடுக்கும்போது, அது நீண்ட காலக் கடனாகவே
இருக்கும். நேற்று கடன் கொடுத்து விட்டு, இன்று
திருப்பிக் கேட்கும் கடன் அல்ல இது.
7) இந்த ரூ 1,42,000 கோடி பெருந்தொகையால், வங்கிக்கு
ஆபத்து எப்போது ஏற்படும்? இன்னும் பத்தாண்டுகள்
கழித்து ஏற்படக் கூடும். அதாவது இன்னும் பத்தாண்டு
கழித்து, 2029ல் அல்லது 2030ல் இந்தக் கடன்
வங்கிக்குத் திரும்பிச் செலுத்தப் படாமல், வாராக்
கடனாக மாறி விட்டால், அன்றுதான் யெஸ் வங்கிக்கு
ஆபத்து. மற்றப்படி இந்த ரூ 1,42,000 கோடி இப்போதே
இந்த நிமிடமே வாராக்கடனாக ஆகி விட்டது என்று
குட்டி முதலாளித்துவம் கருதுவதில் உண்மை இல்லை.
இதெல்லாம் குட்டி முதலாளித்துவத்தின் அறிவெல்லைக்கு
அப்பாற்பட்ட விஷயம்.
8) அப்படியானால் இன்று 2020ல் யெஸ் வங்கிக்கு
ஏற்பட்ட நெருக்கடிக்கு என்ன காரணம்?
பத்தாண்டுகளுக்கு முன்பு, 2010ல் அல்லது அதற்கு முன்பு,
கொடுத்த கடன்கள் வாராக்கடன்களாக ஆகி
விட்டதாலேயே இன்று யெஸ் வங்கிக்கு நெருக்கடி
ஏற்பட்டு உள்ளது.
9) இங்கு ஒரு முக்கியமான formulaவை நாம் அறிந்து
கொள்ள வேண்டும். ஒரு வங்கி ஒரு குறிப்பிட்ட
ஆண்டில், say, n, நெருக்கடிக்கு இலக்காகிறது
என்றால், அந்த வங்கி அதற்குப் பத்தாண்டுகள்
முன்பு, அதாவது n minus 10th ஆண்டில் மேற்கொண்ட
கடன் வழங்கும் செயல்பாடுகளே காரணம் ஆகும்.
10) குரோனி முதலாளித்துவம் இருந்தால் மட்டுமே
கார்ப்பொரேட் வங்கிகள் நிலைக்க முடியும்.
2014க்குப் பின் இந்தியாவில் குரோனி முதலாளிகளின்
ஆதிக்கம் இல்லாமல் போய்விட்டது. GST உள்ளிட்ட
சட்ட திட்டங்கள் வந்து விட்டன. எந்த ஒரு நிதிச்
செயல்பாடும் ஆவணப் படுத்தப் படுகிறது. இந்தச்
சூழலில் குரோனி முதலாளித்துவம் வளர
வாய்ப்பில்லை. அன்று நிலவிய பொருளியல் சூழலை
ரகுராம் ராஜன் (Ex RBI GOVERNOR) irrational exuberance
என்கிறார். அவர் கூறிய irrational exuberance என்று
இன்று நிலவவில்லை. 2014க்குப் பின் நிலவவில்லை.
11) கடந்த காலத்தில் யெஸ் வங்கியைப் போன்றே
பல வங்கிகள் சுமார் 10க்கும் மேற்பட்டவை
திவாலாகும் அளவுக்கு நெருக்கடிக்கு இலக்காகின.
அவை அனைத்தையும் அன்றைய காங்கிரஸ் ஆட்சி
காப்பாற்றியது.
12) அதே போல, யெஸ் வங்கியையும் இன்றைய
மோடி அரசு காப்பாற்றுகிறது. வங்கித் தொழில் குறித்த
இந்திய ஆளும் வர்க்கத்தின் கொள்கையை காங்கிரசும்
சரி, பாஜகவும் சரி, பிறழாமல் கடைப்பிடிக்கின்றன.
13) யெஸ் வங்கியின் நெருக்கடி குறித்து குட்டி
முதலாளித்துவம் அதீதமாக அலட்டிக் கொள்கிறது.
இது பெரும் மூடத்தனம் ஆகும்.இந்த அலட்டல்
தேவையில்லை. பொருளுற்பத்தியில் இருந்து
முற்றிலுமாகத் துண்டித்துக் கொண்டு, சமூகத்தின்
பொருளுற்பத்தி பற்றிய எந்த அறிவும் இல்லாத
குட்டி முதலாளித்துவம் யெஸ் வங்கிக்காகக்
கண்ணீர் சிந்த வேண்டியதில்லை.
14) யெஸ் வங்கிக்கு ஒரு நெருக்கடி ஏற்பட்டு இருப்பதால்
வானமே இடிந்து விழுந்து விட்டது போன்ற பாவனையைச்
செய்து கொண்டு, குட்டி முதலாளித்துவம் ஒப்பாரி
வைக்கத் தேவையில்லை.
15) இந்திய வங்கிகளுக்கு நெருக்கடி வரும்போதெல்லாம்
Acquisition, Amalgamation, merger ஆகிய நடைமுறைகள்
மூலம் வங்கிகள் பாதுகாக்கப் படுகின்றன.
16) தற்போது யெஸ் வங்கியை ஸ்டேட் வங்கி take over
செய்துள்ளது. அதன் 49 சதப் பங்குகள் தற்போது
ஸ்டேட் வங்கியின் வசம். டெலிகாம் துறையில்
நஷ்டம் அடைந்து வந்த MTNL நிறுவனத்தை BSNL
நிறுவனம் ஏற்றுக் கொண்டது போன்றது இது.
17) ஒட்டு மொத்தப் பொருளுற்பத்தியில் இருந்து
துண்டித்துக் கொண்டு, யெஸ் வங்கியை மட்டும்
தனித்து எடுத்துக் கொண்டு பார்ப்பதும், யெஸ்
வங்கியின் சரிவு என்பது ஏதோ சில தனிநபர்களின்
தவறு என்பது போல் பார்ப்பதும் அறிவியலுக்கு எதிரானது.
18) ராணா கபூரும் அவரால் பயன்பெற்ற சில
கார்ப்போர்ட் முதலாளிகளும் சந்தேகத்துக்கு இடமின்றி
குற்றவாளிகளே. ஆனால் இவர்களைக் கைகாட்டி
விட்டு, விஷயம் இவர்களோடு முடிந்து விட்டது
என்று படுத்துக் கிடப்பது பெரும் அறியாமை ஆகும்.
19) LPG கொள்கைகளுக்குப் பின், இந்தியச் சட்டங்கள்
திருத்தப் படவில்லை. தேவைக்கு ஏற்பப் புதிய
சட்டங்கள் இயற்றப் படவில்லை. திருச்சி இந்தியன்
வங்கியில் ரூ 100 கோடி மோசடி செய்த கே என் நேருவை
இந்தியச் சட்டம் என்ன செய்து விட்டது? நாளையே
அவர் மீண்டும் அமைச்சர் ஆவார்! இதுதான் இந்தியா!
20) Much ado about nothing என்பார் ஷேக்ஸ்பியர்.
யெஸ் வங்கி குறித்த பாமரத்தனமான ஒப்பாரி
ஷேக்ஸ்பியரை நினைவு படுத்துகிறது.ஒரு வங்கி
திவால் ஆவது வரவு எட்டணா செலவு பத்தணா
கதைதான். இதில் quantum mechanical fluctuation
எல்லாம் எதுவும் இல்லை.
21) யெஸ் வங்கி விவகாரம் சில கேள்விகளை
முன்வைக்கிறது. அது மட்டுமே யெஸ் வங்கி தரும்
படிப்பினை! இது தனிநபர் சார்ந்த விஷயம் அல்ல.
அ) வங்கித் தொழிலில் அன்று நிலவிய irrational
exuberance ஏன் இன்று நிலவவில்லை?
ஆ) 2004-2014ல் பொற்காலத்தைச் சந்தித்த குரோனி
முதலாளித்துவம் ஏன் இன்று முடங்கிக் கிடக்கிறது?
இக்கேள்விகளுக்கான விடைதான் யெஸ் வங்கியின்
நெருக்கடிக்கான விடை! இதைத்தவிர வேறு எதைப்
பற்றிப் பேசுவதும் வீண்!
-----------------------------------------------------------------
பின்குறிப்பு:
யெஸ் வங்கியின் Assets என்ன, Liabilities என்ன என்று
தெரியாமலே, யெஸ் வங்கி குறித்து தொண்டை வறளக்
கூச்சலிடுவதால் எப்பயனும் விளையாது.
***********************************************

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக