அல்லாஹு அக்பர்! மார்க்சுஹு அக்பர்!
--------------------------------------------------------------
1) பில்கானவ்
கறாராகச் சொன்னால் மாமனிதன் எனப்படுபவன் துவங்கி வைப்பவன் தான் ஏனெனில் மற்றவர்களைவிட அவன் அதிக தூரம் பார்க்கிறான். அவர்களைவிட விஷயங்களை ஆர்வத்துடன் விரும்புகிறான். சமுதாயத்தின் அறிவு வளர்ச்சியின் போக்கில் முன்வைக்கப்படுகின்ற விஞ்ஞான பிரச்சனைகளுக்கு விடை அளிக்கிறான், சமுதாய உறவுகளின் முந்தைய வளர்ச்சியினால் படைக்கப்பட்ட சமுதாய தேவைகளை அவன் சுட்டிக் காட்டுகிறான், அந்த தேவைகளை பூர்த்தி செய்ய அவன் முயற்சி செய்கிறான்," வரலாற்றில் தனிநபர் வகைக்கும் பாத்திரம், பிளக் கா நவ்,
--------------------------------------------------------------
மகத்தான ரஷ்ய சோஷலிஸப் புரட்சியின் நூற்றாண்டு
(1917-2017) இனிதே கழிந்தது.ரஷ்யப் புரட்சியின் தாக்கத்தால்
இந்தியாவிலும் கம்யூனிஸ்ட் கட்சி 1925ல் உதயமானது.
அதன் வயது நூறை நெருங்கிக் கொண்டிருக்கிறது.
இந்திய அரசியல் வானில் வசந்தத்தின் இடி முழக்கமாக
1969ல் தோன்றிய நக்சல்பாரி ஆயுதப் பேரெழுச்சியும்
அரை நூற்றாண்டு காலத்தைக் கடந்து நிற்கிறது.
எனில் கம்யூனிசத்தின் வயதுதான் என்ன? அதாவது
மார்க்சியத்தின் வயது என்ன? மார்க்சும் எங்கல்சும் இணைந்து
1848ல் 'கம்யூனிஸ்ட் அறிக்கை'யை எழுதி வெளியிட்டனர்.
கம்யூனிஸ்ட் அறிக்கை வெளியிடப்பட்ட ஆண்டான 1848ஐ
மார்க்சியத்தின் தொடக்கமாகக் கருதுவதே சாலப்
பொருத்தம் உடையதாகும்.
1848க்கு முன்பே மார்க்சும் எங்கல்சும் இணைந்து சில நூல்களை
எழுதி உள்ளனர். 1844ல் இருவரும் எழுதி 1845ல் வெளியான
புனிதக் குடும்பம் என்ற நூலும், 1846ல் இருவரும் எழுதிய
ஜெர்மன் சித்தாந்தம் என்ற நூலும் குறிப்பிடத் தக்கவை.
எனினும் இவை பிரதானமாக பொருள்முதல்வாதம்
சார்ந்த நூல்கள். கம்யூனிசத்தை அதிகாரபூர்வமாக
பிரகடனம் செய்த உலகின் முதல் நூல் மார்க்சும் எங்கல்சும்
எழுதிய கம்யூனிஸ்ட் அறிக்கையே ஆகும்.
உலகம் முழுவதும் உள்ள கம்யூனிஸ்ட் கட்சிகளின் பொது
வேலைத்திட்டத்தை மார்க்ஸ் எங்கல்சின் கம்யூனிஸ்ட் அறிக்கை வழங்குகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக